Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | C++: இனக்குழு உறுப்புகளை அணுகுதல்

C++ இல் உள்ள எடுத்துக்காட்டு நிரல்கள் - C++: இனக்குழு உறுப்புகளை அணுகுதல் | 11th Computer Science : Chapter 14 : Classes and objects

   Posted On :  25.09.2022 09:42 pm

11வது கணினி அறிவியல் : அலகு 14 : இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள்

C++: இனக்குழு உறுப்புகளை அணுகுதல்

இனக்குழுவின் - உறுப்புகளை அணுகுவதற்கு புள்ளி (. DOT operator) செயற்குறியானது பயன்படுகிறது. இனக்குழு பொருளின் பெயரைத் தொடர்ந்து புள்ளி செயற்குறியும், அதைத் தொடர்ந்து அணுக வேண்டிய தரவு உறுப்பு / உறுப்பு செயற்கூறின் பெயரைத் தர வேண்டும்.

இனக்குழு உறுப்புகளை அணுகுதல்


இனக்குழுவின் - உறுப்புகளை அணுகுவதற்கு புள்ளி (. DOT operator) செயற்குறியானது பயன்படுகிறது. இனக்குழு பொருளின் பெயரைத் தொடர்ந்து புள்ளி செயற்குறியும், அதைத் தொடர்ந்து அணுக வேண்டிய தரவு உறுப்பு / உறுப்பு செயற்கூறின் பெயரைத் தர வேண்டும். இனக்குழுவின் உறுப்புகளை அணுகப் பயன்படும் புள்ளி செயற்குறியின் தொடரியல்: 

பொருளின் பெயர். உறுப்பு செயற்கூறின் பெயர் (மெய்யான அளபுருக்கள்); 

(எடுத்துக்காட்டு)



விளக்க நிரல் 14.4 பொருளைத் தொடர்புகொள்வதை விளக்கும் நிரல்

பொருளின் உறுப்புச் செயற்கூறை அழைத்தல் என்பது பொருளுக்கு செய்தியை அனுப்புவது அல்லது தொடர்பு கொள்ளுதல் ஆகும்.

#include<iostream>

using namespace std; 

class compute

{   

       int n1,n2; //private by default

public :

      int n;  

      int add (int a, int b)   //inline member function

       {

      int c=a+b; //int c ; local variable for this function

      return c;

       }

       int prd (int a, int b) //inline member function

      {

      int c=a*b;

      return c;

      }          

};   // end of class specification        

compute c1,c2;     //global object      

int main()

{

      c1.n =c1.add(12,15);  //member function is called

      c2.n =c2.add(8,4);

      cout<<"\n Sum of object-1 "<<c1.n;

      cout<<"\n Sum of object-2 "<<c2.n;

      cout<<"\n Sum of the two objects are "<<c1.n+c2.n;

      c1.n=c1.prd(5,4);

      c2.n=c2.prd(2,5);

      cout<<"\n Product of object-1 "<<c1.n;

      cout<<"\n Product of object-2 "<<c2.n;

      cout<<"\n Product of the two objects are "<<c1.n*c2.n;

      return 0;

}

வெளியீடு : 

Sum of object-1 27

Sum of object-2 12

Sum of the two objects are 39

Product of object-1 20

Product of object-2 10

Product of the two objects are 200


குறிப்பு

இனக்குழு உறுப்புகளை (பொருள்களை) வரிசையாகக் கொண்ட அணிகள் பொருள்களின் அணிகள் எனப்படும். மற்ற வகையான அணிகளை அறிவித்து வரையறுப்பது போன்றே பொருள்களின் அணிகளையும் உருவாக்கலாம். 

(எ.கா) student s [10] ; 

10 இனக்குழு பொருள்கள் உருவாக்கப்படுகிறது


Tags : Example Programs in C++ C++ இல் உள்ள எடுத்துக்காட்டு நிரல்கள்.
11th Computer Science : Chapter 14 : Classes and objects : C++: Referencing class members Example Programs in C++ in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 14 : இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் : C++: இனக்குழு உறுப்புகளை அணுகுதல் - C++ இல் உள்ள எடுத்துக்காட்டு நிரல்கள் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 14 : இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள்