Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணிதம் | சமபடித்தான அமைப்பு அல்லது சமபடித்தான வகைக்கெழுச் சமன்பாடுகள் (Homogeneous Form or Homogeneous Differential Equation)

முதல் வரிசை, முதற்படி வகைக்கெழுச் சமன்பாடுகளின் தீர்வு (Solution of First Order and First Degree Differential Equations) | கணிதவியல் - சமபடித்தான அமைப்பு அல்லது சமபடித்தான வகைக்கெழுச் சமன்பாடுகள் (Homogeneous Form or Homogeneous Differential Equation) | 12th Maths : UNIT 10 : Ordinary Differential Equations

   Posted On :  19.09.2022 01:25 am

12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 10 : சாதாரண வகைக்கெழுச் சமன்பாடுகள்

சமபடித்தான அமைப்பு அல்லது சமபடித்தான வகைக்கெழுச் சமன்பாடுகள் (Homogeneous Form or Homogeneous Differential Equation)

முதல் வரிசை, முதற்படி வகைக்கெழுச் சமன்பாடுகளின் தீர்வு (Solution of First Order and First Degree Differential Equations) : சமபடித்தான அமைப்பு அல்லது சமபடித்தான வகைக்கெழுச் சமன்பாடுகள் (Homogeneous Form or Homogeneous Differential Equation)

சமபடித்தான அமைப்பு அல்லது சமபடித்தான வகைக்கெழுச் சமன்பாடுகள் (Homogeneous Form or Homogeneous Differential Equation)


வரையறை 10.12 : (n-ஆம் சமபடித்தான சார்பு)

   மற்றும் பொருத்தமாகக் கட்டுப்படுத்தப்பட்ட x,y மற்றும் t ஆகியவற்றுக்கு f (tx,ty) =tn f (x,y) எனில், x, y ஆகியவற்றை மாறிகளாகக் கொண்ட சார்பு f (x,y) ஆனது n ஆம் படியில் சமபடித்தான சார்பு எனப்படும். இது ஆய்லரின் சமபடித்தன்மை எனவும் அழைக்கப்படும்.

எடுத்துக்காட்டாக

, (i) (x, y) = 6x2 + 2xy + 4 y2 என்பது x, y-ல் அமைந்த படி 2 உடைய சமபடித்தான சார்பாகும்

(ii) ஆனால் f (xy) = x3 + ( sin x)ey என்பது சமபடித்தான சார்பு அல்ல. f(x,y) என்பது படி 0 கொண்ட சமபடித்தான சார்பு எனில், f (x,y) என்பதை எப்பொழுதும் g(y/x) அல்லது g (x/y)எனும் வடிவில் எழுதுமாறு g எனும் சார்பு இருக்கும்.


வரையறை 10.13 : (சமபடித்தான வகைக்கெழுச் சமன்பாடு

ஒரு சாதாரண வகைக்கெழுச் சமன்பாட்டை dy/dx = g(y/x) எனும் அமைப்பில் எழுதமுடியுமானால், அச்சமன்பாடு சமபடித்தான அமைப்பில் உள்ள வகைக்கெழுச் சமன்பாடு எனப்படும்.

கவனிக்க

வரையறை 10.8இல் பயன்படுத்தப்பட்டுள்ள "சமபடித்தான" எனும் வார்த்தையும் வரையறை 10.12இல் பயன்படுத்தப்பட்டுள்ளசமபடித்தானஎனும் வார்த்தையும் வெவ்வேறு பொருள் கொண்டவை என்பதை கவனத்தில் கொள்க

குறிப்புரை 

(i) M மற்றும் N என்பவை ஒரே படி கொண்ட சமபடித்தான சார்புகள் எனில், வகையீடுஅமைப்பில் உள்ள M(x,y)dx + N(x, y)dy = 0 எனும் வகைக்கெழுச் சமன்பாடு சமபடித்தான வகைக்கெழுச் சமன்பாடு எனப்படும்

(ii) மேற்கண்ட சமன்பாட்டை, dy/d = f (x,y) [வகைக்கெழு வடிவம்] என எழுதலாம். இங்குf (x,y) =-M(x,y) / N(x,y) ஆகும். இச்சார்பு படி 0 கொண்ட சமபடித்தான சார்பு எனத்தெளிவாகக் காணலாம். எடுத்துக்காட்டாக,

(1) (x2 - 3y2) dx + 2xy dy = 0 எனும் வகைக்கெழுச் சமன்பாட்டை கருதுவோம். கொடுக்கப்பட்ட சமன்பாட்டை   என எழுதலாம்.

ஆகவே, கொடுக்கப்பட்ட சமன்பாட்டை,   என எழுதலாம்.

எனவே, (x2 - 3y2) dx + 2xy dy = 0 எனும் சமன்பாடு சமபடித்தான வகைக்கெழுச் சமன்பாடாகும்

(2) எனும் வகைக்கெழுச் சமன்பாடு சமப்படித்தான சமன்பாடு அல்ல (சரிபார்!) dy/dx = g(y/x) எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் தீர்வு காண்பதற்கு v = y/x எனப் பிரதியிடுக. பின்னர், y = xv மற்றும் dy/dx = v+x dv/dx ஆகும். ஆகவே, கொடுக்கப்பட்ட வகைக்கெழுச் சமன்பாடு x dv/dx = f (v) – v என வடிவத்திற்கு மாறும். இச்சமன்பாட்டின் தீர்வினை மாறிகளைப் பிரிக்கும் முறையில் காணலாம். இதிலிருந்து பின்வரும் முடிவினைப் பெறுகிறோம்.


தேற்றம் 10.1

M(x, y)dx + N(x,y)dy = 0 என்பது சமபடித்தான சமன்பாடு எனில், y = vx எனப் பிரதியிட்டு மாறியை மாற்றுவதால் இச்சமன்பாடு v மற்றும் x எனும் பிரிபடக்கூடிய மாறிகளைக் கொண்ட சமன்பாடாக உருமாறுகிறது.



Tags : Solution of First Order and First Degree Differential Equations | Mathematics முதல் வரிசை, முதற்படி வகைக்கெழுச் சமன்பாடுகளின் தீர்வு (Solution of First Order and First Degree Differential Equations) | கணிதவியல்.
12th Maths : UNIT 10 : Ordinary Differential Equations : Homogeneous Form or Homogeneous Differential Equation Solution of First Order and First Degree Differential Equations | Mathematics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 10 : சாதாரண வகைக்கெழுச் சமன்பாடுகள் : சமபடித்தான அமைப்பு அல்லது சமபடித்தான வகைக்கெழுச் சமன்பாடுகள் (Homogeneous Form or Homogeneous Differential Equation) - முதல் வரிசை, முதற்படி வகைக்கெழுச் சமன்பாடுகளின் தீர்வு (Solution of First Order and First Degree Differential Equations) | கணிதவியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு கணிதம் : அத்தியாயம் 10 : சாதாரண வகைக்கெழுச் சமன்பாடுகள்