இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி | அலகு 6 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 8th Social Science : History : Chapter 6 : Development of Industries in India

   Posted On :  17.08.2023 05:25 am

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 6 : இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி

வினா விடை

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 6 : இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

மதிப்பீடு

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

 

1. பின்வருவனவற்றில்  மக்களின் எந்த செயல்பாடுகள் கைவினைகளில் சாராதவை?

அ) கல்லிருந்து சிலையைச் செதுக்குதல்

ஆ) கண்ணாடி வளையல் உருவாக்குதல்

இ) பட்டு சேலை நெய்தல்

ஈ) இரும்பை உருக்குதல்

[விடை : ஈ) இரும்பை உருக்குதல்]

 

2. ---------------------தொழில் இந்தியாவின் பழமையான தொழிலாகும்.

அ) நெசவு

ஆ) எஃகு

இ) மின் சக்தி

ஈ) உரங்கள்

[விடை : அ) நெசவு]

 

3. கம்பளி மற்றும் தோல் தொழிற்சாலைகள் காணப்படும் முக்கிய இடம் ------

அ) பம்பாய்

ஆ) அகமதாபாத்

இ) கான்பூர்

ஈ) டாக்கா

[விடை : இ) கான்பூர்]

 

4. இந்தியாவின் முதல், மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களின் முக்கிய நோக்கமாக இருந்தது என்ன?

அ) மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துதல்

ஆ) எழுத்தறிவின்மையைக் குறைத்தல்

இ) வலுவான தொழிற்துறை தளத்தை உருவாக்குதல்

ஈ) பெண்களுக்கு அதிகாரமளித்தல்

[விடை : இ) வலுவான தொழிற்துறை தளத்தை உருவாக்குதல்]

 

5. இந்தியாவில் தொழில்மயம் அழிதலுக்கு காரணம் அல்லாதது எது?

அ) ஆட்சியாளர்களின் ஆதரவின்மை

ஆ) இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் போட்டி

இ) இந்தியாவின் தொழிற்துறை கொள்கை

ஈ) பிரிட்டிஷாரின் வர்த்தக கொள்கை

[விடை : இ) இந்தியாவின் தொழிற்துறை கொள்கை]

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

 

1. கைவினைப் பொருட்கள் இந்திய மக்களின் வாழ்க்கையில் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது.

2. தொழிற்புரட்சி நடைபெற்ற இடம் இங்கிலாந்து

3. அஸ்ஸாம் தேயிலை தோற்ற

க்கப்பட்ட நிறுவனம் ஆண்டு 1839

4. கொல்கத்தா அருகிலுள்ள ஹூக்ளி பள்ளத்தாக்கில் ரிஷ்ரா  இடத்தில் சணல் தொழிலகம் ஆரம்பிக்கப்பட்டது.

5. சூயஸ் கால்வாய் திறப்பு ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே தூரத்தை குறைத்தது.

 

III பொருத்துக


1. தவர்னியர் - செல்வச் சுரண்டல் கோட்பாடு

2. டாக்கா - காகித ஆலை

3. தாதாபாய் நௌரோஜி - கைவினைஞர்

4. பாலிகன்ஜ் - மஸ்லின் துணி

5. ஸ்மித் - பிரெஞ்சு பயணி

 

விடைகள்

1. தவர்னியர் - பிரெஞ்சு பயணி

2. டாக்கா - மஸ்லின் துணி

3. தாதாபாய் நௌரோஜி - செல்வச் சுரண்டல் கோட்பாடு

4. பாலிகன்ஜ் - காகித ஆலை

5. ஸ்மித் - கைவினைஞர்

 

IV சரியா / தவறா எனக் குறிப்பிடுக


1. இந்தியா பருத்தி மற்றும் பட்டுத் துணிகளுக்கு புகழ்வாய்ந்தது. விடை: சரி

2. இந்தியாவில் ஆங்கிலேயர்களால் இரயில்வே அறிமுகப்படுத்தப்பட்டது. விடை: சரி

3. நவீன முறையில் முதன்முதலாக இரும்பு ஜாம்ஷெட்பூரில் உற்பத்தி செய்யப்பட்டது. விடை: தவறு

4. 1948 ஆம் ஆண்டு தொழிலக கொள்கையானது கலப்பு பொருளாதாரத்தை கொண்டு வந்தது. விடை: தவறு

5. பத்தாவது மற்றும் பதினொன்றாவது ஐந்தாண்டு திட்டம் தீவிர வேளாண்மை உற்பத்தி வளர்ச்சிக்குச் சான்றாக உள்ளது. விடை: தவறு

 

V சரியான கூற்றை கண்டுபிடி

 

1. பின்வருவனவற்றில் சரியானவைகளை தேர்ந்தெடுத்துக் குறியிடவும்.

i. எட்வர்ட் பெய்ன்ஸ் கருத்துப்படி 'பருத்தி உற்பத்தியின் பிறப்பிடம் இங்கிலாந்து'.

ii. இயந்திரமயமாக்கப்பட்ட தொழிற்சாலைக்கு முன்னால் இந்தியாவில் கிராம கைவினை தொழில் இரண்டாவது பெரிய தொழிற்சாலையாக அமைந்தது.

iii. சௌராஷ்டிரா தகர தொழிற்சாலைக்கு பெயர் பெற்றது.

iv. சூயஸ் கால்வாய் கட்டப்பட்டதால் இந்தியாவில் பிரிட்டிஷாரின் பொருட்கள் மலிவாக கிடைக்க வழிவகை உருவானது.

அ) (i) மற்றும் (ii) சரி

ஆ) (ii) மற்றும் (iv) சரி

இ) (iii) மற்றும் (iv) சரி

ஈ) (i), (ii) மற்றும் (iii) சரி

விடை:  ஆ) (ii) மற்றும் (iv) சரி

 

2. கூற்று: இந்திய கைவினைஞர்கள் பிரிட்டிஷாரின் காலனிய ஆதிக்கத்தில் நலிவுற்றனர்.

காரணம்: பிரிட்டிஷார் இந்தியாவை தனது மூலப்பொருள் தயாரிப்பாளராகவும் முடிவுற்ற பொருட்களுக்கான சந்தையாகவும் கருதினர். அ) கூற்று சரி. காரணம் கூற்றுக்கான விளக்கம்

ஆ) கூற்று சரி. ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை

இ) கூற்றும் காரணமும் சரி

ஈ) கூற்றும் காரணமும் தவறானவை

விடை:  அ) கூற்று சரி. காரணம் கூற்றுக்கான விளக்கம்

 

3. பின்வருவனவற்றுள் சரியாக பொருந்தாது ஒன்று எது?

அ) பெர்னியர் - ஷாஜகான்

ஆ) பருத்தி ஆலை - அகமதாபாத்

இ) TISCO - ஜாம்ஜெட்பூர்

ஈ) பொருளாதார தாரளமயமாக்கல் – 1980

விடை: ஈ) பொருளாதார தாரளமயமாக்கல் – 1980

 

VI. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளி

 

1. இந்தியாவின் பாரம்பரிய கைவினை பொருட்களின் தொழிற்சாலைகள் யாவை?

இந்தியாவின் பாரம்பரிய கைவினை பொருட்கள் தொழிற்சாலைகள் :

> நெசவு

> மரவேலை

> தந்தவேலை

> தோல்

> மதிப்புமிக்க கற்களை வெட்டுதல்

> வாசனை மரங்களில் வேலைபாடுகள் செய்தல்

> உலோக வேலை

> நகைகள் செய்தல்

 

2. செல்வச் சுரண்டல் கோட்பாடு பற்றி எழுதுக

செல்வச் சுரண்டல் கோட்பாடு : தாதாபாய் நௌரோஜி. “ஆங்கிலேயர்கள் இந்தியாவின் வளங்களை சுரண்டுவதும் இந்தியாவின் செல்வங்களை பிரிட்டனுக்கு கொண்டு செல்வதுமே இந்திய மக்களின் வறுமைக்கு காரணம் என்பதை முதலில் ஏற்றுக் கொண்டவர்

 

3. பெரிய அளவில் நெசவு உற்பத்திக்கு பயன்படுத்திய கண்டுபிடிப்புகளின் பெயர்களை எழுது.

பெரிய அளவில் நெசவு உற்பத்திக்கு பயன்படுத்திய கண்டுபிடிப்புகள் :

> காட்டன் ஜின்

> பறக்கும் எறிநாடா

> நூற்கும் ஜென்னி

> நீராவி இயந்திரம்

 

4. இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு (CII) பற்றி சிறுகுறிப்பு எழுதுக.

இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு (CII) :

> இந்தியாவில் உள்ள ஒரு வணிக சங்கம். CII ஓர் அரசு சாரா, இலாப நோக்கமற்ற, தொழிற்துறை வழி நடத்துதல் மற்றும் தொழிற்துறையை நிர்வாகிக்கும் அமைப்பு.

> 1985ல் நிறுவப்பட்டது. தனியார் மற்றும் பொதுத்துறைகளை உள்ளடக்கிய SME மற்றும் MNC (சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள்) ஆகியவற்றிலிருந்து சுமார் 9000 உறுப்பினர்கள் உள்ளனர்.

 

5. தொழில்மயம் அழிதல் என்றால் என்ன?

தொழில்மயம் அழிதல் :

> பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் இந்தியத் தொழிற்துறையானது வீழ்ச்சியின் காலத்தைச் சந்தித்தது.

> பாரம்பரிய இந்திய கைவினைத் தொழிலுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்பாடு மற்றும் வருமானத்தின் வீழ்ச்சி ஆகியன தொழில்மயமழிதல் எனப்படுகிறது.

 

VII விரிவான விடையளி

 

1. இந்தியத் தொழில்மயம் அழிதலுக்கு பிரிட்டிஷாரின் வர்த்தகக் கொள்கை எவ்வாறு காரணமானது?

இந்திய தொழில்மயம் அழிதலுக்கு காரணமான பிரிட்டிஷாரின் வர்த்தகக் கொள்கை :

இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட அனைத்து கொள்கைகளும் இந்திய உள்நாட்டு தொழில்களின் மீது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.

> கிழக்கிந்தியக் கம்பெனியால் பின்பற்றப்பட்ட தடையில்லா வாணிபக் கொள்கை, இந்திய வர்த்தகர்கள் தங்கள் கொருட்களை சந்தை விலைக்கு குறைவாக விற்க கட்டாயப்படுத்தியது. பல கைவினைஞர்கள் தங்கள் மூதாதையர்களிடம் இருந்து - கற்றுக் கொண்ட கைவினைத் திறமைகளை கைவிடவும் கட்டாயப்படுத்தியது.

> கிழக்கிந்தியக் கம்பெனியின் நோக்கம் மலிவான விலையில் இந்திய தயாரிப்பு பொருட்களை பெருமளவுக்கு வாங்கி மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு பெரும் லாபத்திற்கு விற்க வேண்டும் என்பதாகும். இது இந்திய பாரம்பரிய தொழில்களை வெகுவாக பாதித்தது.

> இந்தியாவின் வர்த்தக நலன்களுக்கெதிரான பாதுகாப்பு கட்டணங்களின். கொள்கையை ஆங்கிலேயர்கள் பின்பற்றினர். பிரிட்டனில் இந்தியப் பொருட்களுக்கு கடுமையான வரி விதிக்கப்பட்டன. இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட ஆங்கிலப் பொருட்களுக்கு பெயரளவில் வரி விதிக்கப்பட்டன.

 

2. தோட்டத் தொழில்கள் பற்றி விரிவாக எழுதுக?

தோட்டத் தொழில்கள் :

> தோட்டத் தொழில் ஆரம்பத்திலேயே தொடங்கப்பட்டது. தோட்டத் தொழில் முதன் முதலில் ஐரோப்பியர்களை ஈர்த்தது. பெரிய அளவில் வேலைகளை வழங்க முடிந்தது. பிரிட்டிஷ் சமுதாயத்தால் அதிகரித்து வரும் தேநீர், காபி மற்றும் கருநீலச் சாயம் (இண்டிகோ) ஆகியவற்றின் தேவைகளை பூர்த்தி செய்ய முடிந்தது.

> அஸ்ஸாம் தேயிலை நிறுவனம் 1839 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அதே நேரத்தில் காபி தோட்டமும் தொடங்கப்பட்டது. தேயிலைத் தோட்டம் கிழக்கிந்தியப் பகுதிகளில் மிக முக்கியமான தொழிலாக இருந்தது போல காபி தோட்டமும் தென்னிந்தியாவின் நடவடிக்கைகளிள் மையமாக மாறியது.

> மூன்றாவது முக்கிய தோட்டத் தொழிலான சணல் பல தொழிற்சாலைகள் உருவாக வழிவகுத்தது. பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஊழியர்கள் பலரால் இந்தத் தொழில்கள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்டன.

 

3. 1991 ஆம் ஆண்டு சீர்திருத்தங்களுக்குப் பிறகு தொழிற்துறையின் வளர்ச்சியை விளக்குக?

1991 சீர்திருத்தங்களுக்குப் பிறகு தொழிற்துறையின் வளர்ச்சி :

> 1991 ஆம் ஆண்டு பொருளாதார தாராளமயமாக்கல் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியது. தொழிற் துறையின் செயல்திறனை மேம்படுத்த இந்தியா ஒரு முக்கியமான முடிவை எடுத்தது.

> 10வது மற்றும் 11வது ஐந்தாண்டுத் திட்டங்கள் தொழிற்துறை உற்பத்தியில் உயர் வளர்ச்சி விகிதத்தைக் கண்டன.

> தொழிற்துறை உரிமத்தை ஒழித்தல், விலைக்கட்டுப்பாடுகளை நீக்குதல், சிறு தொழில்களுக்கான கொள்கைகளை நீர்த்து போகச் செய்தல் மற்றும் ஏகபோக சட்டத்தின் மாயயை ஒழித்தல் ஆகியவை இந்தியத் தொழிற்துறை செழிக்க உதவியது.

> புதிய பொருளாதார கொள்கை வெளிநாட்டு முதலீடுகளை வரவேற்கிறது.

 

 

VIII உயர் சிந்தனை வினா

1. எவ்வாறு கைவினைப்பொருட்களும், இயந்திர தயாரிப்புப் பொருட்களும் வேறுபடுகின்றன.


 

IX பின்வரும் இடங்களை இந்திய வரைபடத்தில் குறிக்கவும்


1. பம்பாய்

2. கல்கத்தா

3. டாக்கா

4. ஜாம்ஷெட்பூர்

5. ரிஷ்ரா

6. அகமதாபாத்

7. கான்பூர்

8. குல்டி

9. புது டெல்லி

10. அஸ்ஸாம்

 

X செயல்திட்டம் மற்றும் செயல்பாடுகள்


1. உனது மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளின் பெயர்களை எழுதி வேளாண்மை தொழிற்சாலை மற்றும் வனப்பொருட்கள் தொழிற்சாலை ஆகியவைகளை வகைப்படுத்தவும்.


2. தொழிலக முன்னேற்றத்தால் காற்று, நீர், நிலம் ஆகியவை எவ்வாறு மாசுபடுகிறது என்பதை திட்ட செயல்முறை மூலம் தயாரிக்கவும்.

3. விளக்க காட்சியின் மூலம் இந்தியாவின் தொழிலக வளர்ச்சியினால் ஏற்படும் முக்கிய அம்சங்களை முன்னிலைப்படுத்தவும்.

Tags : Development of Industries in India | Chapter 6 | History | 8th Social Science இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி | அலகு 6 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : History : Chapter 6 : Development of Industries in India : Questions with Answers Development of Industries in India | Chapter 6 | History | 8th Social Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 6 : இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி : வினா விடை - இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி | அலகு 6 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 6 : இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி