Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: பரப்பு இழுவிசை
   Posted On :  12.11.2022 08:28 pm

11வது இயற்பியல் : அலகு 7 : பருப்பொருளின் பண்புகள்

தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: பரப்பு இழுவிசை

இயற்பியல் : பருப்பொருளின் பண்புகள் - தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள் பரப்பு இழுவிசை

எடுத்துக்காட்டு 7.10 

ஒரு சோப்புக்குமிழியின் படலத்தின் பரப்பை 50 cm2 லிருந்து 100 cm2 க்கு அதிகரிக்க செய்யப்பட்ட வேலை 2 .4×10−4 J எனில் சோப்புக் கரைசலின் பரப்பு இழுவிசையைக் கணக்கிடுக. 

தீர்வு 

சோப்புக் குமிழியானது இரு மேற்பரப்புகளைக் கொண்டிருப்பதால் மேற்பரப்பில் ஏற்பட்ட அதிகரிப்பு 

A = A2A1 = 2(100-50) × 10-4m2 = 100 × 10-4m2.

எனவே செய்யப்பட்ட வேலை


எடுத்துக்காட்டு 7.11 

ஒப்படர்த்தி 0.8 கொண்ட 4 mm உயரமுள்ள எண்ணெய் தம்பத்தினால் 2.0 cm ஆரமுள்ள சோப்புக் குமிழியின் மிகையழுத்தம் சமப்படுத்தப்பட்டால், சோப்புக்குமிழியின் பரப்பு இழுவிசையைக் காண்க.

தீர்வு

சோப்புக் குமிழியினுள் மிகையழுத்தம்


எடுத்துக்காட்டு 7.12 

நுண்புழைக் குழாய் ஒன்றில் நீர் 2.0 cm உயரத்திற்கு மேலேறுகிறது. இக்குழாயின் ஆரத்தைப்போல் மூன்றில் ஒரு பகுதி ஆரமுடைய மற்றொரு நுண்புழைக் குழாயில் நீர் எந்த அளவிற்கு மேலேறும்?

தீர்வு 

சமன்பாடு 7.34 இல் இருந்து  1/r  hr = மாறிலி

r1 மற்றும் r2 ஆரமுடைய இரு நுண்புழைக் குழாய்கள் திரவத்தில் அமிழ்ந்துள்ள போது நுண்புழையேற்ற உயரமானது முறையே h1 மற்றும் h2 எனில்,




எடுத்துக்காட்டு 7.13

சோடாச் சுண்ணாம்பு கண்ணாடிக்கும் பாதரசத்திற்கும் இடையே சேர்கோணம் 140° ஒரு கிண்ணத்திலுள்ள பாதரசத்தில் 2mm ஆரமுடைய இதே கண்ணாடியால் ஆன நுண்புழைக்குழாய் அமிழ்த்தி வைக்கப்பட்டுள்ளது. திரவத்தின் வெளிப்புற மேற்பரப்பைப் பொறுத்து குழாயில் பாதரசத்தின் மட்டம் எவ்வளவு குறையும்?

 பாதரசத்தின் பரப்பு இழுவிசை T=0.456 N m-1;

பாதரசத்தின் அடர்த்தி ρ = 13.6 × 103 kg m-3

தீர்வு 

நுண்புழை இறக்கம்


கண்ணாடிக் குழாயில் பாதரச மட்டம் கீழிறங்குகிறது என்பதை எதிர்க்குறி காட்டுகிறது.

11th Physics : UNIT 7 : Properties of Matter : Solved Example Problems for Surface tension in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது இயற்பியல் : அலகு 7 : பருப்பொருளின் பண்புகள் : தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: பரப்பு இழுவிசை - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது இயற்பியல் : அலகு 7 : பருப்பொருளின் பண்புகள்