Home | 8 ஆம் வகுப்பு | 8வது சமூக அறிவியல் | நவீனமயமாக்கல், தற்சார்புடைமை

இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி | அலகு 6 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - நவீனமயமாக்கல், தற்சார்புடைமை | 8th Social Science : History : Chapter 6 : Development of Industries in India

   Posted On :  17.08.2023 05:25 am

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 6 : இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி

நவீனமயமாக்கல், தற்சார்புடைமை

இந்தியா தற்போது பல்வேறு வகையான இயல்பினைக் கொண்ட பொருட்களை உற்பத்தி செய்வதே அதிக அளவு நவீனமயமாக்கலைக் காட்டுகிறது

நவீனமயமாக்கல்

இந்தியா தற்போது பல்வேறு வகையான இயல்பினைக் கொண்ட பொருட்களை உற்பத்தி செய்வதே அதிக அளவு நவீனமயமாக்கலைக் காட்டுகிறது. சில நவீன தொழில்கள் உண்மையில் வளர்ச்சி அடைந்து வெளி உலகத்துடன் திறம்பட போட்டியிடுகின்றன. இது வெளிநாட்டு நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களைச் சார்ந்து இருப்பதை பெரிதும் குறைத்துள்ளது. மாறாக, ஒப்பீட்டளவில் குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளுக்குப் பயிற்சி பெற்ற பணியாளர்களை இந்தியா அனுப்புகிறது.

தகவல் தொழில்நுட்பம் என்ற சொல் மென்பொருளுடன் கணினி மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தையும் உள்ளடக்கியது ஆகும். முதல்நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலைத் தொழில்களுடன் நான்காம் தொழிற்துறையாக தகவல் தொடர்பான தொழில்கள் உருவாகியுள்ளது. அறிவு சார்ந்த பொருளாதாரமானது இயந்திரமயமான உழைப்பாளரின் தீவிர உற்பத்தி மற்றும் சேவை நடவடிக்கைகள், சுகாதாரம், தொலை தூர கல்வி, மென்பொருள் உற்பத்தி மற்றும் பல்லூடகம் (மல்டி மீடியா), பொழுதுபோக்கு ஆகியவை புதிய சேவை தொழில்களின் வளர்ச்சியைச் சித்தரிக்கின்றது.

 

தற்சார்புடைமை

தற்சார்பு இலக்கை அடைந்திருப்பது தொழிற்துறை வளர்ச்சியின் மற்றொரு சாதகமான அம்சமாகும். இயந்திரங்கள், ஆலைகள் மற்றும் இதர தளவாடங்கள் உற்பத்தியில் நாம் தற்சார்பினை அடைந்துள்ளோம். தற்போது, தொழிற்துறை மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு தேவையான தளவாடங்களின் பெரும்பகுதி இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தியாவின் சாலைப் போக்குவரத்தானது உலகின் மிகப்பெரிய போக்குவரத்துகளுள் ஒன்றாகும். அரசாங்கத்தின் முயற்சிகளானது, தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய மாவட்ட சாலைகளின் அமைப்பினை விரிவாக்க வழிவகுத்தன. இது தொழிற்துறை வளர்ச்சிக்கு நேரடியான பங்களிப்பை அளித்தது.

இந்தியாவிற்கு அதன் வளர்ச்சி இயந்திரத்தை இயக்க சக்தி தேவைப்படுவதால் ஆற்றல் கிடைப்பதற்கான குறிப்பிடத்தக்க முயற்சிகளைத் தூண்டிவிட்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பின்னர் ஏறக்குறைய எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா மின்சார உற்பத்தியில் ஆசியநாடுகளில் மூன்றாவது மிகப் பெரிய நாடாக உருவாகியுள்ளது.


Tags : Development of Industries in India | Chapter 6 | History | 8th Social Science இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி | அலகு 6 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : History : Chapter 6 : Development of Industries in India : Modernisation, Self-Reliance Development of Industries in India | Chapter 6 | History | 8th Social Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 6 : இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி : நவீனமயமாக்கல், தற்சார்புடைமை - இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி | அலகு 6 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 6 : இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி