செயல்பாடு, உள்ளீர்த்தல் சோதனை - உள்ளீர்த்தலின் முக்கியத்துவம், உள்ளீர்த்தல் சோதனை | 11th Botany : Chapter 11 : Transport in Plants
உள்ளீர்த்தல்
(Imbibition)
மரப்பிசின், ஸ்டார்ச், புரதம், செல்லுலோஸ், அகார்,
ஜெலட்டின் போன்ற கூழ்ம அமைப்புகளை நீரில் வைக்கும் போது அவை நீரினை அதிக அளவில் உறிஞ்சி
பெருக்கமடைகின்றன. இத்தகைய பொருட்கள் உள்ளீர்ப்பான்கள்
என்றும் இந்நிகழ்வு உள்ளீர்த்தல் என்றும்
அழைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டு: 1. உலர்ந்த விதைகள் உப்புதல் 2. மழைக் காலங்களில் மரச்சன்னல்கள், மேசைகள், மரக்கதவுகள் ஆகியவை ஈரப்பதம் காரணமாக உப்புதல்.
1) விதை முளைத்தலின்போது, உள்ளீர்த்தல் காரணமாக விதையின்
அளவு அபரிமிதமாக விரிவடைவதால் விதையுறை கிழிபடுகிறது.
2) வேர் மூலம் நீர் உறிஞ்சுதலின் ஆரம்ப நிலையில் இது
உதவுகிறது.
செயல்பாடு
உள்ளீர்த்தல்
சோதனை
முருங்கை மரம் அல்லது கருவேல மரம் அல்லது
பாதாம் மரத்திலிருது 5 கிராம் அளவிற்கு அதன் பிசினை சேகரிக்க வேண்டும். இதனை 100மி.லி.
நீரில் ஊறவைக்க வேண்டும். 24 மணி நேரத்திற்கு பின்பு ஏற்படும் மாற்றங்கள் குறித்து
ஆசிரியரிடம் கலந்துரையாடுக.