Home | 12 ஆம் வகுப்பு | 12வது அரசியல் அறிவியல் | இந்தியாவும் அண்டை நாடுகளும்

அரசியல் அறிவியல் - இந்தியாவும் அண்டை நாடுகளும் | 12th Political Science : Chapter 10 : India and It’s Neighbours

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 10 : இந்தியாவும் அண்டை நாடுகளும்

இந்தியாவும் அண்டை நாடுகளும்

இந்தியா நீளமான கடல் மற்றும் நில எல்லைகளை கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பாகிஸ்தான், பூடான், சீனா, மியான்மர், மாலத்தீவு, நேபாளம், இலங்கை போன்றவை இந்தியாவுடன் எல்லைகளைக் கொண்டுள்ளன.

இந்தியாவும் அண்டை நாடுகளும்


கற்றலின் நோக்கங்கள் 

* நவீன உலக அரங்கில் இந்திய நாட்டின் பங்கு பற்றி புரிந்து கொள்ளுதல்.

* இந்தியாவின் அமைதி தொடர்பான நடவடிக்கைகளை அறிந்து கொள்ளுதல்.

* இந்தியாவுடனான அண்டை நாடுகளின் உறவுமுறை பற்றி அறிதல்.

* ஒரு அமைதியை விரும்பும் நாடாக இந்தியாவின் ஆற்றல்மிகு பங்களிப்பை கண்டறிதல்.

* இந்தியாவின் அணு ஆயுத நிலையைப் பற்றி அறிதல்.

* பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை அறிதல். 

* 21ஆம் நூற்றாண்டில் இந்தியா ஒரு வல்லரசாக திகழ்வது குறித்து ஆராய்தல்.


அறிமுகம்


இந்தியா நீளமான கடல் மற்றும் நில எல்லைகளை கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பாகிஸ்தான், பூடான், சீனா, மியான்மர், மாலத்தீவு, நேபாளம், இலங்கை போன்றவை இந்தியாவுடன் எல்லைகளைக் கொண்டுள்ளன. அணிசேராக் கொள்கை அல்லது இராணுவ மோதல்களில் ஈடுபடாமை ஆகியவற்றை தனது அயல்நாட்டு கொள்கையாகக் கொண்டுள்ளது.

புவியியல் ரீதியாக எல்லை தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை இந்தியா சந்தித்து வருகிறது. மேலும் அண்டை நாடுகளின் கொள்கைகளின் தாக்கமும், இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்துவதும் என்பது உண்மையாகும். விடுதலை பெற்றதிலிருந்து இந்தியா அண்டை நாடுகளுடன் நல்ல உறவுமுறைகளை ஏற்படுத்த முயற்சி செய்த வண்ணமே உள்ளது. ஆனாலும் சில அண்டை நாடுகள் எதிர்மறை நிலையை பின்பற்றி வருவதால் சண்டைகளும், பிரச்சனைகளும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

அண்டை நாடுகளுடனான உறவுகளில், ஐந்து அம்சம் கொண்ட பஞ்சசீலக் கொள்கையை இந்தியா பின்பற்றி வருகிறது.


Tags : Political Science அரசியல் அறிவியல்.
12th Political Science : Chapter 10 : India and It’s Neighbours : India and It’s Neighbours Political Science in Tamil : 12th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 10 : இந்தியாவும் அண்டை நாடுகளும் : இந்தியாவும் அண்டை நாடுகளும் - அரசியல் அறிவியல் : 12 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 10 : இந்தியாவும் அண்டை நாடுகளும்