Home | 6 ஆம் வகுப்பு | 6வது தமிழ் | துணைப்பாடம்: உழைப்பே மூலதனம்

பருவம் 2 இயல் 3 | 6 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: உழைப்பே மூலதனம் | 6th Tamil : Term 2 Chapter 3 : Kudi tholil sai

   Posted On :  30.06.2023 09:21 am

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : கூடித் தொழில் செய்

துணைப்பாடம்: உழைப்பே மூலதனம்

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : கூடித் தொழில் செய் : துணைப்பாடம்: உழைப்பே மூலதனம் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் மூன்று

விரிவானம்

உழைப்பே மூலதனம்


 

நுழையும்முன்

பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர்" என்பது ஒளவையாரின் அறிவுரை. பணத்தைப் பயன்படுத்தாமல் வைத்திருப்பது மடமை ஆகும். பணத்தைக் கொண்டு ஏதேனும் ஒரு தொழில் செய்து வாழ்வில் முன்னேற வேண்டும். பிறருக்கு உதவியாக வாழ வேண்டும். அதுவே பணத்தின் பயன். இக்கருத்தை விளக்கும் கதை ஒன்றை அறிவோம் வாருங்கள்.

பூங்குளம் என்னும் ஊரில் அருளப்பர் என்னும் வணிகர் இருந்தார். ஒருமுறை அவர் வெளிநாட்டிற்குச் செல்ல வேண்டி இருந்தது. தமது பிள்ளைகள் வளவன், அமுதா, எழிலன் ஆகிய மூவரையும் அழைத்தார்.

'பின்ளைகளே! நான் வெளிநாட்டிற்குச் செல்வ இருக்கிறேன். நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் பணம் தருகிறேன். நான் கொடுத்த பணத்தைக் கவனமாகப் பாதுகாத்து எனக்குத் திருப்பித்தர வேண்டும்" எனக் கூறினார்.


ஒவ்வொருவருக்கும் ஐம்பதாயிரம் ரூபாய் பணம் கொடுத்தார். மூவரும் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டனர்.

அருளப்பர் அவர்களிடம் விடைபெற்றுச் சென்றார். அவர் சென்றதும் மூன்று பிள்ளைகளும் ஆலோசனை செய்தனர்.

“நமது திறமையை எடைபோடவே தந்தை நமக்குப் பணத்தைக் கொடுத்திருக்கிறார்” என்றான் வளவன்.

“நானும் அப்படித்தான் நினைக்கிறேன்" என்றாள் அமுதா.

நான் அப்படி நினைக்கவில்லை. பணத்தைப் பாதுகாக்கத் தெரிகிறதா? என்று பார்க்கவே கொடுத்திருக்கிறார்' என்றான் எழிலன்.

வளவன் உழவுத்தொழிலில் ஆர்வம் உடையவன். தந்தை கொடுத்த பணத்தைக் கொண்டு நிலத்தைக் குத்தகைக்குப் பிடித்தான். அந்நிலத்தை உழுது பண்படுத்தினான். வேலியிட்டான். பண்படுத்திய நிலத்தில் காய்கறித் தோட்டத்தை அமைத்தான். நாள்தோறும் கவனமுடன் பாதுகாத்துப் பராமரித்து வந்தான்.

தோட்டம் முழுவதும் அவரை, பாகல், வெண்டை, கத்தரி முதலிய காய்கள் காய்த்துக் குலுங்கின. அவற்றை நகரத்திற்குக் கொண்டு சென்று விற்பனை செய்தான்.

அமுதாவிற்கு ஆடு, மாடுகள் வளர்ப்பதில் விருப்பம் அதிகம். தந்தை கொடுத்த பணத்தைக் கொண்டு நாட்டு மாடுகள் சிலவற்றை வாங்கினாள். அவற்றை அக்கறையோடு. வளர்த்து வந்தாள். அவை சுந்த பாலை வீடு வீடாகச் கொண்டு சென்று விற்றாள். மேலும் தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றை மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் விற்றுப் பொருள் ஈட்டினாள்.


எழிலன் தந்தை கொடுத்த பணத்தைப் பத்திரமாக வைத்திருந்து மீண்டும் தந்தையிடம் ஒப்படைக்க வேண்டும் என முடிவு செய்தான்.'பணம் விட்டில் இருந்தால் திருட்டுப் போய்விடும்; வட்டிக்கு முதலீடு செய்தால் வட்டிக்கு ஆசைப்பட்டான் எனத் தந்தை தாழ்வாக நினைத்துக் கொள்வாரே' என எண்ணினான். அருகில் உள்ள வங்கிக்குச் சென்று பாதுகாப்புப் பெட்டக அறை ஒன்றை வாடகைக்கு எடுத்தான். அதில் வைத்துப் பூட்டி விட்டுத் திரும்பினான்.

அருளப்பர் தம் பயணத்தை முடித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார். வளவனை அழைத்தார். 'நான் கொடுத்த பணம் எங்கே?" என்று கேட்டார். வளவன் "அப்பா, நீங்கள் எனக்குக் கொடுத்த பணத்தைக் கொண்டு வேளாண்மை செய்தேன். நல்ல வருவாய் கிடைத்தது. நீங்கள் கொடுத்த பணம் இப்போது இரண்டு மடங்காக உயர்ந்து உள்ளது" எனச் கூறித் தந்தையின் முன் பணத்தை வைத்தான்.

தந்தை மகிழ்ச்சி அடைந்தார். "நல்லது! உண்மையும் உழைப்பும் உன்னிடமும் உள்ளன. அந்தப் பணத்தை நீயே வைத்துக் கொள். வேளாண்மையைத் தொடர்ந்து செய்" என்றார்.

அடுத்து அமுதாவை அழைத்தார். அமுதா, 'அப்பா நான் மாடுகளை வாங்கிப் பால் கறந்து விற்றேன். நீங்கள் தந்த பணம் இரண்டு மடங்காக ஆகியிருக்கிறது. இதோ பெற்றுக் கொள்ளுங்கள்" என்று கூறிப் பணத்தைத் தந்தையிடம் கொடுத்தான். 'மிக்க மகிழ்ச்சி, இந்தப் பணத்தை எனது பரிசாக நியே வைத்துக்கொள். பண்ணையை மேலும் விரிவாக்கி நடத்து, வாழ்த்துகள்" என்றார் தந்தை.

இறுதியாக எழிலனை அழைத்தார் தந்தை. அவன் வங்கியிலிருந்து தந்தை கொடுத்த தொகையை எடுத்து வந்தான். "அப்பா நீங்கள் கொடுத்த பணத்தை வங்கிப் பாதுகாப்புப் பெட்டகத்தில் பத்திரமாக வைத்திருந்தேன்" என்று கூறிக் கொடுத்தான்.

பணம் என்பது வங்கி காப்பறையில் வைத்துப் பாதுகாக்க வேண்டிய பொருளன்று. அதைப் பயன்படுத்தித் தொழில் செய்து முன்னேறுவது இளம் வயதும் ஆற்றலும் உடையோர் செயல். எழிலா! "நீ பணத்தையும் பயன்படுத்தவில்லை. காலத்தையும் வீணாக்கிவிட்டாய். வயதில் இளையவன் நீ. என்னுடன் சிறிதுகாலம் உடனிருந்து தொழிலைக் கற்றுக்கொள். உன் எதிர்கால வாழ்வுக்கு அது உதவும்" என்றார். எழிலன் தன் தவற்றை உணர்ந்தான். தந்தையிடம் தொழில் கற்று முன்னேற வேண்டும் என முடிவு செய்தான்.

Tags : Term 2 Chapter 3 | 6th Tamil பருவம் 2 இயல் 3 | 6 ஆம் வகுப்பு தமிழ்.
6th Tamil : Term 2 Chapter 3 : Kudi tholil sai : Supplementary: Ulaipe mooladanam Term 2 Chapter 3 | 6th Tamil in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : கூடித் தொழில் செய் : துணைப்பாடம்: உழைப்பே மூலதனம் - பருவம் 2 இயல் 3 | 6 ஆம் வகுப்பு தமிழ் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : கூடித் தொழில் செய்