சொத்து
சொத்து என்பது இயற்கை உரிமையாகும். அது மனித மாண்பு, சுதந்திரம் மற்றும் மாண்பமை வாழ்விற்கு அவசியமாகிறது. சொத்து என்பது மனிதனுடன் சட்ட தொடர்புடைய பொருள்களாகவோ அல்லது புலனாகாதவைகளாவோ இருக்கலாம்.
லாக்கின் கூற்றுப்படி அரசாங்கத்தின் முக்கிய பணி என்பது குடிமக்களின் உரிமைகளைக் காப்பதுடன், அமைதியான முறையில் தங்களின் சொத்துக்களை அனுபவிக்கும் நிலையினை உருவாக்கி அவர்களை மகிழ்ச்சியுடன் வாழச் செய்வதாகும். மனித இனம் வாழ்வதற்கு சொத்து அடிப்படைத் தேவை என்று கூறுகிறார். மனிதர்கள் ஒவ்வொரு தருணத்தைப் பற்றியும் திட்டமிடுவதில்லை. ஆனால் அதே மனிதன் தனது எதிர்கால பொருளாதாரப் பாதுகாப்பிற்காகத் திட்டமிடுகிறான்.
இதனையே பயன்பாட்டு வாதம் கீழ்க்கண்டவாறு கூறுகிறது. "சொத்துரிமை என்பது தனிநபர்க்குத் தேவையானது. அதுவே அவனுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையைக் கொடுக்கிறது. எந்தவொரு அரசாங்கமும் மக்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை அளிக்க நினைத்தால், முதலில் மக்களின் சொத்துரிமைக்குத் தகுந்த பாதுகாப்பு அளித்து உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். எந்த ஒரு அரசும் சொத்துக்களை மக்களிடம் இருந்து பறிக்கக் கூடாது. சொத்து என்பது மக்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருவது என்பது உறுதியாகும்".
21-ஆம் நூற்றாண்டில் பெண்களில் ஆற்றலாதல் துவங்கியவுடன் சம உரிமைக் கோரிக்கை பெண்களால் முன் வைக்கப்பட்டது. இந்த பெண்ணியவாதிகள் கூறுவது என்ன என்றால் பெண்களின் இன்றைய அடிமை நிலைக்குக் காரணம் அவர்களுக்கு வருவாய், நிலம் போன்ற ஆதாரங்கள் மறுக்கப்படுவதாகும். சொத்து உரிமைகள் முழுவதும் ஆண்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு அவர்களால் கட்டுப்படுத்தப்படுவதால் பெண்கள் ஆண்களை சார்ந்தே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது, இந்தச் சார்பு நிலைதான் பெண்கள் தங்களது உரிமைகளையும், சொத்து உரிமையையும் கோருவதற்கு காரணமாக அமைந்து இருக்கின்றது.
இந்திய அரசமைப்பு சொத்து உரிமையை அடிப்படை உரிமையில் இருந்து நீக்கியது. 1978-ஆம் ஆண்டு 44-வது அரசமைப்பு சட்ட திருத்தம் மூலம் சொத்துரிமை நீக்கம் மேற்கொள்ளப்பட்டது எனினும் சொத்துரிமை என்பது விதி 300 (A) யில் சாதாரண உரிமையாக வழங்கப்பட்டுள்ளது. இதன்படி சட்டத்தினால் வழங்கப்பட்ட யாருடைய சொத்துரிமையையும் மறுக்க இயலாது என கூறப்பட்டுள்ளது. ஆகவே சொத்துரிமை தற்பொழுது சட்ட அங்கீகாரம் உள்ளதாக விளங்குகிறது.
இன்றைய குடிமைச் சமூகத்தில் வலியுறுத்தியோ அல்லது அதிகாரப்படுத்தியோ, சொத்துக்களை கையகப்படுத்தும் முறை குறைக்கப்பட வேண்டும். எனினும் சூழ்நிலையின் காரணமாக அல்லாமல் வலிமையைப் பயன்படுத்தி மக்களின் சொத்துகளை கையகப்படுத்துவதை செய்யக் கூடாது. அரசு பல நேரங்களில் பெரிய தொழிலதிபர்களுக்கு முகவர்களாகவும், இடைத்தரகர்களாகவும் செயல்படாமல் விவசாயிகளின் உறுதியான சொத்துரிமைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
வழக்கிட்டு நிலை நாட்டுதல் (Justiciable): நீதி மன்றத்தில் விசாரணையின் மூலமாக நிலை நாட்டக்கூடியவை.
சுதந்திரம் (Liberty): சமுதாயத்தில் அடக்குமுறையிலான கட்டுப்பாடுகளற்ற சுதந்திரமான நிலையை இது குறிக்கிறது. இது அதிகாரத்துவத்தினால் ஒருவரின் நடத்தை மற்றும் அரசியல் கருத்துக்களின் மீது திணிக்கப்படுகிறது.
மக்களாட்சி (Democracy): மக்களுக்கான சமூக சமத்துவத்தை ஏற்படுத்தும் ஆட்சிமுறை.
கடப்பாடு (Obligation): கடமை அல்லது அர்ப்பணிப்பு.
தேசப்பற்று (Patriotism): ஒருவர் தன்னுடைய நாட்டிற்கு தரும் தீவிரமான ஆதரவு.
அமைப்பெதிர்வாதம் (Anarchy): இது ஒரு ஒழுங்கற்ற நிலையாகும். அதிகாரத்துவம் இல்லாமை அல்லது அங்கீகரிக்காத நிலையாகும்.
கையகப்படுதல் (Acquisition): சொத்துக்களை வாங்குதல் அல்லது சொத்துக்களை கையகப்படுத்துதல்.
பயன்பாட்டுவாதம் (Utilitarian): எந்தவொரு செயலும் மக்களைக் கவர்வதைக் காட்டிலும் அவர்களுக்குப் பயனுள்ளது அல்லது நடைமுறையிலானது என்ற வாதம்.
மறுமலர்ச்சி (Renaissance): கலை இலக்கியங்கள் புத்துணர்வு மீண்டெழுதல்.