கரைசல் - சவ்வூடு பரவல்- செயல்முறை விளக்கம் | 11th Botany : Chapter 11 : Transport in Plants
சவ்வூடு பரவல்- செயல்முறை விளக்கம்
ஒரு திசில் புனலின் வாயினை ஆட்டுச் சவ்வினால்
கட்ட வேண்டும். இது அரை கடத்திச் சவ்வாக செயல்படும். இதில் அடர்வு மிக்க சர்க்கரைக்
கரைசலினை ஊற்றி அதன் ஆரம்ப அளவினை குறித்துக் கொள்ள வேண்டும். பின் இவ்வமைப்பினை ஒரு
நீர் நிறைந்த பீக்கருள் வைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து திசில் புனலில் நீர்மட்டம்
உயர்ந்திருப்பதைக் காணலாம். இதற்குக் காரணம் நீர் முலக்கூறுகள் அரைக் கடத்திச் சவ்வு
வழியாக பரவல் மூலம் உள் நுழைவதே (படம் 11.6).
இதே போல பீக்கரில், நீருக்கு பதிலாக
சர்க்கரை கரைசலும் திசில் புனலில் சர்க்கரைக் கரைசலுக்கு பதிலாக நீரையும் நிரப்பினால்
என்ன நிகழும்?