தாவரங்களில் பாலினப்பெருக்கம் - கருவுறாக்கனிகள் | 12th Botany : Chapter 1 : Asexual and Sexual Reproduction in Plants
கருவுறாக்கனிகள் (Parthenocarpy)
கருவுறாக்
கனியாதல்: ஏற்கனவே குறிப்பிட்டது போன்று கருவுறுதலுக்குப் பின் சூலகம்
கனியாகவும், சூல் விதையாகவும் மாறுகின்றன. எனினும் பல எடுத்துக்காட்டுகளில் கருவுறுதல்
நடைபெறாமல் கனி போன்ற அமைப்புகள் சூலகத்திலிருந்து தோன்றலாம். இத்தகைய கனிகள் கருவுறாக்கனிகள்
என அழைக்கப்படுகின்றன. அவை பெரும்பாலும் உண்மையான விதைகளைக் கொண்டிருப்பதில்லை. வணிக
முக்கியத்துவம் வாய்ந்த பல கனிகள் விதைகளற்றவைகளாக ஆக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டுகள்:
வாழைப்பழம், திராட்சை, பப்பாளி.
• தோட்டக்கலைத்துறையில் விதையிலாக் கனிகள்
அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.
• விதையிலாக்கனிகள் வணிகரீதியாக அதிக முக்கியத்துவம்
வாய்ந்தவை.
• ஜாம்கள், ஜெல்லிகள், சாஸ்கள், பழபானங்கள்
தயாரிப்பில் விதையிலாக்கனிகள் பயன்படுத்தப்படுகின்றன.
• கருவுறாக் கனிகளில் விதைகள் இல்லாத காரணத்தால்
கனியின் பெரும்பகுதி உண்ணக்கூடிய பகுதியாக உள்ளது.