LC அலைவுகளில் ஆற்றல் மாறா நிலை
LC சுற்றுகளில் நடைபெறும் LC அலைவுகளின் போது
அமைப்பின் ஆற்றலானது, மின்தேக்கியின் மின்புலம் மற்றும் மின் தூண்டியின் காந்தப்புலம்
இடையே அலைவுறுகிறது. இந்த இரு ஆற்றல் வடிவங்களும் நேரத்தைப் பொருத்து மாறினாலும் மொத்த
ஆற்றல் மாறாமல் உள்ளது. அதன் பொருள், ஆற்றல் மாறா விதிக்கு ஏற்ப LC அலைவுகள் நடைபெறுகின்றன
என்பதாகும்.
LC அலைவுகளின் போது 3 வேறுபட்ட நிலைகளைக் கருதுவோம்
மற்றும் அமைப்பின் மொத்த ஆற்றலைக் கணக்கிடுவோம்.
நேர்வு (i)
மின்தேக்கியின் மின்னூட்டம் q = Qm மற்றும் மின் தூண்டியின் வழியே செல்லும்
மின்னோட்டம் i = 0 எனும் போது, மொத்த ஆற்றலானது
இங்கு மொத்த ஆற்றல் முழுவதும் மின் ஆற்றலாக
உள்ளது.
நேர்வு (ii) மின்னூட்டம் = 0; மின்னோட்டம்
= Im எனும் போது, மொத்த ஆற்றலானது
இங்கு மொத்த ஆற்றல் முழுவதும் காந்த ஆற்றலாக
உள்ளது.
நேர்வு (iii) மின்னூட்டம் = q; மின்னோட்டம்
= i எனும் போது, மொத்த ஆற்றலானது
இங்கு மின்னூட்டத்தில்
உள்ள எதிர்குறியானது, நேரத்தைச் சார்ந்து மின்தேக்கியில் உள்ள மின்னூட்டம் குறைவதைக்
காட்டுகிறது. எனவே
மேற்கண்ட மூன்று நேர்வுகளில் இருந்து, அமைப்பின்
மொத்த ஆற்றல் மாறாமல் உள்ளது என்பது தெளிவாகிறது.