முடியரசன் | பருவம் 2 இயல் 3 | 6 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: நானிலம் படைத்தவன்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 6th Tamil : Term 2 Chapter 3 : Kudi tholil sai
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1.
போர்க்களத்தில் வெளிப்படும் குணம். .........
அ) மகிழ்ச்சி
ஆ) துன்பம்
இ) வீரம்
ஈ) அழுகை
[விடை : இ) வீரம்]
2.
கல்லெடுத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.........
அ) கல் +
அடுத்து
ஆ) கல் +
எடுத்து
இ) கல் +
லடுத்து
ஈ) கல் +
லெடுத்து
[விடை : ஆ) கல் + எடுத்து]
3.
நானிலம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
அ) நா +
னிலம்
ஆ) நான்கு +
நிலம்
இ) நா +
நிலம்
ஈ) நான் +
நிலம்
[விடை : ஆ) நான்கு + நிலம்]
4.
நாடு + என்ற என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.
அ) நாடென்ற
ஆ) நாடன்ற
இ) நாடு என்ற
ஈ) தாடுஅன்ற
[விடை : அ) நாடென்ற]
5.
கலம் + ஏறி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்..
அ) கலம்ஏ றி
ஆ) கலமறி
இ) கலன் ஏறி
ஈ) கலமேறி
[விடை : ஈ) கலமேறி]
சொற்றொடரில் அமைத்து எழுதுக.
அ) மாநிலம் – என் நண்பன் ஓட்டப்பந்தயத்தில் மாநில அளவில் முதலிடம்
பெற்றுள்ளான்.
ஆ) கடல் – கடல் பரந்து விரிந்துள்ளதால் அதற்குப் பரவை என்று
பெயர்.
இ) பண்டங்கள் – தின்பண்டங்களை வீணாக்கக்கூடாது.
நயம் அறிக.
1.
நானிலம் படைத்தவன் பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.
விடை
கல்லெடுத்து – மல்லெடுத்த
ஊராக்கி – பேராக்கி
மாநிலத்தில் – நானிலத்தை
ஆழ – சூழும்
முக்குளித்தான் – எக்களிப்பு
பண்டங்கள் – கண்டங்கள்
அஞ்சானம் – அஞ்சுவதை
2.
நானிலம் படைத்தவன் பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
விடை
மோனை :
அஞ்சாமை – அஞ்சுவதை
குறுவினா
1.
நான்கு நிலங்கள் என்பன யாவை?
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகியவை நான்கு நிலங்கள் ஆகும்.
2.
தமிழன் எதற்கு அஞ்சினான்?
தமிழன், சான்றோர்கள் அஞ்சும் தீமைகளைச் செய்ய அஞ்சினான்.
3.
தமிழன் எதற்காகக் கண்டங்களைச் சுற்றி வந்தான்?
ஏலம், மிளகு ஆகியவற்றைப் பெருமகிழ்ச்சியோடு கப்பல்களில்
ஏற்றிக் கண்டங்கள் தோறும் அனுப்பி வணிகம் செய்வதற்காகக் கண்டங்களைச் சுற்றி வந்தான்.
சிறுவினா
1.
தமிழன் தான் வாழ்ந்த நாட்டினை எவ்வாறு உருவாக்கினான்?
விடை
தமிழன் தான் வாழ்ந்த நாட்டினை உருவாக்கின விதம் :
(i) தமிழன் கற்களும் முட்களும் நிறைந்திருந்த பெரிய
நிலப்பரப்பைத் திருத்திப் பண்படுத்தினான்.
(ii) தனது உடல் வலிமையால் வளத்தைப் பெருக்கினான்.
(iii) ஊர், நகரம், நாடு ஆகியவற்றை உருவாக்கி வாழும் பெருமையைப் பெற்றான்.
(iv) முல்லை , மருதம், குறிஞ்சி, நெய்தல் என நிலத்தை நால்வகைப்படுத்தினான். இதனால்
நாகரிக மனிதன் ஆனான்.
2.
தமிழனின் செயல்களாக முடியரசன் கூறுவன யாவை?
விடை
தமிழனின் செயல்களாக முடியரசன் கூறுவன :
(i) பழந்தமிழன்
ஆழமான கடல்களைக் கடந்து பயணம் செய்தான். அச்சம் தரும் போர்களிலும் எளிதாக வெற்றி கண்டான்.
(ii) பனிசூழ்ந்த
இமயமலையில் தன் வெற்றிக்கொடியை நாட்டினான். ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத்தான்.
(iii) ஏலம், மிளகு ஆகியவற்றைப் பெருமகிழ்ச்சியோடு கப்பல்களில்
ஏற்றிக் கண்டங்கள் தோறும் அனுப்பி வணிகம் செய்தான். கப்பலில் உலகை வலம் வந்தான்.
(iv) தமிழன்
எதற்கும் அஞ்சாதவன். ஆனால், சான்றோர்கள் அஞ்சும் தீமைகளைச் செய்ய அஞ்சுவான்.
சிந்தனை வினா
காடுகளில் வாழ்ந்த மனிதன் எவ்வாறு படிப்படியாக நாகரிகம் அடைந்திருப்பான் எனச் சிந்தித்து எழுதுக.
விடை
நாகரிக வளர்ச்சி :
மனிதன் காடுகளில் தோன்றினான், கூட்டம்
கூட்டமாக வாழ்ந்தான். அவர்களுடைய பசியைப் போக்க காட்டு விலங்குகளை வேட்டையாடினான்.
அவற்றைச் சுட்டுத் தின்பதற்காக நெருப்பைக் கண்டறிந்தான். சிக்கிமுக்கிக் கல்லை அதற்குப்
பயன்படுத்தினான். தேவதாரு மற்றும் மூங்கில் மரத்தைக் கொண்டு நெருப்பு மூட்டக் கற்றுக்
கொண்டு உணவுப் பொருட்களைச் சுட்டுத் தின்றான். பிறகு கல், வெண்கலம், இரும்பு
என வகை வகையான கருவிகளைக் கண்டறிந்தான். விவசாயத்திற்கு அக்கருவிகளைப் பயன்படுத்தினான்.
இரை கிடைக்கும் இடத்தைத் தேடி இடம் விட்டு இடம்
பெயர்ந்தான். ஓரிடத்தில் வீடு கட்டி வாழ்ந்து விவசாயத்தின் மூலம் உணவு பெறுவது தொடங்கி
ஆடு, மாடுகளைப்
பழக்கி உழவுத் தொழில் செய்தான். மட்பாண்டங்கள் செய்யக் கற்றுக் கொண்டான். படகுகள் செய்து
ஆறு, கடல்
ஆகிய நீர்நிலைகளில் பயணித்தான். பருத்தி, ஆட்டு மயிர்கள் கொண்டு ஆடை உருவாக்கினான். இவ்வாறு
அவனுக்குத் தேவையான அனைத்தையும் அவனே உருவாக்கினான். சிறு சிறு குடியிருப்புகள் உருவாயின.
இது ஒரு கிராமம் தோன்றுவதற்குத் தொடக்கமாக அமைந்தது.
இச்சிறு கிராமங்கள் படிப்படியாக நகரங்களாக வளர்ச்சி பெற்றன. நகரங்கள் வந்தபிறகு நாகரிகம்
வந்தது. தங்கள் எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ள மொழி பயன்பட்டது.
இவ்வாறு வளர்ந்த மனிதன் அறிவியல் வளர்ச்சியின்
மூலம் பல வகையில் முன்னேறினான். புதிய புதிய இயந்திரங்கள் மக்களின் வேலைச் சுமையைக்
குறைத்து நேரத்தை மிச்சப்படுத்தியது. மனிதன் ஓய்வு பெறக் கற்றுக் கொண்டான். இவ்வாறு
மனிதன் படிப்படியாக வளர்ந்தான்.
கற்பவை கற்றபின்
1.
'நானிலம் படைத்தவன்'
பாடலை இசையுடன் பாடிக் காட்டுக.
2.
குறிஞ்சி,
முல்லை,
மருதம்,
நெய்தலுக்கு உரிய நிலங்களை அறிந்து எழுதுக.
விடை (i) குறிஞ்சி – மலையும் மலையைச் சார்ந்த இடங்கள்.
(ii) முல்லை – காடும் காடு சார்ந்த இடங்கள்.
(iii) மருதம் – வயலும் வயல் சார்ந்த இடங்கள்.
(iv) நெய்தல் – கடலும் கடல் சார்ந்த இடங்கள்
3.
படித்து மகிழ்க.
வெள்ளிப் பனிமலையின் மீதுஉலாவுவோம் – அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்!
-
பாரதியார்