கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | கணக்கு - பயிற்சி 2.3 : மட்டு எண்கணிதம் | 10th Mathematics : UNIT 2 : Numbers and Sequences
பயிற்சி 2.3
1. பின்வரும் சமன்பாடுகளை நிறைவு செய்யக்கூடிய குறைந்தபட்ச மிகை முழு x-ன் மதிப்பைக் காண்க.
(i) 71 ≡ x (மட்டு 8)
(ii) 78 + x ≡ 3 (மட்டு 5)
(iii) 89 ≡ (x + 3) (மட்டு 4)
(iv) 96 ≡ x/7 (மட்டு 5)
(v) 5x ≡ 4 (மட்டு 6)
2. x ஆனது மட்டு 17 -யின் கீழ் 13 உடன் ஒருங்கிசைவாக உள்ளது எனில், 7x - 3 ஆனது எந்த எண்ணுடன் ஒருங்கிசைவாக இருக்கும்?
3. தீர்க்க 5 x ≡ 4 (மட்டு 6)
4. தீர்க்க 3 x - 2 ≡ 0 (மட்டு 11)
5. முற்பகல் 7 மணிக்கு 100 மணி நேரத்திற்குப் பிறகு நேரம் என்ன?
6. பிற்பகல் 11 மணிக்கு 15 மணி நேரத்திற்கு முன்பு நேரம் என்ன?
7. இன்று செவ்வாய் கிழமை, என்னுடைய மாமா 45 நாட்களுக்குப் பிறகு வருவதாகக் கூறியுள்ளார். என்னுடைய மாமா எந்தக் கிழமையில் வருவார்?
8. எந்த ஒரு மிகை முழு எண் n -ற்கும் 2n + 6 × 9n ஆனது 7 ஆல் வகுபடும் என நிறுவுக.
9. 281 ஐ 17 ஆல் வகுக்கும் போது கிடைக்கும் மீதி காண்க.
10. பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னையிலிருந்து லண்டன் செல்லப் பயணநேரம் தோராயமாக 11 மணிநேரம். விமானம் தனது பயணத்தை ஞாயிற்றுக்கிழமை 23:30 மணிக்குத் தொடங்கியது. சென்னையின் திட்ட நேரமானது லண்டனின் திட்ட நேரத்தைவிட 4.30 மணி நேரம் முன்னதாக இருக்குமெனில், விமானம் லண்டனில் தரையிறங்கும் நேரத்தைக் காண்க.
விடைகள்:
1.(i) 7 (ii) 5 (iii) 2 (iv) 7 (v) 2
2. 3
3. 2,8,14,…
4. 8, 19, 30, …
5. 11 மு.ப
6. 8 மு.ப
7. வெள்ளி
9. 2
10. 6 மு.ப, திங்கள்