கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | கணக்கு - பயிற்சி 2.8 : பெருக்குத்தொடர் வரிசையின் முதல் n உறுப்புகளின் கூடுதல். (பெருக்குத்தொடர் வரிசை) | 10th Mathematics : UNIT 2 : Numbers and Sequences
பயிற்சி 2.8
1. பெருக்குத் தொடர்வரிசையில் முதல் n உறுப்புகளின் கூடுதல் காண்க.
(i) 5, - 3, 9/5 ,- 27/25 ,...
(ii) 256,64,16,…
2. 5, 15, 45, ... என்ற பெருக்குத் தொடர்வரிசையின் முதல் 6 உறுப்புகளின் கூடுதல் காண்க.
3. ஒரு பெருக்குத் தொடர்வரிசையின் பொது விகிதம் 5 மற்றும் முதல் 6 உறுப்புகளின் கூடுதல் 46872 எனில், அதன் முதல் உறுப்பைக் காண்க.
4. பின்வரும் முடிவுறா தொடர்களின் கூடுதல் காண்க.
(i) 9 + 3 + 1 + ...
(ii) 21 + 14 + 28/3 + ...
5. ஒரு முடிவுறா பெருக்குத் தொடரின் முதல் உறுப்பு 8 மற்றும் முடிவுறா உறுப்புகள் வரை கூடுதல் 32/3 எனில் அதன் பொது விகிதம் காண்க.
6. பின்வரும் தொடர்களின் n உறுப்புகள் வரை கூடுதல் காண்க
(i) 0.4 + 0.44 + 0.444 + … n உறுப்புகள் வரை
(ii) 3 + 33 + 333 + … n உறுப்புகள் வரை
7. 3 + 6 + 12 + ... + 1536 என்ற பெருக்குத் தொடரின் கூடுதல் காண்க.
8. குமார் தனது நான்கு நண்பர்களுக்கு கடிதம் எழுதுகிறார். மேலும் தனது நண்பர்களை அவர்கள் ஒவ்வொருவரும் நான்கு வெவ்வேறு நண்பர்களுக்குக் கடிதம் எழுதுமாறும் மற்றும் இந்தச் செயல்முறையைத் தொடருமாறும் கூறுகிறார். இந்தச் செயல்முறை தொடர்ச்சியாக நடைபெறுகின்றது. ஒரு கடிதத்திற்கான செலவு ₹2 எனில் 8 நிலைகள் வரை கடிதங்கள் அனுப்புவதற்கு ஆகும் மொத்தச் செலவைக் காண்க.
9. என்ற எண்ணின் விகிதமுறு வடிவம் காண்க.
10. Sn = (x + y) + (x2 + xy + y2) + (x3 + x2y + xy2 + y3) + ... n உறுப்புகள் வரை எனில் என நிறுவுக.