கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | கணக்கு - பயிற்சி 2.2 : அடிப்படை எண்ணியல் தேற்றம் | 10th Mathematics : UNIT 2 : Numbers and Sequences
பயிற்சி 2.2
1. n ஒர் இயல் எண் எனில், எந்த n மதிப்புகளுக்கு 4n ஆனது 6 என்ற இலக்கத்தைக் கொண்டு முடியும்?
2. m மற்றும் n இயல் எண்கள் எனில், எந்த m-யின் மதிப்புகளுக்கு 2n × 5m என்ற எண் 5 என்ற இலக்கத்தைக் கொண்டு முடியும்?
3. 252525 மற்றும் 363636 என்ற எண்களின் மீ.பொ.வ காண்க.
4. 13824 = 2a × 3b எனில், a மற்றும் b -யின் மதிப்புக் காண்க.
5. p1x1 × p2x2 × p3x3 × p4x4 = 113400 இங்கு, p1, p2, p3, p4, என்பன ஏறு வரிசையில் அமைந்த பகா எண்கள் மற்றும் x1, x2, x3, x4 என்பன முழுக்கள் எனில், p1, p2, p3, p4, மற்றும் x1, x2, x3, x4 ஆகியவற்றின் மதிப்புகளைக் காண்க.
6. அடிப்படை எண்ணியல் தேற்றத்தைப் பயன்படுத்தி 408 மற்றும் 170 என்ற எண்களின் மீ.பொ.ம மற்றும் மீ.பொ.வ காண்க.
7. 24,15,36 ஆகிய எண்களால் மீதியின்றி வகுபடும் மிகப்பெரிய ஆறிலக்க எண்ணைக் காண்க.
8. 35, 56 மற்றும் 91 ஆல் வகுக்கும் போது மீதி 7 ஐத் தரக்கூடிய மிகச்சிறிய எண் எது?
9. முதல் 10 இயல் எண்களால் மீதியின்றி வகுபடக்கூடிய சிறிய எண் எது?
விடைகள்:
1. இரட்டை எண்கள்
2. மதிப்பு இல்லை
3. 10101
4. 9, 3
5. 2,3,5,7 மற்றும் 3,4,2,1
6. 2040, 34
7. 999720
8. 3647
9. 2520