Home | 6 ஆம் வகுப்பு | 6வது தமிழ் | உரைநடை: வளரும் வணிகம்: கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 2 இயல் 3 | 6 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: வளரும் வணிகம்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 6th Tamil : Term 2 Chapter 3 : Kudi tholil sai

   Posted On :  30.06.2023 09:17 am

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : கூடித் தொழில் செய்

உரைநடை: வளரும் வணிகம்: கேள்விகள் மற்றும் பதில்கள்

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : கூடித் தொழில் செய் : உரைநடை: வளரும் வணிகம்: கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மதிப்பீடு


சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. வீட்டுப் பயன்பாட்டிற்காகப் பொருள் வாங்குபவர் ............

) நுகர்வோர்

) தொழிலாளி

) முதலீட்டாளர்

) நெசவாளி

[விடை : அ) நுகர்வோர்]

 

2. வணிகம்+சாத்து என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

) வணிகசாத்து

)வணிகம்சாத்து

) வணிகச்சாத்து

) வணிகத்துசாத்து

[விடை : இ) வணிகச்சாத்து]

 

3. பண்டம் + மாற்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

) பண்டமாற்று

) பண்டம்மாற்று

) பண்மாற்று

) பண்டுமாற்று

விடை : ) பண்டமாற்று

 

4. மின்னணு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

) மின் + னணு

) மின்ன + அணு

) மின்னல் + அணு

) மின் + அணு

[விடை : ஈ) மின் + அணு]

 

5. விரிவடைந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

) விரி+வடைந்த

) விரி+அடைந்த

இ) விரிவு + அடைந்த

) விரிவ்+அடைந்த

[விடை : இ) விரிவு + அடைந்த]

 

பின்வரும் சொற்களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக

) வணிகம் ) ஏற்றுமதி ) சில்லறை ) கப்பல்

விடை

அ) வணிகம் ஒரு பொருளைப் பிறரிடம் இருந்து வாங்குவதும் விற்பதும் வணிகம்.

ஆ) ஏற்றுமதி பழங்காலத்தில் மிளகு ஏற்றுமதி செய்யப்பட்டது.

இ) சில்லறை தற்போது சில்லறை தட்டுப்பாடு அதிகமாகி விட்டது.

ஈ) கப்பல் கப்பல்கள் வந்து நிற்கும் இடம் துறைமுகம்.

 

குறுவினா

1. வணிகம் என்றால் என்ன?

விடை

ஒரு பொருளைப் பிறரிடம் இருந்து வாங்குவதும், பிறருக்கு விற்பதும் வணிகம் ஆகும்.

 

2. பண்டமாற்று முறைக்கு எடுத்துக்காட்டுத் தருக.

விடை

நம்மிடம் கூடுதலாக இருக்கும் பொருள்களைக் கொடுத்து நமக்குத் தேவையான பொருள்களைப் பெற்றுக் கொள்வது பண்டமாற்று வணிகம் எனப்படும்.

 

3. சிறுவணிகப் பொருட்கள் யாவை?

விடை

பால், கீரை, காய்கறிகள் போன்றவை சிறுவணிகப் பொருட்கள் ஆகும்.

 

சிறுவினா

1. சிறுவணிகம், பெருவணிகம் - வேறுபடுத்துக.

விடை



2. பழந்தமிழர் ஏற்றுமதி, இறக்குமதி செய்த பொருள்கள் எவை?

விடை

சீனத்திலிருந்து கண்ணாடி, கற்பூரம், பட்டு, அரேபியாவிலிருந்து குதிரைகள்.

 

சிந்தனை வினா

1. வணிகப் பொருள்கள் தற்காலத்தில் எவ்வாறெல்லாம் மக்களை வந்தடைகின்றன?

விடை

(i) வணிகப் பொருள்கள் உற்பத்தியாளரிடமிருந்து மொத்த வியாபாரியிடம் செல்கிறது.

(ii) மொத்த வியாபாரியிடமிருந்து சில்லரை வியாபாரியிடம் செல்கிறது.

(iii) சில்லரை வியாபாரியிடமிருந்து நுகர்வோரை(மக்களை) வந்தடைகின்றது.

(iv) இணையத்தின் மூலமாகவும் பொருள்களை மக்கள் பெறுகின்றனர்.

(v) அஞ்சல் வழியிலும் பொருள்களைப் பெறுகின்றனர்.

 

2.  உங்கள் பகுதியில் நடைபெறும் தொழில்களைப் பட்டியலிடுக.

விடை

(i) பால் வியாபாரம்

(ii) காய்கறி அங்காடி

(iii) செய்தித்தாள் விற்பனையாளர்

(iv) தேநீர் அங்காடி

(v) பல்பொருள் விற்பனையாளர்

 

ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை எடுத்து எழுதுக.

(மின்னணு வணிகம், காசோலை, இணையத்தள வணிகம், வரைவோலை, வங்கி, மின்னணு மயம், பற்று அட்டை, பணத்தாள், கடன் அட்டை)


 


கற்பவை கற்றபின் 

 

 

1. உங்கள் ஊரில் உற்பத்தியாகும் பொருள்களின் பெயர்களைப் பட்டியலிடுக.

விடை

எங்கள் ஊர் நீலகிரி :

(i) தேயிலை, காபி, குறுமிளகு போன்ற பணப்பயிர்.

(ii) பாகற்காய், பீன்ஸ், பூசணி, மஞ்சள், இஞ்சி போன்ற காய்கறிகள்.

(iii) கேரட், கோஸ், நூக்கல், குடைமிளகாய் போன்றவை.

 

2. ஒவ்வொரு ஊரிலும் கிடைக்கும் சிறப்புப் பொருள்களின் பெயர்களை அட்டவணைப்படுத்துக.

(.கா.) மதுரை மல்லி

விடை

சிறப்புப் பொருள்கள் :

(i) மதுரை மல்லி

(ii) திருப்பதி லட்டு

(iii) திருநெல்வேலி அல்வா

(iv) திண்டுக்கல் பூட்டு

(v) மணப்பாறை முறுக்கு

(vi) சேலம் மாம்பழம்

(vii) காஞ்சிபுரம் பட்டு

(viii) பழனி பஞ்சாமிர்தம்

(ix) பொல்லாச்சி இளநீர்

(x) ஊட்டி ரோஜா

(xi) காஞ்சிபுரம் இட்லி

 

3. படித்து மகிழ்க

• கொள்வதும் மிகை கொளாது

கொடுப்பதும் குறைபடாது

- பட்டினப்பாலை

• சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க்கு அணி.

- திருக்குறள்

Tags : Term 2 Chapter 3 | 6th Tamil பருவம் 2 இயல் 3 | 6 ஆம் வகுப்பு தமிழ்.
6th Tamil : Term 2 Chapter 3 : Kudi tholil sai : Prose: Valarum vanigam: Questions and Answers Term 2 Chapter 3 | 6th Tamil in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : கூடித் தொழில் செய் : உரைநடை: வளரும் வணிகம்: கேள்விகள் மற்றும் பதில்கள் - பருவம் 2 இயல் 3 | 6 ஆம் வகுப்பு தமிழ் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : கூடித் தொழில் செய்