Home | 12 ஆம் வகுப்பு | 12வது தாவரவியல் | தன்-மகரந்தச்சேர்க்கை

தாவரங்களில் பாலினப்பெருக்கம் - தன்-மகரந்தச்சேர்க்கை | 12th Botany : Chapter 1 : Asexual and Sexual Reproduction in Plants

12 வது தாவரவியல் : அலகு 1 : தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம்

தன்-மகரந்தச்சேர்க்கை

பெரும்பான்மையான தாவரவியல் வல்லுநர்களின் கருத்துப்படி ஒரு மலரில் உள்ள மகரந்தத்துகள் அதே மலரில் உள்ள சூலக முடியை சென்றடையும் நிகழ்வு தன் - மகரந்தச்சேர்க்கை அல்லது சுயகலப்பு எனப்படும்.

அ. தன்-மகரந்தச்சேர்க்கை 

(கிரேக்கத்தில் Auto = தன், Gamous = சேர்க்கை)

பெரும்பான்மையான தாவரவியல் வல்லுநர்களின் கருத்துப்படி ஒரு மலரில் உள்ள மகரந்தத்துகள் அதே மலரில் உள்ள சூலக முடியை சென்றடையும் நிகழ்வு தன் - மகரந்தச்சேர்க்கை அல்லது சுயகலப்பு எனப்படும். இருபால் மலர்களை கொண்ட தாவரங்களில் மட்டுமே தன் மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது. தாவரங்களில் தன் மகரந்தச்சேர்க்கையை ஊக்குவிக்க மலர்களில் கீழ்க்கண்ட பல தகவமைப்புகள் அல்லது இயங்கு முறைகள் காணப்படுகின்றன அவையாவன:

1. மூடியமலர் மகரந்தச்சேர்க்கை (Cleistogamy) (கிரேக்கத்தில் Kleisto = மூடிய, Gamous = சேர்க்கை): மலர்கள் மகரந்தச்சேர்க்கைக்காக திறக்காமலும் அல்லது இனப்பெருக்க உறுப்புகளை வெளிக்காட்டாமலும் மூடிய நிலையில் மலரில் மகரந்தச்சேர்க்கை நடைபெறும். காமிலினா, வயோலா, ஆக்சாலிஸ் ஆகியவை மூடியமலர்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும். காமிலினா பெங்காலன்ஸிஸ் தாவரத்தில் இரண்டு வகை மலர்கள் உண்டாக்கப்படுகின்றன. அவை தரைமேல் மற்றும் தரைகீழ் மலர்களாகும். தரைக்கு மேல் காணப்படும் மலர்கள் பிரகாசமான நிறத்துடன், திறந்தவகை (chasmogamous) மலர்களைக் கொண்டு, பூச்சிகள் மூலம் அயல் – மகரந்தச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன. தரைகீழ்க் மலர்கள் தரைகீழ் மட்டநிலத்தண்டின் கிளைகளிலிருந்து உருவாகின்றன. இவை மந்தமான நிறத்துடன், மூடிய மலர்களைக் கொண்டு (cleistogamous) தன் - மகரந்தச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன. இவை மகரந்தச்சேர்க்கை நடத்தும் முகவர்களைச் சார்ந்திருப்பதில்லை (படம் 1.11)


2. ஒத்த முதிர்வு (Homogamy): ஒரு மலரில் மகரந்தத்தாள், சூலக முடி இரண்டும் ஒரே சமயத்தில் முதிர்ச்சி அடைந்தால் இதற்கு ஒத்த முதிர்வு என்று பெயர். இது தன் மகரந்தச்சேர்க்கை நடைபெற சாதகமான சூழ்நிலையை உருவாக்குகிறது. எடுத்துக்காட்டுகள் : மிராபலிஸ் ஜலாபா, கேத்தராந்தஸ் ரோஸியஸ்.

3. முழுமையற்ற இருகால முதிர்வு (Incomplete dichogamy): இருகால முதிர்வு மலர்களில் ஒரு மலரின் மகரந்தத்தாளும் சூலகமுடியும் வெவ்வேறு காலங்களில் முதிர்ச்சியடைகின்றன. சில நேரங்களில் இந்த இன்றியமையா உறுப்புகளின் முதிர்வடையும் நேரம் ஒன்றுடன் ஒன்று மேற்பொருந்தும்போது தன் - மகரந்தச்சேர்க்கைக்கு சாதகமாகிறது.

Tags : Sexual Reproduction in Plants தாவரங்களில் பாலினப்பெருக்கம்.
12th Botany : Chapter 1 : Asexual and Sexual Reproduction in Plants : Self-pollination or Autogamy Sexual Reproduction in Plants in Tamil : 12th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது தாவரவியல் : அலகு 1 : தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம் : தன்-மகரந்தச்சேர்க்கை - தாவரங்களில் பாலினப்பெருக்கம் : 12 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது தாவரவியல் : அலகு 1 : தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம்