மாறுதிசை மின்னோட்டச் சுற்றுகளின் திறன் - திறன் காரணி | 12th Physics : UNIT 4 : Electromagnetic Induction and Alternating Current

   Posted On :  12.10.2022 01:58 am

12 வது இயற்பியல் : அலகு 4 : மின்காந்தத்தூண்டலும் மாறுதிசைமின்னோட்டமும்

திறன் காரணி

ஒரு சுற்றின் திறன் காரணி கீழ்க்கண்ட வழிகளில் வரையறுக்கப்படுகிறது.

திறன் காரணி (Power factor)

ஒரு சுற்றின் திறன் காரணி கீழ்க்கண்ட வழிகளில் வரையறுக்கப்படுகிறது.

(i) திறன் காரணி = cos Ø  = முந்தி அல்லதுபின்தங்கி உள்ள கட்டக்கோணத்தின் கொசைன் மதிப்பு

(ii) திறன் காரணி = R/Z = மின்தடை/ மின்எதிர்ப்பு

(iii) திறன் காரணி = Pav/ VRMSIRMS

= உண்மைத் திறன்/ தோற்றத்திறன்


திறன் காரணிகளுக்கான சில எடுத்துக்காட்டுகள்

(i) மின்தடைப் பண்புள்ள ஒரு சுற்றுக்கு திறன்காரணி = cos 0° = 1. ஏனெனில் மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டம் இடையேஉள்ள கட்ட கோணம் சுழியாகும்.

(ii) மின்தூண்டல் அல்லது மின்தேக்கிப் பண்புள்ளஒரு சுற்றுக்கு திறன் காரணி = cos(±π/2)=0. ஏனெனில் மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டம் இடையே உள்ள கட்ட கோணம்±π/2.

(iii) R, L மற்றும் C ஐ மாறுபட்ட விகிதங்களில்கொண்டுள்ள ஒரு சுற்றுக்கு திறன் காரணி 0 முதல் 1 வரை இருக்கும்.

Tags : Power in AC Circuits மாறுதிசை மின்னோட்டச் சுற்றுகளின் திறன்.
12th Physics : UNIT 4 : Electromagnetic Induction and Alternating Current : Power factor Power in AC Circuits in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது இயற்பியல் : அலகு 4 : மின்காந்தத்தூண்டலும் மாறுதிசைமின்னோட்டமும் : திறன் காரணி - மாறுதிசை மின்னோட்டச் சுற்றுகளின் திறன் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது இயற்பியல் : அலகு 4 : மின்காந்தத்தூண்டலும் மாறுதிசைமின்னோட்டமும்