கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் : வடிவியல் | முதல் பருவம் அலகு 5 | 7ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி : 5.4 (ஒரு கோணத்தின் கோண இருசமவெட்டி வரைதல்) | 7th Maths : Term 1 Unit 5 : Geometry
பயிற்சி : 5.4
பாகைமானியைப் பயன்படுத்திப் பின்வரும் கோணங்களை அமைத்து, அளவுகோல் மற்றும் கவராயத்தைப் பயன்படுத்தி ஒவ்வொன்றிற்கும் கோண இருசமவெட்டி வரைக.
i) 60°
ii) 100°
iii) 90°
iv) 48°
v) 110°
தீர்வு :
i) 60° அளவுடைய ∠ABC ன் கோண இருசமவெட்டி வரைக.
படி 1 : பாகைமானியைப் பயன்படுத்தி 60° அளவுள்ளவாறு கோணம் ∠ABC ஐ அமைக்க.
படி 2 : B ஐ மையமாகக் கொண்டு ஏதேனும் ஒரு ஆரமுடைய வட்டவில்லை ∠BAC ன் உட்பகுதியில் BA மற்றும் BC ஐ முறையே E மற்றும் F ல் வெட்டுமாறு வரைக.
படி 3 : E ஐ மையமாகக் கொண்டு அதே ஆரத்தில் ∠ABC ன் உட்பகுதியில் ஒரு வட்டவில் வரைக. இதே போல் F ஐ மையமாக கொண்டு முன்பு வரைந்த வட்டவில்லை வெட்டுமாறு மற்றொரு வட்டவில் வரைக.
படி 4 : வட்டவில்கள் வெட்டும் புள்ளியை G எனக் குறிக்க. கதிர் BG ஐ வரைக.
BG, ∠ABC ன் கோண இருசம வெட்டி ஆகும்.
ii) 100° அளவுடைய ∠ABC ன் கோண இருசமவெட்டி வரைக.
படி 1 : பாகைமானியைப் பயன்படுத்தி 100° அளவுள்ளவாறு கோணம் ∠ABC ஐ அமைக்க.
படி 2 : B ஐ மையமாகக் கொண்டு ஏதேனும் ஒரு ஆரமுடைய வட்டவில்லை ∠BEC ன் உட்பகுதியில் BA மற்றும் BC ஐ முறையே E மற்றும் F ல் வெட்டுமாறு வரைக.
படி 3 : E ஐ மையமாகக் கொண்டு அதே ஆரத்தில் ∠ABC ன் உட்பகுதியில் ஒரு வட்டவில் வரைக. இதே போல் F ஐ மையமாக கொண்டு முன்பு வரைந்த வட்டவில்லை வெட்டுமாறு மற்றொரு வட்டவில் வரைக.
படி 4 : வட்டவில்கள் வெட்டும் புள்ளியை G எனக் குறிக்க. கதிர் BG ஐ வரைக.
BG, ∠ABC ன் கோண இருசம வெட்டி ஆகும்.
iii) 90° அளவுடைய ∠ABC ன் கோண இருசமவெட்டி வரைக.
படி 1 : பாகைமானியைப் பயன்படுத்தி 90° அளவுள்ளவாறு கோணம் ∠ABC ஐ அமைக்க.
படி 2 : B ஐ மையமாகக் கொண்டு ஏதேனும் ஒரு ஆரமுடைய வட்டவில்லை ∠BAC ன் உட்பகுதியில் BA மற்றும் BC ஐ முறையே E மற்றும் F ல் வெட்டுமாறு வரைக.
படி 3 : E ஐ மையமாகக் கொண்டு அதே ஆரத்தில் ∠ABC ன் உட்பகுதியில் ஒரு வட்டவில் வரைக, இதே போல் F ஐ மையமாக கொண்டு முன்பு வரைந்த வட்டவில்லை வெட்டுமாறு மற்றொரு வட்டவில் வரைக
படி 4 : வட்டவில்கள் வெட்டும் புள்ளியை G எனக் குறிக்க. கதிர் BG ஐ வரைக.
BG, ∠ABC ன் கோண இருசம வெட்டி ஆகும்.
iv) 48° அளவுடைய ∠ABC ன் கோண இருசமவெட்டி வரைக.
படி 1 : பாகைமானியைப் பயன்படுத்தி 48° அளவுள்ளவாறு கோணம் ∠ABC ஐ அமைக்க.
படி 2 : B ஐ மையமாகக் கொண்டு ஏதேனும் ஒரு ஆரமுடைய வட்டவில்லை ∠BAC ன் உட்பகுதியில் BA மற்றும் BC ஐ முறையே E மற்றும் F ல் வெட்டுமாறு வரைக.
படி 3 : E ஐ மையமாகக் கொண்டு அதே ஆரத்தில் ∠ABC ன் உட்பகுதியில் ஒரு வட்டவில் வரைக. இதே போல் F ஐ மையமாக கொண்டு முன்பு வரைந்த வட்டவில்லை வெட்டுமாறு மற்றொரு வட்டவில் வரைக
படி 4 : வட்டவில்கள் வெட்டும் புள்ளியை G எனக் குறிக்க. கதிர் BG ஐ வரைக.
BG, ∠ABC ன் கோண இருசம வெட்டி ஆகும்.
v) 110° அளவுடைய ∠ABC ன் கோண இருசமவெட்டி வரைக.
படி 1 : பாகைமானியைப் பயன்படுத்தி 110° அளவுள்ளவாறு கோணம் ∠ABC ஐ அமைக்க.