Home | 6 ஆம் வகுப்பு | 6வது தமிழ் | வாழ்வியல்: திருக்குறள்

பருவம் 2 இயல் 3 | 6 ஆம் வகுப்பு தமிழ் - வாழ்வியல்: திருக்குறள் | 6th Tamil : Term 2 Chapter 3 : Kudi tholil sai

   Posted On :  30.06.2023 09:57 am

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : கூடித் தொழில் செய்

வாழ்வியல்: திருக்குறள்

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : கூடித் தொழில் செய் : வாழ்வியல்: திருக்குறள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

திருக்குறள்

 

விருந்தோம்பல் (9)

1) இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்துஓம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு.

2) விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

மருந்துஎனினும் வேண்டற்பாற்று அன்று.

3) வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை

பருவந்து பாழ்படுதல் இன்று.

4) அகன்அமர்ந்து செய்யாள் உறையும் முகன்அமர்ந்து

தவ்விருந்து ஒம்புவான் இல்.

5) வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி

மிச்சில் மிசைவான் புலம்.

6) செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்துஇருப்பான்

நல்விருந்து வானத் தவர்க்கு.

7) இனைத்துணைத்து என்பதொன்று இல்லை விருந்தின்

துணைத்துணை வேள்விப் பயன்.

8) பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி

வேள்வி தலைப்படா தார்.

9) உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா

மடமை மடவார்கண் உண்டு.

10) மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து..

 

கள்ளாமை (29)

1) எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்துஒன்றும்

கள்ளாமை காக்கதன் நெஞ்சு.

2) உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்

கள்ளத்தால் கள்வேம் எனல்.

3) களவினால் ஆகிய ஆக்கம் அளவுஇறந்து

ஆவது போலக் கெடும்.

4) களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்

வீயா விழுமம் தரும்.

5) அருள்கருதி அன்புடையர் ஆதல் பொருள்கருதிப்

பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.

6) அளவின்கண் நின்றுஒழுகல் ஆற்றார் களவின்கண்

கன்றிய காத லவர்.

7) களவுஎன்னும் கார்அறி வாண்மை அளவுஎன்னும்

ஆற்றல் புரிந்தார்கண் இல்.

8) அளவுஅறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும்

களவுஅறிந்தார் நெஞ்சில் கரவு.

9) அளவுஅல்ல செய்துஆங்கே வீவர் களவுஅல்ல

மற்றைய தேற்றா தவர்.

10) கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்

தள்ளாது புத்தேள் உலகு.

 

 

ஊக்கமுடைமை (60)

1) உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதுஇல்லார்

உடையது உடையரோ மற்று.

2) உள்ளம் உடைமை உடைமை பொருள்உடைமை

நில்லாது நீங்கி விடும்.

3) ஆக்கம் இழந்தேம்என்று அல்லாவார் ஊக்கம்

ஒருவந்தம் கைத்துஉடையார்.

4) ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

ஊக்கம் உடையான் உழை.

5) வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத்து அனையது உயர்வு.

6) உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல் மற்றுஅது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து,

7) சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதைஅம்பின்

பட்டுப்பாடு ஊன்றும் களிறு.

8) உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து

வள்ளியம் என்னும் செருக்கு.

9) பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை

வெரூஉம் புலிதாக் குறின்.

10) உரம்ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃது இல்லார்

மரம்மக்கள் ஆதலே வேறு

 

 

பயனில சொல்லாமை (20)

1) பல்லார் முனியப் பயன்இல சொல்லுவான்

எல்லாரும் எள்ளப் படும்.

2) பயன்இல பல்லார்முன் சொல்லல் நயன்இல

நட்டார்கண் செய்தலின் தீது.

3) நயனிலன் என்பது சொல்லும் பயன்இல

பாரித்து உரைக்கும் உரை.

4) நயன்சாரா நன்மையின் நீங்கும் பயன்சாராப்

பண்புஇல்சொல் பல்லார் அகத்து.

5) சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இல

நீர்மை உடையார் சொலின்.

6) பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்

மக்கட் பதடி எனல்.

7) நயன்இல சொல்லினும் சொல்லுக சான்றோர்

பயனில சொல்லாமை நன்று.

8) அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்

பெரும்பயன் இல்லாத சொல்.

9) பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த

மாசறு காட்சி யவர்.

10) சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க

சொல்லில் பயனிலாச் சொல்.

வான்புகழ் வள்ளுவரின் அறக்கருத்துகள் மாணவரிடம் சென்று சேர வேண்டும். அதன்வழி நன்னெறிப் பண்புகள் மாணவரிடையே வளர வேண்டும் என்ற நோக்கில் திருக்குறளின் 40 பாக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் எளிதில் படித்துப் பொருள் புரிந்துகொள்வதற்கு ஏற்றவகையில் குறட்பாக்களின் சீர்கள் பிரித்துத் தரப்பட்டுள்ளன;அலகிடுவதற்காக அன்று.

 

திருக்குறள் கருத்துகளை

மாணவர்களிடையே பரப்புவதற்கான வழிகாட்டுதல்கள்

• நாள்தோறும் வழிபாட்டுக் கூட்டத்தில் திருக்குறளைப் பொருளுடன் கூறலாம்.

• வகுப்பு வாரியாகத் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடத்தலாம்.

• இலக்கிய மன்றக் கூட்டங்களில் குறட்பாக்கள் தொடர்பான கதைகளைக் கூறலாம்.

• திருக்குறள் கருத்துகளை விளக்கும் நாடகங்களை நடத்தச் செய்யலாம்.

• திருக்குறள் கருத்துகளை விளக்கும் ஒவியப் போட்டியை நடத்தலாம்.

• குறட்பாக்கள் தொடர்பான வினாக்களைத் தொகுத்து வினாடி வினா நடத்தலாம்.

• சான்றோர் வாழ்வில் நிகழ்ந்த சுலையான நிகழ்ச்சிகள் மூலம் திருக்குறள் கருத்துகளை விளக்கலாம்.

• உலகப் பொதுமறையாம் திருக்குறளில் இடம் பெற்றிருக்கும் நன்னெறிக் கருத்துகளின் அடிப்படையில் நீதிக்கதைகள் இசைப்பாடல்கள் சித்திரக் கதைகள் அசைவூட்டப் படங்கள் ஆகியவற்றை உருவாக்கி அவற்றின் வாயிலாகத் திருக்குறள் வளங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கலாம்.

Tags : Term 2 Chapter 3 | 6th Tamil பருவம் 2 இயல் 3 | 6 ஆம் வகுப்பு தமிழ்.
6th Tamil : Term 2 Chapter 3 : Kudi tholil sai : Valviyal: Thirukkural Term 2 Chapter 3 | 6th Tamil in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : கூடித் தொழில் செய் : வாழ்வியல்: திருக்குறள் - பருவம் 2 இயல் 3 | 6 ஆம் வகுப்பு தமிழ் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : கூடித் தொழில் செய்