Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணிதம் | முதல் வரிசை நேரியல் வகைக்கெழுச் சமன்பாடுகள் (First Order Linear Differential Equations)

கணிதவியல் - முதல் வரிசை நேரியல் வகைக்கெழுச் சமன்பாடுகள் (First Order Linear Differential Equations) | 12th Maths : UNIT 10 : Ordinary Differential Equations

   Posted On :  19.09.2022 03:54 am

12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 10 : சாதாரண வகைக்கெழுச் சமன்பாடுகள்

முதல் வரிசை நேரியல் வகைக்கெழுச் சமன்பாடுகள் (First Order Linear Differential Equations)

கணிதவியல் : சாதாரண வகைக்கெழுச் சமன்பாடுகள் : முதல் வரிசை நேரியல் வகைக்கெழுச் சமன்பாடுகள் (First Order Linear Differential Equations)

முதல் வரிசை நேரியல் வகைக்கெழுச் சமன்பாடுகள் (First Order Linear Differential Equations) 

முதல் வரிசை நேரியல் வகைக்கெழுச் சமன்பாட்டின் வடிவம் 

dy/dx + py = Q…… (1)

ஆகும். இங்கு P மற்றும் Q என்பன x-ல் மட்டுமே உள்ள சார்புகளாகும். இச்சமன்பாட்டில் y மற்றும் அதன் வகைக்கெழு dy/dx இவ்விரண்டின் பெருக்கல் பலன் இருக்காது. மேலும் சார்ந்த மாறி y மற்றும் சாராமாறி x ஐப் பொருத்த அதனுடைய வகைக்கெழு ஆகியவை முதலாம் படியாக மட்டுமே காணப்படும்

சமன்பாடு (1)-ன் தீர்வு காண்பதற்கு முதலில் dy/dx + Py = 0       ----- (2)

எனும் சமபடித்தான சமன்பாட்டை எடுத்துக் கொள்வோம்

சமன்பாடு (2)-ன் தீர்வினை பின்வருமாறு காணலாம்:

மாறிலிகளைப் பிரித்து எழுத, dy/y = -Pdx .

தொகையிட, நமக்குக் கிடைப்பது 


(சமன்பாடு (1)ஐப் பயன்படுத்த

சமன்பாடு (3)-ன் இருபக்கமும் xஐப் பொருத்து தொகையிட, கொடுக்கப்பட்ட வகைக்கெழுச் சமன்பாட்டின் தீர்வு

எனக் கிடைக்கிறது.

இங்கு ePdx  என்பது சமன்பாடு (1)-ன் தொகையீட்டுக் காரணி (தொ.கா) எனப்படும்.

குறிப்புரை

 1. நேரியல் வகைக்கெழுச் சமன்பாட்டின் தீர்வு

y × (தொ.கா) = Q(தொ.கா)dx + C ஆகும். இங்கு C என்பது எதேச்சை மாறிலி

2. கொடுக்கப்பட்ட வகைக்கெழுச் சமன்பாட்டில் காணப்படும் dy/dx-ன் கெழு 1 என இருக்கும்போது, தொகையீட்டுக் காரணி e Pdx-ல் உள்ள P என்பது y-ன் கெழுவாகும்.

3. dx/dy + Px = Q என்ற முதல் வரிசை நேரியல் சமன்பாட்டில் P மற்றும் Q என்பன y-ல் மட்டுமே உள்ள சார்புகளாகும். இச்சமன்பாட்டில் x  மற்றும் dx/dy இவ்விரண்டும் பெருக்கலாக இருக்காது. மேலும் சார்ந்த மாறி x மற்றும் சாராமாறி y ஐப் பொருத்த அதன் வகைக் கெழு ஆகியவற்றின் படி 1 ஆக மட்டுமே காணப்படும்.

இவ்வகையில், வகைக்கெழுச் சமன்பாட்டின் தீர்வு  xe Pdy = ∫Qe Pdy dy + C . ஆகும்




Tags : Mathematics கணிதவியல்.
12th Maths : UNIT 10 : Ordinary Differential Equations : First Order Linear Differential Equations Mathematics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 10 : சாதாரண வகைக்கெழுச் சமன்பாடுகள் : முதல் வரிசை நேரியல் வகைக்கெழுச் சமன்பாடுகள் (First Order Linear Differential Equations) - கணிதவியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 10 : சாதாரண வகைக்கெழுச் சமன்பாடுகள்