அரசியல் அறிவியல் - பகிர்ந்தளிக்கும் நீதி, மற்றும் தண்டிக்கும் நீதி | 11th Political Science : Chapter 12 : Social Justice
பகிர்ந்தளிக்கும் நீதி, மற்றும் தண்டிக்கும் நீதி
நீதி என்ற கோட்பாட்டை படிக்கும் போது வளங்களை எவ்வாறு சமூகத்தில் உள்ள அனைவருக்கும் வழங்கவேண்டும் என்ற பொருள் விளங்கும். நீதி பற்றிய கருத்தை முழுமையாக புரிந்து கொள்வதற்கு இதில் உள்ள முக்கியமான கருத்துக்கள் மற்றும் பிரச்சனைகளை அறிய வேண்டும். அனைவருக்கும் சமமான வளங்கள் பெறுவதற்கு பொது உரிமையாளர் கோட்பாடு, உரிமை கோட்பாடு போன்றவைகள் நீதி என்ற விவாதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது வளங்களின் விநியோகம் நியாயமான முறையில் இருக்கவேண்டும் என கூறுகிறது. ஒவ்வொரு மனிதனும் சமமான வளங்களை கொண்டிருந்தால் அது நீதியாகும். வழங்கப்பட்ட ஒரு பணிக்கு அனைவரும் சமமான ஊதியத்தையோ அல்லது வெகுமதியையோ பெறுவதே நீதியை பெறும் வழியாகும்.
ஆரம்ப நிலையில் ஒவ்வொரு மனிதனும் ஒரே அளவிலான நிலங்கள் மற்றும் வளங்களை நியாயமான விநியோகத்தின் மூலம் பெற்றிருக்கவேண்டும். இது தனி மனித முன்னுரிமையிலும் மற்றும் திறமையிலும் வேறுபாடின்றியும் இருக்கவேண்டும் என்பதை தெளிவாகக் கூறுகின்றது.
நிலம் மற்றும் பிற வளங்கள் வழங்கப்படுவதை வரலாற்று ரீதியாக நியாயப்படுத்த வேண்டும், என நியாயமான விநியோகம் விளக்குகிறது. தனிமனிதன் நிலம், மற்றும் பிற வளங்களுக்கு ஒருபோதும் உரிமையாளராக இல்லாத போது தானாகவே வளங்களும், நிலங்களும் அவர்களுக்கு மாறவேண்டும். அவ்வாறு வளங்கள் அவர்களுக்கு மாறுவது முற்றிலும் தானாகவே அமையவேண்டும். மனிதனின் திறமை மற்றும் வளங்கள் இந்த இரண்டுமே முக்கிய கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகின்றன. வளங்கள் என்றால் உதாரணமாக நிலமும், மனிதனின் அறிவு எனவும், கோட்பாடுகளில் மனிதனின் திறமை முக்கிய பங்காற்றுகிறது.
சமூகத்தில் நீதி நிலைக்க வேண்டுமானால் நீதி தண்டிப்பை விட நியாயமான நீதி விநியோகம் இருந்தால் மட்டுமே தீர்வு என்ற பெரும் கருத்தொற்றுமை உருவானது, நாம் எவ்வாறு தண்டிக்கும் நீதியை விளக்கப்போகின்றோம்?
தண்டிக்கும் நீதியை சில விதிகளை பின்பற்றுவதன் மூலம் ஒருவர் அறிந்து கொள்ளலாம்.
❖ தவறான செயல்களை செய்தவர்கள், கடும் குற்றம் இழைத்தவர்கள், அவர்களின் குற்றத்திற்கான சரியான தண்டனை பெற வேண்டும்.
❖ சட்டப்படி தண்டிக்கும் அதிகாரம் பெற்றுள்ள ஒருவரால் குற்றவாளிக்கு, அவரின் குற்றத்திற்கு ஏற்ற தண்டனையை வழங்குவதே தார்மீக அடிப்படையில் சரியானதாகும்.
❖ இது வேண்டுமென்றே அப்பாவிகளை தண்டிப்பதை ஊக்குவிப்பதில்லை. மேலும் குற்றவாளிகளுக்கு அவர்கள் இழைத்த குற்றத்தை விட அதிகமான தண்டனை வழங்குவதையும் இது கண்டிக்கிறது.
தண்டிக்கும் நீதி எனும் கருத்தாக்கமானது நீதி மற்றும் தண்டனை கோட்பாட்டை உண்டாக்குவதில் முக்கிய பங்காற்றினாலும், இதன் முக்கிய அம்சங்களான விகிதாச்சார தண்டனை, துன்பத்தின் இயல்பு நிலை மற்றும் தண்டனையை நியாயப்படுத்துதல் போன்றவை சர்ச்சைக்குரியதாகவே உள்ளன.
நம்முடைய அரசமைப்பு தண்டிக்கும் நீதியை முற்றிலுமாக நிராகரித்துள்ளது. நம் அரசமைப்பு சிற்பிகள் வன்முறை வழிகள் அமைதியை யோ அல்லது பிரச்சனைகளுக்கான தீர்வையோ கொண்டு வராது, நிலையான நீதியை வழங்காது என்று உறுதியாக நம்பினர்.