சமூக நீதி - பாகுபாடு - சமூக அடிப்படைக் கோட்பாடு | 11th Political Science : Chapter 12 : Social Justice
பாகுபாடு - சமூக அடிப்படைக் கோட்பாடு
மனிதர்கள் தாங்கள் சார்ந்துள்ள குழுவின் உறுப்பாகத் தம்மை அடையாளம் காண்கின்றனர். தமது குழுவைச் சார்ந்தவர்கள் எவ்வளவுதான் புகழ்ந்தாலும் தமது குழுவைச் சார்ந்து இருப்பதையே கவுரவமாகவும் ஆற்றல் மிக்கதாகவும் கருதுவர். பாகுபாடு என்பது ஒருவர் தாம் சார்ந்த குழுவின் உறுப்பினர் என்ற அடிப்படையை இல்லாமலாக்குவது அல்லது இயற்கை மூல வளங்களை அணுகுவதில் இருந்து தடுப்பது. மேலும், இதில் செல்வம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒரு குழுவில் ஒருவரின் தகுதி அல்லது சுய - மரியாதையை உருவாக்குவதில் மறைமுகமான ஊக்கம் அவரது செல்வத்தால் ஏற்படுகிறது என்று பாகுபாடு எனும் புறக்கணிப்பு அல்லது ஒதுக்கல் குறித்து சமூக - உளவியலாளர்கள் மதிப்பிடுகிறார்கள். இதை சமூக - அடையாளக் கோட்பாடு எனலாம்.
குறைவான சமூக ஏற்பு அளிக்கப்படும் மனிதர்கள் வெளிக்குழுவினர் போல மதிப்பிழப்பதாகவும் சமத்துவமின்மை அடிப்படையில் அத்தகைய மனிதர்கள் எதிரிகளாகப் பார்க்கப்படுவதாகவும் தொடக்க்கட்ட ஆய்வுகள் உறிதிப்படுத்துகின்றன. வேறுபட்ட குழுவினர் (இன, மத சிறுபான்மையினர், பெண்கள், இயலாமையில் இருப்பவர்கள், வீடற்றவர்கள்) மீது காட்டப்படும் எதிர்மறை அணுகுமுறைகள் ஒன்றுடன் ஒன்று வலுவான தொடர்புகளைக் கொண்டுள்ளன.