இயற்கை தாவரங்களில் இனப்பெருக்கம் - இயற்கை முறைகள் | 12th Botany : Chapter 1 : Asexual and Sexual Reproduction in Plants
தழைவழி பெருக்கம் (Vegetative propagation)
1 இயற்கை முறைகள் (Natural methods)
இயற்கையாக தழைவழி இனப்பெருக்கத்தில் மொட்டுகள் வளர்ந்து புதிய தாவரங்களைத் தருகின்றன. மொட்டுகள் வேர், தண்டு, இலை போன்ற உறுப்புகளில் தோன்றலாம். ஒரு குறிப்பிட்ட நிலையில் புது தாவரம் பெற்றோர் தாவரத்திலிருந்து பிரிக்கப்பட்டு புதிய தாவரமாக உருவாகிறது. சில தழைவழி இனப்பெருக்கத்தில் ஈடுபடும் தாவர உறுப்புகள் சேமிப்பு மற்றும் பல ஆண்டு வாழும் தன்மை உடையதாகும். தாவர இனப்பெருக்கத்திற்கு பயன்படும் அலகு இனப்பெருக்க உறுப்புகள் (reproductive propagules) அல்லது பரவல் உறுப்புகள் (diaspores) என்று அறியப்படுகின்றன. தழைவழி இனப்பெருக்கத்திற்கு உதவுகின்ற சில உறுப்புகளின் படம் 1.1-ல் கொடுக்கப்பட்டுள்ளது.
சில தாவரங்களின் வேர்களில் தழைவழி அல்லது மாற்றிட
மொட்டுகள் தோன்றுகின்றன. எடுத்துக்காட்டுகள்: முரையா, டால்பர்ஜியா மற்றும் மில்லிங்டோனியா.
சில கிழங்கு வடிவமாற்றிட வேர்கள் மொட்டுகளை தோற்றுவிப்பதைத் தவிர உணவையும் சேமிக்கின்றன.
எடுத்துக்காட்டு: ஐப்போமியா பட்டாட்டஸ் மற்றும் டாலியா தகுந்த சூழ்நிலைகளில் மொட்டுகள்
கொண்ட வேர்கள் தாய் தாவரத்திலிருந்து பிரிந்து தனித் தாவரமாக வளர்கின்றன.
பதினோராம் வகுப்பில் அலகு 3-லிருந்து பல்வகை
தரைகீழ் தண்டு மற்றும் தரை ஒட்டிய தண்டின் உருமாற்றங்களை பற்றி நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள்.
இலைகளில் மட்ட நிலத் தண்டு (மியூசா பாரடிசியாக்கா மற்றும் ஜின்ஜிஃபெர் அஃபிசினாலே,
குர்குமா லாங்கா), தரையடிக்கிழங்கு (அமோர்போபாலஸ் மற்றும் கொலகேஸியா), கிழங்கு (சொலானம்
டியூபரோசம்), குமிழ்த்தண்டு (அல்லியம் சீப்பா மற்றும் லில்லியம்), ஓடு தண்டு (சென்டெல்லா
ஏசியாட்டிகா), வேர்விடும் ஓடுதண்டு (மென்தா மற்றும் ஃபிரகேரியா), நீர் ஓடு தண்டு (பிஸ்டியா,
ஐக்கார்னியா), தரைகீழ் உந்து தண்டு (கிரைசான்திமம்), சிறு குமிழ் மொட்டுக்கள் (டயாஸ்காரியா,
அகேவ்). மட்ட நிலத்தண்டின் கணுவின் கோணமொட்டு மற்றும் கிழங்கின் கண் அமைப்பிலிருந்தும்
புதியதாவரங்கள் தோன்றுகின்றன.
நீர்நிலைகளை பாதிக்கும் நீர் ஹையாசிந்த் (ஐக்கார்னியா கிராசிப்பஸ்)
என்ற தாவரம் நீர் நிலைகளான குளம், ஏரி மற்றும் நீர் தேக்கங்களில் ஊடுருவும் களையாகும்.
இது பொதுவாக வங்கத்தின் அச்சுறுத்தல் என்று அறியப்படுகிறது. இது வேகமாக பரவி நீரில்
கலந்துள்ள ஆக்ஸிஜனை குறைத்து மற்ற நீர்வாழ் உயிரினங்கள் மடிய காரணமாகிறது.
செயல்பாடு
ஒரு காய்கறி சந்தைக்கு சென்று அங்குள்ள காய்கறிகளை பயன்பாட்டின்
அடிப்படையில் வேர், தண்டு அல்லது இலை என்று கண்டு பிடிக்கவும். அதில் எத்தனை பாலிலா
இனப்பெருக்கம் வழி இனப்பெருக்கம் அடைகின்றன என்பதை கண்டறியவும்.
சில தாவரங்களில் இலைகளில் மாற்றிடத்து மொட்டுகள்
தோன்றுகின்றன. இவை பெற்றோர் தாவரத்திலிருந்து பிரிந்து புதிய தனி தாவரங்களாக வளர்கின்றன.
எடுத்துக்காட்டுகள் பிரையோஃபில்லம், சில்லா, பெகோனியா பிரையோஃபில்லத்தில் சதைப்பற்றுள்ள
மற்றும் விளம்பில் பள்ளங்களுடைய இலைகள் உள்ளன. இப்பள்ளங்களில் வேற்றிட மொட்டுகள் தோன்றுகின்றன.
இவை இலைவளர் மொட்டுகள் (epiphyllous buds) என்று அறியப்படுகின்றன. இலை அழுகியதும் இவ்வமைப்புகளில்
வேர் தொகுப்பு உருவாகி தனி தாவரங்களாக மாறுகின்றன. சில்லா ஆற்று மணலில் வளரும் ஒரு
குமிழ்தண்டு தாவரமாகும். இதன் தழை இலைகள் நீண்டும், குறுகியும் உள்ளன. இவற்றின் நுனியில்
இலைவளர் மொட்டுகள் தோன்றி அவை தரையை தொட்டவுடன் புது தனி தாவரங்களாக மாறுகின்றன.
• இனப்பெருக்கத்திற்கு ஒரு பெற்றோர் மட்டும்
போதுமானது.
• தோன்றிய புதிய தாவரம் மரபணுதன்மையுடையவை
• சில தாவரங்களில் இது எளிதில் பரவுதலுக்கு
உதவுகிறது. எடுத்துக்காட்டு: ஸ்பைனிஃபெக்ஸ்
• தோட்டக்கலை வல்லுநர்களும், விவசாயிகளும்
இயல்பான தழைவழி இனப்பெருக்கம் செய்ய உதவும் இந்த உறுப்புகளை பயிறாக்கத்திற்கு பயன்படுத்துகின்றனர்
மற்றும் பெரிய அளவில் தாவரங்களை அறுவடை செய்யவும் பயன்படுத்துகின்றனர்.
• புதிதாக உருவாகும் தாவரங்களில் மரபணுசார்
வேறுபாடு காணப்படுவதில்லை.