Home | 6 ஆம் வகுப்பு | 6வது தமிழ் | மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 2 இயல் 3 | 6 ஆம் வகுப்பு தமிழ் - மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் | 6th Tamil : Term 2 Chapter 3 : Kudi tholil sai

   Posted On :  30.06.2023 09:59 am

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : கூடித் தொழில் செய்

மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : கூடித் தொழில் செய் : மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மொழியை ஆள்வோம்


 

சொற்றொடர்ப் பயிற்சி.

அந்தஇந்த என்னும் சுட்டுச்சொற்களை அமைத்துத் தொடர்கள் எழுதுக.

 விடை

(i) அந்தக் குழந்தை அழகாக இருந்தது.

(ii) இந்தக் குளத்தில் நீர் வற்றி விட்டது.

 

எங்கேஏன்யார் ஆகிய வினாச்சொற்களை அமைத்துத் தொடர்கள் எழுதுக.

விடை

(i) “எங்கே செல்கிறாய்?” என்று கண்ணன் முகிலனிடம் கேட்டான்.

(ii) “ஏன் அழுகிறாய்?” என்று தாய் குழந்தையைக் கேட்டாள்.

(iii) திருக்குறளை இயற்றியவர் யார்?

 

சொற்களைச் சேர்த்துச் சொற்றொடரை நீட்டி எழுதுக.

நான் பள்ளியில் படிக்கிறேன்.  (ஆறாம் வகுப்புஅரசு)

விடை : நான் அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் படிக்கிறேன்.

பொன்னன் முன்னேறினான்.  வணிகம் செய்துபொருளீட்டிதுணி)

விடை : பொன்னன் துணி வணிகம் செய்து பொருளீட்டி முன்னேறினான்.

 

பின்வரும் கட்டங்களில் உள்ள சொற்களைக் கொண்டு சொற்றொடர்கள் அமைக்க.


விடை

(i) நான் ஊருக்குச் சென்றேன்.

(ii) நீ ஊருக்குச் சென்றாய்.

(iii) அவன் ஊருக்குச் சென்றேன்.

(iv) அவள் ஊருக்குச் சென்றான்.

(v) அவர் ஊருக்குச் சென்றாள்.

 

அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தக்க இடத்தில் சேர்த்து எழுதுங்கள்.

நீங்கள் வரும்போது எனக்குப் புத்தகம் வாங்கி வாருங்கள்(ஒரு)

விடை

நீங்கள் வரும்போது எனக்கு ஒரு புத்தகம் வாங்கி வாருங்கள்.

நாம் உரங்கள் தயாரித்து உழவர்களுக்கு வழங்க வேண்டும்(இயற்கை)

விடை

நாம் இயற்கை உரங்கள் தயாரித்து உழவர்களுக்கு வழங்க வேண்டும்.

நான் சொன்ள வேலையை அக்கறையுடன் செய்திருக்கிறார்கள். (மிகுந்த)

விடை

நான் சொன்ன வேலையை மிகுந்த அக்கறையுடன் செய்திருக்கிறார்கள்.

 

சொல்லக் கேட்டு எழுதுக

மல்லெடுத்து

பண்டமாற்று வணிகம்

வேளாண்மை

கதிர்ச்சுடர்

மின்னணுப் பரிமாற்றம்.

அண்மைச்சுட்டு

நாட்டுப்புறப்பாடல்

பட்டினப்பாலை

புறவினா

 

கீழ்க்கண்ட பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக

மனிதர்களுக்குத் தேவையான பொருள்களைக் கிடைக்கச் செய்வதே வணிகத்தின் நோக்கங்களுள் ஒன்றுஓர் இடத்தில் உற்பத்தியாகும் பொருள்களைப் பல இடங்களுக்கு அனுப்புவதும் பல இடங்களில் கிடைக்கும் பொருள்களை ஓர் இடத்தில் கிடைக்கச் செய்வதும் வணிகம் ஆகும்.

கிடைக்கும் பொருள்களின் மதிப்பைக் கூட்டிப் புதிய பொருளாக மாற்றுவது சிறந்த வணிகமாகும்சான்றாகக் கல் என்பது விற்பனைப் பொருளன்றுஆனால் அதனைச் செதுக்கிச் சிலையாக மாற்றலாம்உதிரும் கல்தூளைக் கோலமாவாக மாற்றலாம்இதனை மதிப்புக் கூட்டுதல் என்பர்.


1. கிடைக்கும் பொருள்களின் ---------- க் கூட்டிப் புதிய பொருளாக மாற்றுவது சிறந்த வணிகம்.

 (அளவை

(மதிப்பை

(எண்ணிக்கையை

(எடையை

[விடை : (மதிப்பை]

 

2. சிலை செதுக்கப்படும்போது உதிரும் கல்தூளை கோலமாவாக மாற்றலாம்.

 

3. வணிகத்தின் நோக்கம் என்ன?

விடை

மனிதர்களுக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் கிடைக்கச் செய்வதே வணிகத்தின் நோக்கம் ஆகும்.

 

4. மதிப்புக் கூட்டுதல் என்றால் என்ன?

விடை

கல்லைச் செதுக்கிச் சிலையாக மாற்றலாம். உதிரும் கல்தூளைக் கோலமாவாக மாற்றலாம். இது மதிப்புக் கூட்டுதல் எனப்படும்.

 

5இப்பத்திக்கு ஏற்ற தலைப்பை எழுதுக

விடை : வணிகம்.

 

கடிதம் எழுதுக.

பிறந்த நாள் பரிசு அனுப்பிய மாமாவுக்கு நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதுக.


 

மொழியோடு விளையாடு

 

 

விடுகதைக்கு விடை காணுங்கள்

(கப்பல்ஏற்றுமதி இறக்குமதிதராசுநெல்மணிகுதிரை)

1) தனி ஆளாய் இருந்தால் நடுநிலையாய் இருந்திடுவான்யாரும் வந்து அமர்ந்தால் ஏற்றம் இறக்கம் காட்டிடுவான்அவன் யார்?

விடை : தராசு

2) தண்ணீரில் கிடப்பான்தள்ளாடித் தள்ளாடி நடப்பான்காலில்லாத அவன் யார்?

விடை : கப்பல்

3) பேசமுடியாத ஓட்டப்பந்தய வீரனுக்கு வாய்க்கு மட்டும் பூட்டுஅவன் யார்?

விடை : குதிரை

4) இயந்திரத்தால் செய்ய முடியாத மணிஊசி நூலில் கோக்க முடியாத மணிபூமியில் வினையும் மணிபூவுலகத்தார் விரும்பும் மணிஎந்த மணி?

விடை : நெல்மணி

5ஒருமதி வெளியே போகும்ஒருமதி உள்ளே வரும்இருமதியும் சேர்ந்துவிட்டால் பலநிதியும் சேர்ந்து வரும்அவை என்ன?

விடை : ஏற்றுமதி இறக்குமதி

 

பின்வரும் நவமணிகளை அகரவரிசைப்படுத்தி எழுதுக.

நீலம்கோமேதகம்மாணிக்கம்வைரம்பவளம்வைடூரியம்முத்துபுஷ்பராகம்மரகதம்

விடை

1. கோமேதகம்

2. நீலம்

3. பவம்

4. புஷ்பராகம்

5. மரகதம்

6. மாணிக்கம்

7. முத்து

8. வைடூரியம்

9. வைரம்.

 

செயல்திட்டம்

1. பண்டைத் தமிழகத்தின் துறைமுகங்கள் பற்றியும் அங்கு ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களைப் பற்றியும் எழுதுக.

விடை

சென்னைதூத்துக்குடி துறைமுகங்களோடு தற்போது எண்ணூரிலும் முக்கிய துறைமுகம் ஏற்பட இருக்கின்றது. தமிழக வரலாற்றில் கடல்வழிப் போக்குவரத்தும்வணிக துறைமுகங்களும் கீர்த்திப் பெற்றதாக இருந்துள்ளது. கொற்கைபழைய காயல்தொண்டிகாவிரிபூம்பட்டினம்முசிறிஉவரிமாமல்லபுரம் போன்ற இடங்களில் ஆதியில் துறைமுகங்கள்வணிகத் தலங்களாக அமைந்திருந்தன.

இத்துறைமுகங்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பு பல நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தது. கொற்கை முத்தின் சிறப்பை அர்த்தசாஸ்திரம் கூறுகிறது. டாக்டர் கால்டுவெல்லும் பழைய காயல்கொற்கை பெருமைகளைப் பாராட்டியுள்ளார். மார்கோ போலோவும் தன்னுடைய குறிப்பில்இந்த நகர அமைப்புகள்மாட மாளிகைகள் தன்னைக் கவர்ந்ததாக கூறியுள்ளார். உலக அழகி கிளியோபாட்ரா கொற்கை முத்தை அணிந்ததாக பிளினி குறிப்பிட்டுள்ளார்.

கொற்கைபுகார் போன்ற துறைமுகங்களில் அரேபிய குதிரைகள் ஓடுகின்ற சத்தம்பொருட்களை வாங்கும் பொழுது ரோமானியர்கள் கொடுக்கும் பொற்காசுகளின் சலசலப்புஉயர்தமிழ் செம்மொழிக்கு ஒப்ப அரபிரோமானியரின் மொழிபேச்சுக்கள்இரவு நேரங்களில் வெளிநாட்டு லாந்தர்களின் மந்தகாச ஒளிவெளிநாட்டினர் நடமாட்டத்தில் தூங்கா நகரங்களாக இவை இருந்தன. இந்துகிறித்துவம்இஸ்லாம் மத நல்லிணக்கமும் பேணப்பட்டது.

இந்தத் துறைமுகங்கள் பண்டைய காலத்தில் கடற்கொள்ளையர் அணுக முடியாத வகையில் பாதுகாப்பானதாக இருந்துள்ளன. கொற்கை முத்து மற்றும் சேர நாட்டிலிருந்து வந்த மிளகுஏலம்கிராம்புஇலவங்கம்இஞ்சிமெல்லியத் துணிகள்அரிசிவைரம்யானைத் தந்தம்பழங்கள் போன்ற பொருட்களை யவனர்உரோமர்எகிப்தியர்கிரேக்கர் ஆகியோர் தங்களுடைய பொற்காசுகளைக் கொடுத்துதமிழ் மண்ணிலிருந்து கடல் வழியாக எடுத்துச் சென்றதற்குச் சான்றுகள் உள்ளன.

 

2. உங்களுக்குத் தெரிந்த மூன்று தொழில்களின் பெயர்களை எழுதுகஅத்தொழிலின் தொடர்புடைய ஐந்தைந்து சொற்களைப் பட்டியலிடுக.

(.கா.) உழவுத் தொழில் - ஏர்கலப்பை, ----------, ---------------, ---------------.

விடை

(i) உழவுத்தொழில் – கலப்பைஅறுவை இயந்திரம்விதைகள்பூச்சிக்கொல்லி மருந்துகள்இயற்கை உரங்கள்.

(ii) நெசவுத்தொழில் – ஊடைநூல்பாவுநூல்கரக்கோல்மிதிக்கட்டைகத்திக் கயிறு

(iii) தச்சுத்தொழில் – உளிஅரம்மரப்பலகைகள்ஒட்டுப்பலகைகள்சுத்தி.

(iv) உணவுத்தொழில் – பாத்திரங்கள் (தட்டுகரண்டிகுவளைகள்சிறு பாத்திரங்கள்பெரிய பாத்திரங்கள்) அடுப்புசமையலுக்குத் தேவையான பொருட்கள்.

 

குறுக்கெழுத்துப் புதிர்


இடமிருந்து வலம்

1. நானிலம் படைத்தவன் பாடலை எழுதியவர்.

2. சுட்டிக்காட்டப் பயன்படுவது ……………. எழுத்து

வலமிருந்து இடம்

4. அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது.

5. ஒரு பொருளைக் கொடுத்து வேறு பொருளைப் பெறும் முறை.

மேலிருந்து கீழ்

1. காடும் காடு சார்ந்த இடமும்

3. தோட்டத்தைச் சுற்றி …………… அமைக்க வேண்டும்.

கீழிருந்து மேல்

4. மீனவருக்கு மேகம் ……………. போன்றது.

5. உடலுக்குப் போர்வையாக அமைவது.

விடைகள் :

இடமிருந்து வலம் : 1. முடியரசன்2. சுட்டு

மேலிருந்து கீழ் : 1. முல்லை 3. வேலி

வலமிருந்து இடம் : 4. குதிரை5. பண்டமாற்று

கீழிருந்து மேல் : 4. குடை5. பனி மூட்டம் 1.

 

 

நிற்க அதற்குத் தக

 

என் பொறுப்புகள்

1. இந்தியக் குடிமகனாக எனது கடமையை நிறைவேற்றுவேன்.

2. கலப்படம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவேன்.

3. நெகிழிப் பயன்பாட்டை இயன்றவரை தவிர்ப்பேன்.

4. கடைக்குச் செல்லும்போது துணிப்பைகளை எடுத்துச் செல்வேன்.

 

கலைச்சொல் அறிவோம்

1. பண்ட ம் – Commodity

2. கடற்பயணம் – Voyage

3. பயணப் படகுகள் – Ferries

4. தொழில் முனைவோர் – Entrepreneur

5. பாரம்பரியம் – Heritage

6. கலப்படம் – Adulteration

7. நுகர்வோர் – Consumer

8. வணிகர் – Merchant

 

இணையத்தில் காண்க

 

பல்வேறு நிறுவனங்களின் கைப்பேசி விலைப் பட்டியலையும் அதன் சிறப்பு இயல்புகளையும் இணையத்தில் கண்டு தொகுத்து வருக.

 

இணையச் செயல்பாடுகள்


படிகள்:

• கொடுக்கப்பட்டிருக்கும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்திச் சொல்லினம் என்னும் செயலியைப் பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்க.

• செயலியின் முதல் பக்கத்தில் எளிமை கடினம் என்னும் இரு தெரிவுகள் தோன்றும்ஏதேனும் ஒன்றைத் தெரிவு செய்து கொடுக்கப்பட்டிருக்கும் எழுத்துகளில் இருந்து புதிய சொற்களை உருவாக்குக.


செயல்பாட்டிற்கான உரவி

https://play.google.com/store/apps/details?id=com.nilatech.Sollinnm

"கொடுக்கப்பட்டுள்ள படங்கள்அடையாளத்திற்காக மட்டுமே



கற்பவை கற்றபின் 



கரிகாலனும் அவனுடைய தங்கை மலர்க்கொடியும் பூங்காவிற்குச் சென்றனர்அங்கு இருந்த செடிகளில் பூக்கள் மலர்ந்து இருந்தன. "இங்கு உள்ள மலர்களில் இம்மலர் அழகாக உள்ளதுஅம்மலர் பெரியதாக உள்ளதுஎன்றாள் மலர்க்கொடிஇந்த மலரைப் பார் அந்த மலரை விட அழகாக உள்ளதுஎன்றான் கரிகாலன்.

1. இப்பத்தியில் உள்ள சுட்டுச் சொற்களை எடுத்து எழுதுக

விடை

இப்பத்தியில் உள்ள சுட்டுச் சொற்கள் :

அவனுடையஅங்குஇங்குஇம்மலர்அம்மலர்இந்தஅந்த

2. நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் சுட்டுச் சொற்கள் சிலவற்றை எழுதுக.

விடை

நாங்கள் அன்றாடம் பயன்படுத்தும் சுட்டுச் சொற்கள் :

அதுஅவர்கள்அவள்அவைஅந்த வீடுஇதுஇவர்கள்இவள்இவைஇந்த வீடுஇப்புத்தகம்அப்புத்தகம்இப்பையன்அப்பையன்.


பத்தியில் உள்ள வினாச் சொற்களை எடுத்து எழுதுக.

செழியன் துணிக்கடைக்குச் சென்றான்விற்பனையாளர் ஒருவரிடம் ஆயத்த ஆடைகள் பகுதி எங்கு உள்ளது?” என்று வினவினான். "யாருக்கு ஆடை வேண்டும்உனக்கா பெரியவர்களுக்கா?" என்று கேட்டார் விற்பனையாளர். "ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்சிறுவர்களுக்கான ஆடைகள் இல்லையோ?' என்று வினவினான்நீ கேட்பது உன் அளவுக்குரிய ஆடைதானேஅதோ அந்தப் பகுதியில் இருக்கிறதுஎன்றார் விற்பனையாளர்.

விடை

பத்தியில் உன்ன வினாச்சொற்கள் :

1. எங்கு ?

2. யாருக்கு?

3. ஏன்?

4. இல்லையோ?

5. ஆடைதானே?

Tags : Term 2 Chapter 3 | 6th Tamil பருவம் 2 இயல் 3 | 6 ஆம் வகுப்பு தமிழ்.
6th Tamil : Term 2 Chapter 3 : Kudi tholil sai : Tamil Language Exercise - Questions and Answers Term 2 Chapter 3 | 6th Tamil in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : கூடித் தொழில் செய் : மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் - பருவம் 2 இயல் 3 | 6 ஆம் வகுப்பு தமிழ் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : கூடித் தொழில் செய்