தாவரங்களில் பாலினப்பெருக்கம் - கருவுறுதலுக்குப் பின்னுள்ள அமைப்புகள் மற்றும் நிகழ்வுகள் | 12th Botany : Chapter 1 : Asexual and Sexual Reproduction in Plants
கருவுறுதலுக்குப் பின்னுள்ள அமைப்புகள் மற்றும் நிகழ்வுகள்
கருவுறுதலுக்குப் பின் விதை உருவாகும் வரை மலரின் பாகங்களில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன (படம் 1.20)
கருவுறுதலுக்குப் பின் கரு பகுப்படைவதற்கு
முன் முதல் நிலை கருவூண் உட்கரு (PEN - Primary Endosperm Nucelus) உடனடியாக பகுப்படைந்து
உருவாகும் திசுகருவூண்திசு என்றழைக்கப்படுகிறது.
கருவுறுதலுக்குப் பின் கரு பகுப்படைவதற்கு முன் முதல் நிலை கருவூண் உட்கரு (PEN - Primary Endosperm Nucelus) உடனடியாக பகுப்படைந்து உருவாகும் திசுகருவூண்திசு என்றழைக்கப்படுகிறது. மூவிணைதல் மூலம் உருவாகும் முதல்நிலை கருவூண் திசு உட்கரு (2 துருவ உட்கருக்கள் மற்றும் 1 விந்து உட்கரு) மும்மடிய குரோமோசோம்களைக் (3n) கொண்டுள்ளது. இது ஊட்டமளிக்கும், சீரியக்கி அமைப்புத்திசுவாகும். மேலும் இது வளரும் கருவிற்கு ஊட்டமளிக்கிறது. (படம் 1.21)
வழிநடத்தி (Obturator)
சூலின் பல்வேறு பகுதிகளிலிருந்து வழிநடத்தி தோன்றலாம். (சூலொட்டுத்திசு
- யுபோர்பியேசி, சூலக காம்பு- அனகார்டியேசி , சூலகத்தண்டு - தைமிலியேசி, சூலகச்சுவர்
- ஒட்டீலியா அலிஸ்மாய்டஸ்)
வளர்ச்சி முறையைப் பொறுத்து மூடுவிதைத் தாவரங்களில்
3 வகையான கருவூண் திசு அறியப்படுகிறது. அவை உட்கரு சார் கருவூண் திசு (nuclear
endosperm), செல்சார் கருவூண் திசு (cellular endosperm), ஹீலோபிய கருவூண் திசு
(helobial endosperm) ஆகும்
உட்கருசார்
கருவூண் திசு
இந்த வகை கருவூண் திசு உருவாக்கத்தில், முதல்
நிலை கருவூண் உட்கரு (PEN) சுவர் உருவாக்கம் இன்றி இரண்டாகப் பகுப்படைகிறது. இந்த இரண்டு
உட்கருக்கள் தொடர்ந்து பகுப்படைந்து சைட்டோபிளாசத்துடன் கூடிய தனித்த உட்கருக்களைக்
கொண்ட கருவூண் திசுவாக அமைகிறது. முதிர்ந்த நிலையில் இந்த உட்கருக்கள் செல் சுவரற்றோ
அல்லது பின்னர் செல் சுவரின் உருவாக்கத்தால் தனிமைப்படுத்தப்பட்டோ காணப்படலாம்.
அலிரோன் திசு (Aleurone tissue) மிகவும் சிறப்படைந்த செல்களால்
ஆனது. இது ஒன்று அல்லது ஒரு சில அடுக்குகளால் ஆனது. இது தானியங்களின் (பார்லி/மக்காச்சோளம்)
கருவூண் திசுக்களை சூழ்ந்து காணப்படுகிறது. இதன் செல்களில் காணப்படும் துகள்கள் அலிரோன்
துகள்கள் எனப்படுகின்றன. இவற்றில் ஸ்பீரோசோம்கள் காணப்படுகின்றன. விதை முளைத்தலின்
போது இச்செல்கள் அமைலேஸ்கள், புரோட்டியேஸ்கள் போன்ற ஒரு சில நீராற்பகுப்பு நொதிகளைச்
சுரக்கின்றன. இந்நொதிகள் கருவூண் திசு செல்களிலுள்ள சேமிப்பு உணவுப் பொருட்களைச் செரிக்க
உதவுகின்றன.
கேப்செல்லா,
அராக்கிஸ்.
செல்சார்
கருவூண் திசு : இந்த வகை கருவூண் திசு உருவாக்கத்தில் முதல் நிலை
கருவூண் திசு உட்கரு (PEN) பகுப்படைந்து இரண்டு உட்கருக்களை உருவாக்கி அதைத் தொடர்ந்து
சுவர் உருவாக்கமும் நடைபெறுகிறது. அடுத்தடுத்து நடைபெறும் பகுப்புகளைத் தொடர்ந்து சுவர்
உருவாக்கம் நடைபெறுகிறது. எடுத்துக்காட்டுகள்: அடாக்ஸா, ஹீலியாந்தஸ், ஸ்கோபாரியா.
ஹீலோபிய
கருவூண் திசு: ஹீலோபிய
கருவூண் திசு வகையில் முதல் நிலை கருவூண் உட்கரு (PEN) கருப்பையின் அடிப்பகுதிக்கு
நகர்ந்து அங்கு இரண்டு உட்கருக்களாக பகுப்படைகிறது. இந்த இரண்டு உட்கருக்களுக்கிடையே
சுவர் உருவாக்கம் நடைபெற்று பெரிய சூல்துளை அறையையும் சிறிய சலாசா அறையையும் தோற்றுவிக்கிறது.
சூல்துளை அறையிலுள்ள உட்கரு பல பகுப்புகள் அடைந்து பல தனித்த உட்கருக்களை உருவாக்குகிறது.
சலாசா அறையிலுள்ள உட்கரு பகுப்படையலாம் அல்லது பகுப்படையாமல் இருக்கலாம். எடுத்துக்காட்டுகள்:
ஹைட்ரில்லா, வாலிஸ்நேரியா.
முதிர்ந்த விதைகளில், கருவூண் திசு வளரும்
கருவினால் முழுவதுமாக பயன்படுத்தப்படலாம் அல்லது முழுவதும் பயன்படுத்தப்படாமல் நிலைத்துக்
காணப்படலாம். கருவூண் திசு இல்லாத விதைகள் கருவூணற்ற விதைகள் / அல்புமினற்ற விதைகள்
(non endospermous seed / exalbuminous seed) என்று அறியப்படுகின்றன. எடுத்துக்காட்டுகள்:
பட்டாணி, நிலக்கடலை, பீன்ஸ் விதைகள் கருவூண் திசு கொண்டிருந்தால் அவை கருவூண் விதைகள்
/ அல்புமினுடைய விதைகள் (endospermous seed / albuminous seed) எனப்படும். இந்த விதைகளில்
உள்ள கருவூண்திசு விதை முளைத்தலின் போது கருவிற்கு உணவை அளிக்கிறது. எடுத்துக்காட்டுகள்:
நெல், தென்னை , ஆமணக்கு.
தொடர்விளிம்பற்ற
கருவூண்திசு (Ruminate endosperm): ஒழுங்கற்ற, சமமற்ற மேற்பரப்பைக்
கொண்ட கருவூண்திசு, தொடர்விளிம்பற்ற கருவூண்திசு
எனப்படும். (எடுத்துக்காட்டு: அரிக்கா கட்ச்சு - பாக்கு). விதையுறையினாலோ அல்லது கருவூண்திசு
செயலினாலோ இவ்வகை கருவூண்திசு உருவாகிறது .பாசிஃபுளோரா தாவரத்தில் விதையுறை அடுக்கு
ஆரப்போக்கில் நீள்வதால் ஒழுங்கற்ற மேற்பரப்பு கொண்ட கருவூண்திசு உருவாகிறது. விதையுறையின்
உள்நோக்கிய வளர்ச்சி மற்றும் உள்மடிப்புகள் காரணமாக அன்னோனேசி, அரிஸ்டோலோக்கியேசி குடும்பத்
தாவரங்களில் தொடர்விளிம்பற்ற கருவூண்திசு உருவாகிறது. மிரிஸ்டிகா தாவரத்தில் விதையுறையின்
ஒழுங்கற்ற மேற்பரப்பினால் தொடர்விளிம்பற்ற கருவூண்திசு உருவாகிறது.
• கருவூண் திசு வளரும் கருவிற்கு உணவாகப் பயன்படுகிறது.
• பெரும்பாலான மூடுவிதைத் தாவரங்களில் கருவூண்திசு
உருவான பின்புதான் கருமுட்டை பகுப்படைகிறது.
• கருவூண்திசு கருவின் துல்லியமான வளர்ச்சியை
ஒழுங்குபடுத்துகிறது.
கருவூண்திசுவில் காணப்படும் மற்றொரு சுவாரசியமான
பண்பு அதன் உறிஞ்சுறுப்பு ஆகும். ஹீலோபிய வகை கருவூண் திசு சலாச அறையே உறிஞ்சுறுப்பாக
செயல்படுகிறது. செல்சார் மற்றும் உட்கரு சார் வகை கருவூண் திசுக்களில், சிறப்பு உறிஞ்சு
உறுப்புகள் உருவாக்கப்படுகின்றன. சிற்றினங்களைப் பொறுத்து இந்த சிறப்பு உறிஞ்சுறுப்புகள்
சூல்துளை பகுதியை நோக்கியோ, சலாசா பகுதியை நோக்கியோ, இரண்டு பகுதிகளையும் நோக்கியோ,
பக்கவாட்டு திசையிலோ அமையலாம். இந்த அமைப்புகள் மற்ற வெளிப்புற திசுக்களிலிருந்தோ அல்லது
சூலக திசுக்களிலிருந்தோ ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி வளரும் கருவிற்கு அளிக்கின்றன.
இளநீர் ஒரு அடிப்படை ஊட்ட ஊடகமாகும். இது பல்வேறு தாவர திசுக்களிலிருந்து
கரு மற்றும் நாற்றுருக்களின் வேறுபாடுருதலைத் தூண்டுகிறது. இளம் தென்னையிலிருந்து பெறப்படும்
இளநீர் தனி உட்கருசார் கருவூண்திசுவாகும். இதனைச் சுற்றியுள்ள வெண்மைப் பகுதி செல்சுவர்
உருவாக்கப்பட்ட கருவூண் திசுவாகும்.
இருவிதையிலைத் தாவர கருவளர்ச்சியிலுள்ள நிலைகள்
விளக்க ஒனகிராட் அல்லது குரூசிஃபெர் வகை கொடுக்கப்பட்டுள்ளது (படம் 1.22) கருப்பையின்
சூல்துளைப் பகுதியில் கருவளர்ச்சி நடைபெறுகிறது.
கருமுட்டை குறுக்குவாக்கு பகுப்புற்று மேல்செல்
அல்லது நுனி செல் மற்றும் கீழ் அல்லது அடி செல்லைத் தருகிறது. அடி செல்லில் குறுக்குவாக்கு
பகுப்பும், நுனி செல்லில் செங்குத்துப் பகுப்பும் நடைபெற்று நான்கு செல் முன்கரு
(proembryo) உருவாகிறது. நுனி செல்லில் ஏற்படும் இரண்டாவது செங்குத்துப் பகுப்பு முதல்
செங்குத்துப் பகுப்பிற்கு நேர்கோணத்தில் நடைபெறுகிறது. இதனால் நான்கு செல் நிலையான
குவாட்ரண்டு (quadrant) உருவாகிறது. குவாட்ரண்ட் அல்லது நான்மய கருவில் ஒரு குறுக்குவாக்கு
பகுப்பு நடந்து நான்கு செல் வீதம் இரண்டு அடுக்கில் அமைந்த எட்டு செல் கருநிலை
(octant) உண்டாகிறது.
எட்டு செல் கரு நிலையின் மேலடுக்கிலுள்ள நான்கு
செல்கள் மேலடிச்செல்கள் (epibasal) அல்லது முற்பக்க எட்டு செல் (anterior octant) நிலை
என்றும், கீழுள்ள நான்கு செல்கள் கீழடிச் செல்கள் (hypobasal) அல்லது பிற்பக்க எட்டு
செல் (posterior octants) நிலை என்றும் அறியப்படுகிறது. எட்டு செல் கரு நிலை பரிதிக்கிணையாக
பகுப்படைந்து 16 செல் நிலையை எட்டுகிறது. இதில் புற அடுக்கில் எட்டு செல்களும், அக
அடுக்கில் எட்டு செல்களும் அமைந்துள்ளன.
புற அடுக்கில் அமைந்த எட்டு செல்கள் டெர்மட்டோஜனைக்
(dermatogen) குறிக்கின்றன. இது ஆரத்திற்கு இணையாக பகுப்படைந்து புறத்தோலைத் தருகிறது.
அக அடுக்கில் உள்ள எட்டு செல்கள் செங்குத்து மற்றும் குறுக்குவாக்கு பகுப்படைந்து வெளி
அடுக்கு பெரிபிளம்மையும் மையத்தில் அமைந்து பிளியுரோமையும் உருவாக்குகின்றன. பெரிபிளம்
புறணியையும் பிளியுரோம் ஸ்டீலையும் உண்டாக்குகின்றன.
கரு வளர்ச்சியின்போது அடிசெல்லிலுள்ள இரண்டு
செல்கள் பலமுறை குறுக்குவாக்கு பகுப்படைந்து ஆறு முதல் பத்து செல்களுடைய சஸ்பென்ஸர்
(suspensor) உருவாகிறது. இந்நிலையில் கரு கோள வடிவமடைகிறது. சஸ்பென்ஸர் கருவை கருவூண்திசுவினுள்
உந்துவதற்கு உதவுகிறது. சஸ்பென்ஸரின் மேலேயுள்ள செல் பெரிதாகி உறிஞ்சு உறுப்பாகிறது.
சஸ்பென்ஸரின் கீழேயுள்ள செல்ஹைப்போபைஸிஸ் ஒரு குறுக்குவாக்கு பகுப்பும், இரண்டு செங்குத்து
பகுப்புகளும் (ஒன்றிற்கு ஒன்று நேர்கோணத்தில்) நடைபெற்று எட்டு செல்கள் கொண்ட ஹைப்போபைஸிஸ்
உருவாகிறது. இந்த எட்டு செல்களும் நான்கு செல்கள் வீதம் இரண்டு அடுக்குகளில் அமைந்துள்ளது.
மேல் அடுக்கு வேர்மூடி மற்றும் புறத்தோலைத் தருகிறது. இந்நிலையில் கரு இதய வடிவைப்
பெறுகிறது. விதையிலை அடித்தண்டு (hypocotyl) பகுதியிலும் விதையிலையிலும் ஏற்படும் பகுப்புகள்
கருவை நீட்சியடையச் செய்கின்றன. பிறகு நடைபெறும் வளர்ச்சி காரணமாக கருப்பையில் கரு
வளைந்து குதிரைலாட வடிவைப் பெறுகிறது. முதிர்ந்த கருவில் முளைவேர், விதையிலை அடித்தண்டு,
இரண்டு விதையிலைகள் மற்றும் முளைக்குருத்து காணப்படும்.
டிரைடாக்ஸ் தாவரத்தின் கனிகளை (சிப்செல்லா) சேகரிக்கவும். ஊசியைப்
பயன்படுத்தி விதையினுள் உள்ள கருவினை பிரித்தெடுக்கவும். ஒரு கூறாக்குதல் நுண்ணோக்கியில்
உருண்டை, டார்பிடோ, இதய வடிவ கரு நிலைகளைக் காணவும்.
கருவுற்ற சூல் விதை என்று அழைக்கப்படுகிறது.
இது கரு, கருவூண்திசு மற்றும் பாதுகாப்பு உறை கொண்டுள்ளது. விதைகள் கருவூண்திசு கொண்ட
விதைகளாகவோ (மக்காச்சோளம், கோதுமை, பார்லி , சூரியகாந்தி ) அல்லது கருவூண்திசு அற்ற
விதைகளாகவோ (பீன்ஸ், மா, ஆர்கிட்கள், குக்கர்பிட்கள்) இருக்கலாம்.
ஆர்கிட் விதையின் எடை 20.33 மைக்ரோகிராம். இரட்டை தென்னையின் விதை
(லோடோய்சியா மால்டிவிக்கா) எடை ஏறத்தாழ 6 கி.கிராம்.
இருவிதையிலைத்
தாவர விதைக்கு சைசர் விதை எடுத்துக்காட்டு
முதிர்ந்த விதைகள் ஒரு காம்பினால் கனிச்சுவரோடு இணைக்கப்பட்டிருக்கும். அக்காம்பிற்கு விதைக்காம்பு என்று பெயர். இவ்விதைக்காம்பு மறைந்து விதைகளில் ஒரு தழும்பை ஏற்படுத்தும். இத்தழும்பு விதைத்தழும்பு (hilum) என்று அழைக்கப்படும். விதைத்தழும்பிற்கு கீழாக ஒரு சிறிய துளை காணப்படும். அதற்கு விதைத்துளை (micropyle) என்று பெயர். இது விதை முளைத்தலின் போது ஆக்ஸிஜன் மற்றும் நீரை உள்ளெடுக்க உதவுகிறது. ஒவ்வொரு விதையும் விதையுறையைக் கொண்டிருக்கும். இந்த உறை சூல் உறைகளிலிருந்து தோன்றுகிறது. விதை உறை தடித்த வெளியுறை (testa) மற்றும் மெல்லிய சவ்வுபோன்ற உள்ளுறை (tegmen)-ளைக் கொண்டுள்ளது. பட்டாணி தாவரத்தில் விதை வெளியுறை, விதை உள்ளுறை இரண்டும் இணைந்தே காணப்படும். கரு அச்சின் பக்கவாட்டில் இரண்டு விதையிலைகள் ஒட்டிக் காணப்படும். பட்டாணி விதையில் இது உணவுப் பொருட்களை சேமித்து வைக்கிறது. மாறாக ஆமணக்கு போன்ற இதர விதைகளில் மெல்லிய விதையிலைகளும் சேமிப்புப் பொருட்களைக் கொண்ட கருவூண்திசுவும் காணப்படும். விதையிலையைத் தாண்டி நீண்டு காணப்படும் கரு அச்சுப்பகுதி முளைவேர் (radicle) அல்லது கருவேர் (embryonic root) என்றும், அச்சின் மற்றொரு முனைப்பகுதி முளைக்குருத்து (plumule) என்றும் அழைக்கப்படும். கருஅச்சின் விதையிலையின் மேல் பகுதி விதையிலை மேற்தண்டு (epicotyl) எனவும், விதையிலையின் இடைப்பட்ட பகுதி விதையிலை அடித்தண்டு (hypocotyl) எனவும் அறியப்படுகிறது (படம் 1.23 அ)
ஒரு விதையிலையைக் கொண்ட நெல் விதை கேரியாப்சிஸ்
(caryopsis) என்று அழைக்கப்படும். ஒவ்வொரு விதையும் பழுப்பு நிற உமியால் மூடப்பட்டிருக்கும்.
அதில் இரண்டு வரிசைகளில் உமியடிச் செதில்கள் அமைந்திருக்கும். விதையுறை பழுப்பு நிறத்தில்,
சவ்வு போன்று விதையை மிக நெருக்கமாக ஒட்டி அமைந்துள்ளது. சேமிப்புத் திசுவான கருவூண்திசு
விதையின் பெரும்பகுதியாக உள்ளது. கருவூண்திசு கருவிலிருந்து ஒரு வரையறுக்கப்பட்ட அடுக்கினால்
தனிமைப் படுத்தப்பட்டுள்ளது. இவ்வடுக்கிற்கு மேலடுக்கு (epithelium) என்று பெயர். கரு
சிறியது. இதில் ஸ்குடெல்லம் (scutellum) என்ற கவச வடிவ விதையிலை காணப்படுகிறது. இந்த
ஸ்குடெல்லம் கரு அச்சின் பக்கவாட்டை நோக்கி அமைந்துள்ளது. வேர்மூடியால் பாதுக்காக்கப்பட்ட
முளைவேரும் முளைக்குருத்தும் கொண்டு ஒரு குட்டையான அச்சு காணப்படுகிறது. முளைக்குருத்து
முளைக்குருத்து உறை (coleoptile) என்று அழைக்கப்படும் ஒரு பாதுகாப்பு உறையால் சூழப்பட்டுள்ளது.
வேர்மூடியை உள்ளடக்கிய முளைவேர் முளைவேர் உறை (coleorhizae) என்ற ஒரு பாதுகாப்பு உறையால்
சூழப்பட்டுள்ளது. ஸ்குடெல்லம் மேலடுக்கின் உதவியால் கருவூண்திசுவிலிருந்து உணவுப் பொருட்களை
உறிஞ்சி வளரும் கருவிற்கு வழங்குகிறது
செயல்பாடு
பச்சைப்பயறு விதைகளை மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். நீரை வடித்தபின்
சில விதைகளை எடுத்து தூயதட்டில் வைக்கப்பட்டுள்ள ஈர பஞ்சு அல்லது வடிதாளில் வைக்கவும்.
இந்த விதைகளை முளைக்க விடவும். முளைத்த விதைகள் எடுத்து பிளந்து அதன் பகுதிகளை உற்று
நோக்கவும். உற்று நோக்கியதை பதிவு செய்யவும்.