Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | சிறுவினாக்கள் மற்றும் விடைகள்

அலைகள் | இயற்பியல் - சிறுவினாக்கள் மற்றும் விடைகள் | 11th Physics : UNIT 11 : Waves

   Posted On :  07.11.2022 02:59 am

11வது இயற்பியல் : அலகு 11 : அலைகள்

சிறுவினாக்கள் மற்றும் விடைகள்

இயற்பியல் : அலைகள் : முக்கியமான கேள்விகள், பதில்கள், தீர்வுகள்: சிறுவினாக்கள் மற்றும் புத்தக கேள்விகள் பதில்கள்

அலைகள் (இயற்பியல்)

சிறுவினாக்கள்


1. அலைகள் என்றால் என்ன? 

ஊடகத்தின் உதவியின்றி, ஆற்றலையும் உந்தத்தையும் ஒரு புள்ளியிலிருந்து மற்றொரு புள்ளிக்கு எடுத்துச் செல்லும் மற்றும் முன்னேறிச் செல்லும் ஒரு மாறுபாடு ‘அலை' எனப்படும். 


2. அலைகளின் வகைகளை எழுது. 

• இயந்திர அலை : பரவுவதற்கு ஊடகம் தேவை. எ.கா. ஒலி அலை.

• இயந்திரவியல் அல்லாத அலை : பரவுவதற்கு ஊடகம் தேவையில்லை. எ.கா. ஒளி. 

• குறுக்கலை மற்றும் 

• நெட்டலை 


3. குறுக்கலை என்றால் என்ன? ஒர் எடுத்துக்காட்டு தருக. 

• ஊடகத்தின் துகள்கள் அதன் நடுநிலைப் பொருத்து அலைபரவும் திசைக்கு, செங்குத்துத் திசையில் அலைவுறும் (அ) அதிர்வடையும். இவை குறுக்கலை எனப்படும்.

• எடுத்துக்காட்டு : ஒளி மின்காந்த அலைகள்


4. நெட்டலை என்றால் என்ன? ஓர் எடுத்துக்காட்டு தருக. 

• ஊடகத்தின் துகள்கள் அதன் நடுநிலையைப் பொருத்து அலை பரவும் திசைக்கு இணையான திசையில் அலைவுறும் அல்லது அதிர்வடையும். 

• எடுத்துக்காட்டு : ஒலி


5. அலை நீளம் வரையறு. 

i) ஊடகத்தின் துகள் ஒன்று ஒரு அதிர்வினை நிறைவு செய்யும் போது அலை கடந்து செல்லும்தொலைவு அலை நீளம் எனப்படும் 

ii) அலைநீளம் என்பது: 

i) குறுக்கலையில் அடுத்தடுத்த இரு முகடுகள் (அல்லது) அகடுகளுக்கோ (அல்லது) 

ii) நெட்டலையில் அடுத்தடுத்த இரு இறுக்கங்கள் (அல்லது) தளர்ச்சிகளுக்கு இடைப்பட்ட தொலைவு ஆகும். 

iii) SI அலகு மீட்டர். 


6. அலை ஒன்றின் அதிர்வெண், அலைநீளம், திசைவேகம் ஆகியவற்றிற்கிடையேயானத் தொடர்பை எழுதுக. 

• திசைவேகம் (v), கோண அதிர்வெண் (ω) மற்றும் அலை அண் (λ) ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பு, 

v = λn   n = v/λ  

• அதிர்வெண் மற்றும் அலை நீளத்தின் பெருக்கல் மதிப்பு அலையின் திசைவேகம் ஆகும். 


7. அலைகளின் குறுக்கீட்டு விளைவு என்றால் என்ன? 

இரு அலைகள் மேற்பொருந்துவதால் அதன் தொகுப்பு அலையின் வீச்சில் ஏற்படும் அதிகரிப்பு, குறைவு (அல்லது) வீச்சு மாறாமல் இருக்கும் விளைவு ‘’குறுக்கீட்டு விளைவு” எனப்படும்.


8. விம்மல்கள் - வரையறு. 

• சற்று ஏறக்குறைய சம அதிர்வெண்கள் உடைய இரு ஒலி அலைகள் குறுக்கிடுவதால் ஏற்படும் ஒளி வளர்ச்சி மற்றும் ஒலித்தேய்வு நிகழ்வு 'விம்மல்கள்' எனப்படும். 

• ஒரு வினாடியில் உருவாகும் வீச்சு பெருமங்களே விம்மல் அதிர்வெண் ஆகும். 

n = |f1 – f2| (ஒரு வினாடியில்) 


9. ஒலியின் செறிவு மற்றும் உரப்பு ஆகியவற்றை விளக்குக. 

• ஒலியின் செறிவு : ஒலி முன்னேறும் திசைக்கு செங்குத்தாக ஓரலகு பரப்பின் வழியே ஊடுருவிச் செல்லும் ஒலியின் திறன் ஆகும். 

• ஒலியின் உரப்பு : காதில் ஒலியின் கேட்கும் திறன் (உணர்) அளவின் மதிப்பு ஒலி புலனுணர்வு திறன் ஆகும். ஒலிசெறிவு அதிகரித்தால் அதன் உரப்பும் அதிகரிக்கும்.


10. டாப்ளர் விளைவை விளக்குக. 

• ஊடகத்தைப் பொருத்து மூலமும், கேட்பவரும் சார்பு இயக்கத்திலிருந்தால், கேட்பவர் உணரும் ஒலியின் அதிர்வெண், மூலத்தின் அதிர்வெண்ணிலிருந்து மாறுபட்டிருக்கும். இதுவே டாப்ளர் விளைவு ஆகும். 


11. டாப்ளர் விளைவில் சிவப்பு மற்றும் நீல இடப்பெயர்ச்சிகளை விளக்குக. 

• சிவப்பு இடப்பெயர்ச்சி : நிற மாலைவரிகள், சிவப்பு நிறத்தை நோக்கி இடப்பெயர்ச்சி அடைந்தால், விண்மீனானது புவியிலிருந்து நகர்ந்து செல்லும். 

• நீல இடப்பெயர்ச்சி : நிறமாலை வரிகள் நீல நிறத்தை இடப்பெயர்ச்சி அடைந்தால், விண்மீனானது புவியை நோக்கி வரும். 


12. ஒத்ததிர்வுக் காற்றுத் தம்ப கருவியில் முனைத்திருத்தம் என்றால் என்ன? 

• ஒத்ததிர்வு காற்றுத் தம்ப கருவியில் எதிர்க் கணுவானது துல்லியமாகக் குழாயின் திறந்த முனையில் உருவாகாமல் திறந்த முனைக்குச் சற்று தொலைவில் உருவாகும். இத்தொலைவு முனைத்திருத்தம் (e) எனப்படும்.



13. y = x + a என்ற தொடர்பிற்கு படம் வரைக. அதை விளக்குக. 


• படத்திலுள்ளவாறு நேர்க்கோடாக அமையும். இவை நிலையான நேரடித் தொடர்பு ஆகும். 

• இதன் மதிப்பானது குறிப்பிட்ட கால இடைவெளியில் அதிகரிக்கும். 

• y என்பது x - ஐப் பொருத்து நேரடியாக மாறுபடுகிறது. 


14. வாயு ஒன்றில் ஒலியின் திசைவேகத்தை - பாதிக்கும் காரணிகளை எழுதுக. 

• வெப்பநிலை 

• காற்று இயக்கம் 

• அடர்த்தி

• அழுத்தம் 

• ஈரப்பதம் 


15. எதிரொலி என்றால் என்ன? விளக்குக. 

• கேட்கும் நபரிடமிருந்து தொலைவில் உள்ள பொருளின் பரப்பில் எதிரொலித்து வரும் ஒலி அலைகளே ‘எதிரொலி' எனப்படும். 

• ஒலி மூலம் ஒலியை ஏற்படுத்துவதை நிறுத்திய பின்பும். கேட்டலின் நீட்டிப்பு காரணமாக ஒரு நொடியில்  1/10 பங்கு காலத்திற்கு நாம் தொடர்ந்து ஒலியைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். 

• ஒளி மூலத்தில் இருந்து 17m தொலைவிற்கும் குறைவாக எதிரொளிப்பு பொருள் இருப்பின் எதிரொலி ஏற்படாது. எனவே சிறிய அறை ஒன்றில் எதிரொலி ஏற்படாது.


Tags : Waves | Physics அலைகள் | இயற்பியல்.
11th Physics : UNIT 11 : Waves : Short Questions and Answer Waves | Physics in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது இயற்பியல் : அலகு 11 : அலைகள் : சிறுவினாக்கள் மற்றும் விடைகள் - அலைகள் | இயற்பியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது இயற்பியல் : அலகு 11 : அலைகள்