இயல் 1 | 11 ஆம் வகுப்பு தமிழ் - மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் | 11th Tamil : Chapter 1 : Ennuyir enbean
இலக்கணத் தேர்ச்சி கொள்
1. தவறான இணையைத் தேர்வு செய்க,
அ) மொழி + ஆளுமை - உயிர் + உயிர்
ஆ) தமிழ் + உணர்வு - மெய் + உயிர்
இ) கடல் + அலை - உயிர் + மெய்
ஈ) மண் + வளம் - மெய் + மெய்
[விடை: இ) கடல்+அலை - உயிர்+மெய்]
2. கீழ்க்காணும் குறிப்புகளில் பொதிந்துள்ள மேடைப்பேச்சில் சிறந்து விளங்கிய தமிழறிஞர்களின் பெயர்களைக் கண்டறிக.
அ) சென்னை மாகாணத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்த முதல்வர் (3)
விடை : அண்ணா
ஆ) தொழிலாளர்களின் தந்தை என்று அழைக்கப்படுபவர் (10)
விடை : கலியாணசுந்தரனார்.
இ) உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே என்று பாடியவர் (6)
விடை : பாரதிதாசன்.
ஈ) பொதுவுடைமைக்கொள்கையின் முன்னோடிகளுள் ஒருவர் (2)
விடை : ஜீவா.
3. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக.
அ) காலங்காத்தால எந்திரிச்சிப் படிச்சா ஒரு தெளிவு கெடைக்கும்.
விடை : விடியற்காலையில் எழுந்து படித்தால் ஒரு தெளிவு கிடைக்கும்.
ஆ) முயற்சி செஞ்சா அதுக்கேத்த பலன் வராமப் போவாது,
விடை : முயற்சி செய்தால் அதற்கேற்ற பலன் வராமல் போகாது.
இ) காலத்துக்கேத்த மாரிப் புதுசுபுதுசா மொழி வடிவத்த மாத்தனும்.
விடை : காலத்திற்கேற்றதுபோல் பதிதுபுதிதாக மொழி வடிவத்தை மாற்ற வேண்டும்.
ஈ) ஒவ்வொருத்தரும் பேசிக்கிட்டிருக்கும்போது எல்லாத்தையும் கவனமாகப் பதிய வைக்கனும்.
விடை : ஒவ்வொருவரும் பேசிக்கொண்டிருக்கும்போதே எல்லாவற்றையும் கவனமாகப் பதிய வைக்க வேண்டும்.
உ) தேர்வெழுத வேகமாப் போங்க. நேரங்கழிச்சி போனாப் பதட்டமாயிரும்,
விடை : தேர்வெழுத வேகமாகச் செல்லுங்கள், நேரங்கழித்துச் சென்றால் பதற்றமாயிருக்கும்.
வினாக்கள்
1. மொழிக்கு முதலில் வரும் எழுத்துகள் எத்தனை? அவை யாவை?
விடை
❖ மொழிக்கு முதலில் வரும் எழுத்துகள் - 22.
❖ அவை: உயிர் எழுத்துகள் - 12: க், ச், த், ப், ங்,ஞ,ந,, ய, வ் என்னும் மெய்யெழுத்துகள் - 10.
❖ மெய்யெழுத்துகள் உயிர் எழுத்துகளோடு சேர்ந்து
உயிர்மெய் எழுத்துகளாக மொழிக்கு முதலில் வரும்.
2. மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகள் எத்தனை? எடுத்துக்காட்டுத் தருக.
விடை
❖ மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகள் - 24.
❖ அவை: உயிர் எழுத்துகள் - 12;
ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ல் என்னும் மெய்யெழுத்துகள் - 11; குற்றியலுகரம் - 1.
எ.கா
❖ உயிர் எழுத்துகள் : பல, பலா, பனி, தேனீ, கரு, பூ, தேனே, தினை, நொ, கோ, கௌ, எ – வழக்கில் இல்லை.
மெய்யெழுத்துகள் : உரிஞ், கர், பொருந், கரம், மன், மெய், தேர், பல், தெவ், வாழ், நாள்.
3. உயிரீறு. மெய்யீறு: - விளக்குக.
விடை
உயிரீறு:
❖ நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர்மெய்யாக இருந்தாலும்
அதன் இறுதியில் நிற்கும் வடிவம் உயிர் எழுத்து என்பதால் அது உயிரீறு எனப்படும்.
❖ எ.கா: மணி (ண்+இ) + மாலை = மணிமாலை - உயிரீறு.
மெய்யீறு:
❖ நிலைமொழியின் இறுதி எழுத்து மெய்யாக இருந்தால்
அது மெய்யீறு எனப்படும்.
❖ எ.கா: பொன் + வண்டு = பொன்வண்டு - மெய்யீறு.
4. உயிர்முதல், மெய்ம்முதல் எடுத்துக்காட்டுடன் விவரிக்க,
விடை
உயிர்முதல்;
❖ வருமொழியின் முதலெழுத்து உயிர் எழுத்தாக இருந்தால்
அது உயிர்முதல் எனப்படும்.
❖ எ.கா: வாழை + இலை = வாழையிலை - உயிர்முதல்.
மெய்முதல்:
❖ வருமொழியின் முதலெழுத்து உயிர்மெய் எழுத்தாக இருந்தாலும்
அதன் முதலில் நிற்கும் வடிவம் மெய் என்பதால் அது மெய்முதல் எனப்படும்.
❖ எ.கா: தமிழ் + நி(c+இ)லம் = தமிழ்நிலம் - மெய்முதல்.
5. . குரங்குக்குட்டி - புணர்ச்சியை விளக்குக.
விடை
குரங்கு + குட்டி= குரங்குக்குட்டி
விதி : ‘இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்' எனும் விதிப்படி, குரங்குக்குட்டி எனப் புணர்ந்தது.
கற்பவை கற்றபின்
1.
தாய்மொழியே முதன்மையானது - இக்கூற்றுக் குறித்து வகுப்பில் கலந்துரையாடுக.
விடை
கலந்துரையாடுபவர்கள்: இரகு, யாழினி, சீதா, தமிழாசிரியை
ஆசிரியை : மாணவ, மாணவியரே நீங்கள் அறிந்த மொழிகளையெல்லாம் கூறுங்கள் பார்க்கலாம்.
இரகு : தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம், துளுவம்...
ஆசிரியை : சரி.. சரி... யாழினி நீ ஏதாவது...
யாழினி : வடமொழி, கிரேக்கம், இந்தி...
சீதா : பிராகுயி, பாலி...
ஆசிரியை : நன்று கண்மணிகளே... இவ்வளவு மொழியின் பெயர்களை அறிந்து வைத்திருக்கிறீர்கள்.
யாழினி : அம்மா... எல்லா மொழிக்கும் எழுத்து வடிவம் உண்டா அம்மா?
ஆசிரியை : உண்டு யாழினி... மிகவும் சொற்பமான மொழிகள் மட்டும்தான் உலகளவில் பேச்சுமொழியாக மட்டும் இருக்கின்றன.
இரகு : மொழிகளுக்கெல்லாம் முதல் மொழி எது அம்மா?
சீதா : இது தெரியாதா! நம் தமிழ் மொழிதான். சரியா அம்மா..?
யாழினி : ஆம் அம்மா... என் வீட்டில் ஓர் இலக்கிய வரலாறு புத்தகம் இருந்தது. அதில்கூட இப்படித்தான் தமிழ் முதன்மையான மொழி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இரகு : ஆம் யாழினி... நானும் படித்து இருக்கிறேன்.
சீதா : எனக்கு அந்தப் பத்தகத்தைக் கொடு படித்துவிட்டுத் தருகிறேன்.
ஆசிரியை : எப்படி முதன்மையான மொழி என்று உங்களில் யாராவது கூற முடியமா?
இரகு : நான்கூறுகிறேன் "தூயமொழிதமிழ் - ஞால முதல்மொழிதமிழ்” என்று தேவநேயப் பாவாணர் கூறியுள்ளார் அம்மா...
ஆசிரியை : நன்று! நன்று! அதுமட்டுமல்ல. தொன்மை, தூய்மை, தாய்மை, வளமை, இளமை, இனிமை, தனிமை, ஒண்மை, சேய்மை என அனைத்து இயல்புகளையும் பெற்றுள்ளதால் தமிழ்தான் (தாய் மொழிதான்) முதன்மையான மொழி என்பதில் ஐயமில்லை.
இரகு, யாழினி, சீதா : மிக்க நன்றி அம்மா!
2.
‘காலத்தை வென்ற மொழி'
என்னும் தலைப்பில் கவிதை படைக்க.
விடை
கல்தோன்றி மண் தோன்றா
முன்னே தோன்றி யவள்
முதல் மொழியாய் மூத்த மொழியாய்
தொல் மொழியாய் முகிழ்த்தவள்
அறிவியலா கணினியா தொழில் நுட்பமா?
எத்துறை யாயினும் அத்துறைத்
தரவுகளைத் தட்டின்றி தடையின்றி
தரணிக்குத் தரும் தனிமொழியவள்
செந்தமிழ் நாட்டில் மட்டுமல்ல உலக
முழுதும் செம்மாந்து நிற்கும்
செம்மொழியாம் என் அன்னைத் தமிழ்
காலத்தை வென்ற கன்னித் தமிழே!
3.
பாரதியின் வசனகவிதைகளுள் உங்களுக்குப் பிடித்த கவிதையை வகுப்பறையில் படித்துக் காட்டுக.
விடை
தீ (ஞாயிறு)
"தீயே, நின்னைப்போல் எமதுள்ளம் சுடர்விடுக
தீயே, நின்னைப்போல் எமதறிவு கனலுக
ஞாயிற்றினிடத்தே தீயே, நின்னைத்தான் போற்றுகின்றோம்
ஞாயிற்றுத் தெய்வமே நின்னைப் புகழ்கின்றோம்
நின்னொளி நன்று, நின்செயல் நன்று நீ நன்று”
4. கவிதை குறித்துத் தமிழ்க்கவிஞர்களின் கருத்துகளைத் திரட்டி ஒப்படைவு எழுதுக.
விடை
பவணந்தி கூற்று
"பல்வகைத் தாதுவின் உயிர்க்குடல் போற்பல
சொல்லால் பொருட்கிடனாக உணர்வினின்
வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்”
கவிமணி
“உள்ளத்து உள்ளது கவிதை - இன்ப
உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
தெளிந்து உரைப்பது கவிதை”
5.
எல்லாவகை நூல்களுக்கும் அழகு தருவதாக வைக்கப்படுவது அணிந்துரை - எடுத்துக் காட்டுகளுடன் வகுப்பறையில் விவாதிக்க.
விடை
மாணவர்களே, இந்தப் பாயிரம் பற்றிய நன்னூலைக் கற்றதனால் என்ன உணர்ந்தீர்கள்?
எல்லாவகை நூல்களுக்கும் அணிந்துரை தேவை, அதுவே நூலுக்கு அழகு என உணர்ந்தோம். ஆம் இதோ சில சான்றுகள்:
❖ முதல் நூல்: கட்டுரை நூல் - உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு - ஆ.ப.ஜே. அப்துல்கலாம்.
❖ இரண்டாம் நூல்: உன்னோடு ஒரு நிமிஷம் - வெ.இறையன்பு - இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் கதைகள், செய்திகள் அமைந்த நூல்.
❖ மூன்றாவது நூல்: வெற்றிக்கு மேல் வெற்றி - கவிதாசன் - இளைஞர்கள் மற்றும் முன்னேறத் துடிக்கும் அனைவருக்கும் வழிகாட்டும் சுயமுன்னேற்ற நூல்.
இந்த மூன்று நூல்களிலும் முகவுரை, அணிந்துரை இருக்கக் கண்டீர்கள் அல்லவா! இதைப்போல்தான், எவ்வகை நூலாக இருப்பினும் ஒவ்வொரு நூலுக்கும் முகவுரை, அணிந்துரை என்பது இன்றியமையாததாகும்.
6. அயல்நாட்டில்வசிக்கும் நீங்கள்,
உங்கள் மண்ணின் நினைவுகளை நண்பருடன்பகிர்வதுபோலொரு கற்பனைக்கடிதம் எழுதுக.
விடை
கற்பனைக்கடிதம்
மலர்,
17.06.2022.
என் அன்பான நண்பனுக்கு,
நலம். நலம் அறிய ஆவல்.
நாம் சின்னஞ்சிறு வயதில் ஒன்றாக இணைந்து பள்ளிக்கூடம் செல்லும் போது நினைத்துப் பார்த்ததில்லை. நம் மண்ணைவிட்டுப்போவோம் என்று! இன்று பார்த்தாயா, இரவில் என்னைப் பிடித்துச் சென்றனர். உயிர் பயத்தில் கிடைத்த படகில் ஏறிச்சென்ற என் குடும்பம் என்ன ஆயிற்று! எங்கிருக்கிறது இன்றுவரை தெரியவில்லை.
குழந்தைப் பருவத்திலிருந்து வாலிபம் வரை மணமுடித்தும் அருகருகே வசித்தோம் காலம் மாறியது. நான் உன்னை நினைக்கும் போதெல்லாம் நம் மண்ணும், நம் மண்ணை நினைக்கும் போதெல்லாம் நாம் வாழ்ந்த வாழ்வின் நினைவும் என் கனர்களின் முன்னே வரும். என்ன செய்வது? உன் ஒருவனிடமாவது அவ்வப்போது மன உணர்வுகளைப் பகிர, படைத்தவன் வழிவிட்டிருக்கிறானே. அதற்காக நன்றி.
நல்விதி இருந்தால் நம் நாட்டுப் பறவைகள் புலம்பெயர்ந்து சென்று மீண்டும் நம் இடம் வரும் அல்லவா! அதுபோல் ஒரு நாள் வருவோம்! சந்திப்போம்!
அன்புடன்,
முகவரி மா.செ...
வே. சஞ்சய்
7.
நாளிதழ்களில் வெளியாகும் புலம்பெயர் மக்கள் பற்றிய செய்திகளைத் திரட்டிப் படத்தொகுப்பாக்குக.
8. உங்கள் வகுப்பறையிலுள்ள மாணவர்களின் பெயர்கள் சிலவற்றின் முதல்,
இறுதி எழுத்துகளைத் தனித்து எழுதி நீங்கள் பயின்ற இலக்கணப் பகுதியுடன் ஒப்பிட்டு ஆய்க.
விடை
1. செந்தில்குமார் = செந்தில் + குமார்
நிலைமொழி மெய்யீறு, வரும்மொழி மெய்ம்முதல்
2. பாக்கியலட்சுமி = பாக்கியம் + லட்சுமி
நிலைமொழி மெய்யீறு, வரும்மொழி மெய்ம்முதல்
3. அன்பழகன் = அன்பு + அழகன்
நிலைமொழி உயிரீறு, வரும்மொழி உயிர்முதல்
4. செல்வகுமாரி = செல்வம் + குமாரி
நிலைமொழி மெய்யீறு, வரும்மொழி மெய்முதல்
நிலைமொழியில் உயிற்று மெய்யீறு அமைதல் வேண்டும்.
வருமொழியில் மெய்முதல் உயிர்முதல் அமைதல் வேண்டும்.