Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | விளக்கம் மற்றும் தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள் நீண்ட தொலைவு மின்திறன் அனுப்புகையில் மாறுதிசை மின்னோட்டத்தின் நன்மைகள்
   Posted On :  11.10.2022 02:52 am

12 வது இயற்பியல் : அலகு 4 : மின்காந்தத்தூண்டலும் மாறுதிசைமின்னோட்டமும்

விளக்கம் மற்றும் தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள் நீண்ட தொலைவு மின்திறன் அனுப்புகையில் மாறுதிசை மின்னோட்டத்தின் நன்மைகள்

இயற்பியல் : மின்காந்தத்தூண்டலும் மாறுதிசைமின்னோட்டமும்:நீண்ட தொலைவு மின்திறன் அனுப்புகையில் மாறுதிசை மின்னோட்டத்தின் நன்மைகள்: விளக்கம் மற்றும் தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள் உடன் பதில்கள், தீர்வு மற்றும் விளக்கம்

விளக்கம் 

இரு வேறுபட்ட மின்னழுத்த வேறுபாட்டில், 2 MW மின்திறனானது மொத்த மின்தடை R = 40  கொண்ட மின்அனுப்புகை கம்பிகள் வழியாக ஓரிடத்திற்கு அனுப்படுகிறது. ஒன்று குறைவான மின்னழுத்த வேறுபாடு (10 kV) மற்றும் மற்றொன்று உயர் மின்னழுத்த வேறுபாடு (100 kV). இந்த இரு நேர்வுகளிலும் உள்ள திறன் இழப்புகளை தற்போது நாம் கணக்கிட்டு, பின் ஒப்பிடுவோம்.

நேர்வு (i)

P = 2 MW; R = 40; V = 10 kV


நேர்வு (ii)

P= 2 MW; R = 40; V = 100 kV


ஆகவே, உயர் மின்னழுத்த வேறுபாட்டில் மின்திறன் அனுப்பப்பட்டால், திறன் இழப்பு பெருமளவு குறைக்கப்படுகிறது என்பது தெளிவாகிறது.


எடுத்துக்காட்டு 4.16

ஒரு இலட்சிய மின்மாற்றியானது முதன்மைச்சுருள் மற்றும் துணைச்சுருள்களில் முறையே 460 மற்றும் 40,000 சுற்றுகளைக் கொண்டுள்ளது. மின்மாற்றியானது 230 V AC மூலத்துடன் இணைக்கப்பட்டால், துணைச்சுருளின் ஒரு சுற்றில் உருவான மின்னழுத்த வேறுபாட்டைக் காண்க. துணைச்சுருளுடன் 104 மின்தடைப் பளு இணைக்கப்படுகிறது. பளுவிற்கு வழங்கப்பட்ட திறனைக் கணக்கிடுக.

தீர்வு:

Np= 460 சுற்றுகள்; Ns = 40,000 சுற்றுகள்

Vp = 230 V; Rs = 104

(i) துணைச்சுருள் மின்னழுத்த வேறுபாடு,


(ii) வழங்கப்பட்ட திறன்


 

எடுத்துக்காட்டு 4.17

மின்புரட்டி (inverter) என்பது நமது இல்லங்களின் பயன்படுத்தப்படும் மின்கருவி ஆகும். வீட்டில் மின்சாரம் இல்லாதபோது, மின்விசிறி அல்லது மின்விளக்கு போன்ற சில கருவிகளை இயக்கத் தேவையான மாறுதிசை மின்னோட்டத்திறனை மின்புரட்டி வழங்குகிறது. மின்புரட்டியின் உள்ளே ஒரு ஏற்று மின்மாற்றி பொருத்தப்பட்டுள்ளது. அது 12V ACஐ 240V AC ஆக மாற்றுகிறது. முதன்மைச்சுருள் 100 சுற்றுகளைக் கொண்டுள்ளது. 50mA மின்னோட்டத்தை புற்ச்சுற்றுக்கு மின்புரட்டி அளிக்கிறது. துணைச்சுருளில் உள்ள சுற்றுகளின் எண்ணிக்கை மற்றும் முதன்மை மின்னோட்டம் ஆகியவற்றைக் காண்க.

தீர்வு

Vp = 12 V; Vs = 240 V

Is = 50mA; Np = 100 சுற்றுகள்


துணைச்சுருளில் உள்ள சுற்றுகளின் எண்ணிக்கை


முதன்மை மின்னோட்டம்,

 

12th Physics : UNIT 4 : Electromagnetic Induction and Alternating Current : Illustration and Solved Example Problems on Advantages of AC in long distance power transmission in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது இயற்பியல் : அலகு 4 : மின்காந்தத்தூண்டலும் மாறுதிசைமின்னோட்டமும் : விளக்கம் மற்றும் தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள் நீண்ட தொலைவு மின்திறன் அனுப்புகையில் மாறுதிசை மின்னோட்டத்தின் நன்மைகள் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது இயற்பியல் : அலகு 4 : மின்காந்தத்தூண்டலும் மாறுதிசைமின்னோட்டமும்