Home | 6 ஆம் வகுப்பு | 6வது தமிழ் | உரைநடை: வளரும் வணிகம்

பருவம் 2 இயல் 3 | 6 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: வளரும் வணிகம் | 6th Tamil : Term 2 Chapter 3 : Kudi tholil sai

   Posted On :  30.06.2023 09:06 am

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : கூடித் தொழில் செய்

உரைநடை: வளரும் வணிகம்

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : கூடித் தொழில் செய் : உரைநடை: வளரும் வணிகம் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் மூன்று

உரைநடை உலகம்

வளரும் வணிகம்



நுழையும்முன்

மனிதர் வாழ்வில் வணிகம் பெரும்பங்கு வகிக்கிறது. வணிகம் இல்லையேல் மனிதர்கன் தம் தேவைகளை எளிதாக நிறைவேற்றிக் கொள்ள இயலாது. வணிகம் பல வகைகளில் நடைபெறுகிறது. வணிக நிறுவனங்களும் பல வகைகளாக உள்ளன. தமிழர் பழங்காலத்தில் இருந்தே வணிகத்தில் சிறந்து விளங்கினர். உலகம் முழுவதும் வணிகத்தொடர்பு கொண்டு இருந்தனர், அதனை அறிந்து கொள்வோம் வாருங்கள்.


மனிதன் தனக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் தானே உற்பத்தி செய்து கொள்ள முடியாது. தளக்குத் தேவையான சில பொருள்களை உற்பத்தி செய்யும் பிறரிடமிருந்து வாங்குவான். தான் உற்பத்தி செய்யும் பொருள்களில் சிலவற்றைப் பிறருக்கு விற்பான். இவ்வாறு ஒரு பொருளைப் பிறரிடம் இருந்து வாங்குவதும் பிறருக்கு விற்பதும் வணிகம் ஆகும். பொருள்களை விற்பவரை வணிகர் என்பர்; வாங்குபவரை நுகர்வோர் என்பர்.

பண்டமாற்று வணிகம்

நம்மிடம் கூடுதலாக இருக்கும் பொருள்களைக் கொடுத்து நமக்குத் தேவையான பொருள்களைப் பெற்றுக் கொள்வது பண்டமாற்று வணிகம் ஆகும். நெல்லைக் கொடுத்து அதற்குப் பதிவாக உப்பைப் பெற்றனர். ஆட்டின் பாலைக் கொடுத்துத் தானியத்தைப் பெற்றனர். இந்தச் செய்திகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. இக்காலத்தில் கூட வீட்டிற்கே வந்து பழைய செய்தித்தாள்கள், பயனற்ற நெகிழிப் பொருள்கள் போன்றவற்றைப் பெற்றுக்கொள்கின்றனர். அதற்குப் பதிலாக வீட்டிற்குப் பயன்படும் பொருள்களைத் தருகின்றனர்.

வணிகத்தின் வகைகள்

வணிகத்தைத் தரைவழி வணிகம், நீர்வழி வணிகம் எனப் பிரிக்கலாம். தரைவழியாகப் பொருள்களைக் கொண்டு செல்ல எருது, கழுதை, குதிரை போன்ற விலங்குகளும் வண்டிகளும் பயன்படுத்தப்பட்டன. வணிகர்கள் வண்டிகளில் பொருள்களை ஏற்றி வெளியூருக்குச் செல்லும் போது குழுவாகவே செவ்வார்கள். இக்குழுவை வணிகச்சாத்து என்பர். கடல்வழியாகக் கப்பல்கள் மூலம் பொருள்களை அனுப்புவதும் வரவழைப்பதும் நீர்வழி வணிகம் ஆகும். கப்பல்கள் வந்து நின்றுபோகும் இடங்கள் துறைமுகங்கள் ஆகும். துறைமுக நகரங்கள் பட்டினம் என்றும் பாக்கம் என்றும் குறிக்கப்பட்டன.

தெரிந்து தெளிவோம்.

தந்நாடு விலைந்த வெண்ணெல் தந்து

பிறநாட்டு உப்பின் கொள்ளைச் சாற்றி

.............

உமணர் போகலும்

நற்றிணை-183

பாலொடு வந்து கூழொடு பெயரும் .............

குறுந்தொகை - 23

பொன்னொடு வந்து கறியொடு பெயரும்.....

அகநானூறு 149

தமிழ்நாட்டின் தலைசிறந்த துறைமுகமாகப் பூம்புகார் விளங்கியது. அவ்வூர்த் துறைமுகத்தில் பல்வேறு நாட்டுக் கப்பல்கள் தத்தம் நாட்டுக் கொடிகளோடு வந்து நின்றன. அவற்றின் மூலம் வெளிநாட்டுப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன. தமிழ்நாட்டுப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

வணிகத்தைத் தனிநபர் வணிகம், நிறுவன வணிகம் என்றும் பிரிக்கலாம். தனிநபரால் உருவாக்கப்பட்டு நடத்தப்படும் வணிகம் தனிநபர் வணிகம் ஆகும். ஒன்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து முதலீடு செய்து நடத்துவது நிறுவன வணிகம் ஆகும்.

சிறுவணிகம்


நம் அன்றாடத் தேவைகளான பால், கீரை, காய்கறிகள் போன்றவற்றை விற்பனை செய்பவர்கள் சிறு வணிகர்கள் ஆவர். இவர்கள் சிறு முதலீட்டில் பொருள்களை வாங்கி வந்து வீதிகளில் வைத்து விற்பனை செய்வர். தலையில் சுமந்து சென்று விற்றல், தரைக்கடை அமைத்து விற்றல், தள்ளுவண்டி மூலம் விற்றல் போன்ற முறைகளில் சிறு வணிகம் நடைபெறுகிறது. சிறு வணிகர்கள் நுகர்வோரிடம் நேரடித் தொடர்பு கொன்பவர்கள் ஆவர்.

பெருவணிகம்

பெருந்தொகையை முதலீடு செய்து பொருள்களை அதிக அளவில் திரட்டி வைத்து விற்பனை செய்வது பெருவணிகம் ஆகும். பெருவணிகர்கள் பொருள்கள் உற்பத்தி செய்யப்படும் இடத்தில் இருந்து மொத்தமாகக் கொள்முதல் செய்வர். அவற்றைச் சிறுவணிகர்களுக்கு விற்பனை செய்வர். பெருவணிகர்களுக்கு நுகர்வோருடன் நேரடித் தொடர்பு இருப்பது அரிது.

ஏற்றுமதியும் இறக்குமதியும்


ஒரு நாட்டில் நாட்டில் உற்பத்தி உற்பத்தி செய்யப்படும் பொருள்களைப் பிற நாடுகளுக்கு அனுப்புவது ஏற்றுமதி எனப்படும். பிற நாடுகளில் இருந்து பொருள்களை வாங்குவது இறக்குமதி ஆகும். பழங்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து தேக்கு, மயில்தோகை, அரிசி, சந்தனம், இஞ்சி, மிளகு போன்றவை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. சீனத்திலிருந்து கண்ணாடி, கற்பூரம், பட்டு போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன. அரேபியாவில் இருந்து குதிரைகள் வாங்கப்பட்டன.

வணிகத்தில் நேர்மை

அக்கால வணிகர்கள் நேர்மையாகத் தொழில் செய்தளர் என்பதைத் தமிழ் இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறவும் தமபோல் செயின்

திருக்குறள் - 120

என்னும் திருக்குறள் வணிகரின் நேர்மையைப் பற்றிக் கூறுகிறது. வணிகர்கள் பொருளை வாங்கும்பொழுது உரிய அளவைவிட அதிகமாக வாங்க மாட்டார்கள். பிறருக்குக் கொடுக்கும் பொழுது அளவைக் குறைத்துக் கொடுக்கமாட்டார்கள். எனவே வணிகரை

"நடுவு நின்ற நன்னெஞ்சினோத்"

என்று பட்டினப்பாலை பாராட்டுகிறது.

இணையவழி வணிகம்


கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்க நேரம் இல்லாதவர்களுக்கு இணையவழி வணிகம் உதவுகிறது. இணையத்தளம் மூலம் பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் பல உள்ளன. இவற்றின் இணையத்தளப் பக்கத்தில் நமக்குத் தேவையான பொருள்களைப் பற்றிய விவரங்கள் இருக்கும். பொருள்களின் தரம், விலை, சிறப்பு ஆகியவற்றைப் பிற நிறுவனப் பொருள்களோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். நமக்குப் பிடித்த பொருள்களை வீட்டிற்கே வரவழைக்கலாம். பொருளைப் பெற்றுக் கொண்ட பிறகு பணம் செலுத்தலாம். மின்னணுப் பரிமாற்றம் மூலமும் பணத்தைச் செலுத்தலாம்.

வணிகம் பண்டமாற்று முறையாகத் தொடங்கியது. பணத்தைப் பயன்படுத்தும் முறையாக வளர்ந்தது. இன்று மின்னணுப் பரிமாற்றம் செய்யும் அளவுக்கு உயர்ந்துள்ளது. வருங்காலத்தில் வணிகத்தில் இன்னும் பல புதுமைகள் வரக்கூடும்.

Tags : Term 2 Chapter 3 | 6th Tamil பருவம் 2 இயல் 3 | 6 ஆம் வகுப்பு தமிழ்.
6th Tamil : Term 2 Chapter 3 : Kudi tholil sai : Prose: Valarum vanigam Term 2 Chapter 3 | 6th Tamil in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : கூடித் தொழில் செய் : உரைநடை: வளரும் வணிகம் - பருவம் 2 இயல் 3 | 6 ஆம் வகுப்பு தமிழ் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : கூடித் தொழில் செய்