கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் : வடிவியல் | முதல் பருவம் அலகு 5 | 7ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 5.3 (ஒரு கோட்டுத்துண்டின் செங்குத்து இரு சமவெட்டி வரைதல்) | 7th Maths : Term 1 Unit 5 : Geometry
பயிற்சி : 5.3
i) கீழே கொடுக்கப்பட்ட அளவுள்ள கோட்டுத்துண்டுகளை வரைக. மேலும், ஒவ்வொரு கோட்டுத் துண்டிற்கும், அளவுகோல் மற்றும் கவராயத்தைப் பயன்படுத்திச் செங்குத்து இரு சமவெட்டி வரைக.
(i) 8 செ.மீ
(ii) 7 செ.மீ
(iii) 5.6 செ.மீ
(iv) 10.4 செ.மீ
(v) 58 மி.மீ
(i) 8 செ.மீ
படி 1 : ஒரு நேர்கோட்டை வரைக. அதன் மீது A மற்றும் B என்ற புள்ளிகளை AB = 8 செ.மீ என்றவாறு குறிக்க
படி 2 : A வை மையமாகக் கொண்டு, AB ன் நீளத்தின் அரை பங்கைவிட அதிகமான ஆரமுடைய வட்டவிற்களை AB க்கு மேலாக ஒன்றும், கீழாக ஒன்றும் அமையுமாறு வரைக.
படி 3 : B ஐ மையமாகக் கொண்டு அதே அளவு ஆரத்துடன் கூடிய வட்ட விற்களைப் படி - 2 ல் வரைந்த வட்ட விற்களை வெட்டுமாறு வரைக. வெட்டும் புள்ளிகளுக்கு C மற்றும் D எனப் பெயரிடுக.
படி 4 : C மற்றும் D ஆகியவற்றை இணைக்கவும். CD ஆனது AB ஐ வெட்டும் புள்ளியை O எனக் குறிக்க.
CD ஆனது AB ன் செங்குத்து இருசமவெட்டி ஆகும்.
ii) 7 செ.மீ நீளமுள்ள EF என்ற கோட்டுத் துண்டிக்கு செங்குத்து இரு சமவெட்டியை வரைக.
படி 1 : ஒரு நேர்கோட்டை வரைக. அதன் மீது E மற்றும் F என்ற புள்ளிகளை EF = 7 செ.மீ என்றவாறு குறிக்க
படி 2 : E வை மையமாகக் கொண்டு, EF ன் நீளத்தின் அரை பங்கைவிட அதிகமான ஆரமுடைய வட்டவிற்களை EF க்கு மேலாக ஒன்றும், கீழாக ஒன்றும் அமையுமாறு வரைக
படி 3 : F ஐ மையமாகக் கொண்டு அதே அளவு ஆரத்துடன் கூடிய வட்ட விற்களைப் படி - 2 ல் வரைந்த வட்ட விற்களை வெட்டுமாறு வரைக. வெட்டும் புள்ளிகளுக்கு G மற்றும் H எனப் பெயரிடுக.
படி 4 : H மற்றும் G ஆகியவற்றை இணைக்கவும். GH ஆனது EF ஐ வெட்டும் புள்ளியை O எனக் குறிக்க.
GH ஆனது EF ன் செங்குத்து இருசமவெட்டி ஆகும்.
iii) 5.6 செ.மீ நீளமுள்ள PQ என்ற கோட்டுத் துண்டிக்கு செங்குத்து இரு சமவெட்டியை வரைக.
படி 1 : ஒரு நேர்கோட்டை வரைக. அதன் மீது P மற்றும் Q என்ற புள்ளிகளை PQ = 5.6 செ.மீ என்றவாறு குறிக்க
படி 2 : P வை மையமாகக் கொண்டு, PQ ன் நீளத்தின் அரை பங்கைவிட அதிகமான ஆரமுடைய வட்டவிற்களை PQ க்கு மேலாக ஒன்றும், கீழாக ஒன்றும் அமையுமாறு வரைக
படி 3 : Q ஐ மையமாகக் கொண்டு அதே அளவு ஆரத்துடன் கூடிய வட்ட விற்களைப் படி - 2 ல் வரைந்த வட்ட விற்களை வெட்டுமாறு வரைக. வெட்டும் புள்ளிகளுக்கு R மற்றும் S எனப் பெயரிடுக.
படி 4 : R மற்றும் S ஆகியவற்றை இணைக்கவும். RS ஆனது PQ ஐ வெட்டும் புள்ளியை O எனக் குறிக்க.
RS ஆனது PQ ன் செங்குத்து இருசமவெட்டி ஆகும்.
iv) 10.4 செ.மீ நீளமுள்ள JK என்ற கோட்டுத் துண்டிக்கு செங்குத்து இரு சமவெட்டியை வரைக.
படி 1 : ஒரு நேர்கோட்டை வரைக. அதன் மீது J மற்றும் K என்ற புள்ளிகளை JK = 10.4 செ.மீ என்றவாறு குறிக்க
படி 2 : J வை மையமாகக் கொண்டு, JK ன் நீளத்தின் அரை பங்கைவிட அதிகமான ஆரமுடைய வட்டவிற்களை JK க்கு மேலாக ஒன்றும், கீழாக ஒன்றும் அமையுமாறு வரைக
படி 3 : K ஐ மையமாகக் கொண்டு அதே அளவு ஆரத்துடன் கூடிய வட்ட விற்களைப் படி - 2 ல் வரைந்த வட்ட விற்களை வெட்டுமாறு வரைக. வெட்டும் புள்ளிகளுக்கு L மற்றும் M எனப் பெயரிடுக.
படி 4 : L மற்றும் M ஆகியவற்றை இணைக்கவும். LM ஆனது JK ஐ வெட்டும் புள்ளியை O எனக் குறிக்க.
LM ஆனது JK ன் செங்குத்து இருசமவெட்டி ஆகும்.
v) 5.8 செ.மீ நீளமுள்ள AB என்ற கோட்டுத் துண்டிக்கு செங்குத்து இரு சமவெட்டியை வரைக.
படி 1 : ஒரு நேர்கோட்டை வரைக. அதன் மீது A மற்றும் B என்ற புள்ளிகளை AB = 5.8 செ.மீ என்றவாறு குறிக்க
படி 2 : A வை மையமாகக் கொண்டு, AB ன் நீளத்தின் அரை பங்கைவிட அதிகமான ஆரமுடைய வட்டவிற்களை AB க்கு மேலாக ஒன்றும், கீழாக ஒன்றும் அமையுமாறு வரைக
படி 3 : B ஐ மையமாகக் கொண்டு அதே அளவு ஆரத்துடன் கூடிய வட்ட விற்களைப் படி - 2 ல் வரைந்த வட்ட விற்களை வெட்டுமாறு வரைக. வெட்டும் புள்ளிகளுக்கு C மற்றும் D எனப் பெயரிடுக.
படி 4 : C மற்றும் B ஆகியவற்றை இணைக்கவும். CD ஆனது AB ஐ வெட்டும் புள்ளியை O எனக் குறிக்க.
CD ஆனது AB ன் செங்குத்து இருசமவெட்டி ஆகும்.