Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | C++: பொருள்களை உருவாக்குதல்

C++ இல் உள்ள எடுத்துக்காட்டு நிரல்கள் - C++: பொருள்களை உருவாக்குதல் | 11th Computer Science : Chapter 14 : Classes and objects

   Posted On :  21.09.2022 05:43 pm

11வது கணினி அறிவியல் : அலகு 14 : இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள்

C++: பொருள்களை உருவாக்குதல்

இனக்குழு அறிவிப்பு என்பது இனக்குழுவின் பண்புக்கூறுகளை அறிவிப்பதாகும்.

பொருள்களை உருவாக்குதல்:


இனக்குழு அறிவிப்பு என்பது இனக்குழுவின் பண்புக்கூறுகளை அறிவிப்பதாகும். இனக்குழுவைப் பயன்பாட்டிற்கு கொண்டுவர அந்த இனக்குழுவில் மாறிகளை அறிவிக்க வேண்டும். இனக்குழுவில் அறிவிக்கப்படும் மாறியானது பொருள்கள் (objects) எனப்படும். பொருள்கள் இனக்குழுவின் சான்றுரு எனவும் அழைக்கப்படும்.


(எ.கா)

student s;

மேற்கண்ட கூற்றில் s என்பது student இனக்குழுவின் சான்றுருவாகும். இனக்குழுவின் பொருளானது இரண்டு முறைகளில் உருவாக்கப்படுகிறது. 

1) முழுதளாவிய பொருள் (Global Object) 

2) உள்ளமை பொருள் (Local Object) 


1) முழுதளாவிய பொருள் (Global Object) 

அனைத்து செயற்கூறுகளின் உடற்பகுதிக்கு வெளியில் அல்லது இனக்குழுவின் அறிவிப்பை முடித்து வைக்கும் கொக்கி வடிவ அடைப்பை (braces) தொடர்ந்து பொருளானது அறிவிக்கப்பட்டால் அது முழுதளாவிய மாறி எனப்படும். இனக்குழுவில்/நிரலில் உள்ள அனைத்து செயற்கூறுகளும் அப்பொருளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். 


2) உள்ளமை பொருள்கள் (Local Objects)

ஒரு பொருளானது செயற்கூறினுள் அறிவிக்கப்பட்டால் அது உள்ளமை பொருள் எனப்படும். செயல்கூறுக்கு வெளியில் இருந்து இப்பொருளை அணுக முடியாது.


உள்ளமை பொருளின் பயன்பாட்டை விளக்கும் நிரல்

முழுதளாவிய பொருளை முழுதளாவிய இனக்குழுவிற்கு மட்டுமே அறிவிக்க முடியும். இனக்குழுவின் வரைறையானது அனைத்து செயற்கூறுகளின் உடற்பகுதிக்கு - வெளியே குறிப்பிடப்பட்டால் அது முழுதளாவிய இனக்குழுவாகும்.

#include <iostream>

#include <conio>

using namespace

std class add          //Global class

{

int a,b;

public:

int sum;

void getdata()

{

a=5;

b=10;

sum = a+b;

}

a1;

add a2;

int main()

{

add a3;       //Local object for a global class

a1.getdata();

a2.getdata();

a3.getdata();  //public data member accessed from outside the class

cout<<a1.sum;

cout<<a2.sum;

cout<<a3.sum;

return 0;

}

வெளியீடு :

151515



Tags : Example Programs in C++ C++ இல் உள்ள எடுத்துக்காட்டு நிரல்கள்.
11th Computer Science : Chapter 14 : Classes and objects : C++: Creating Objects Example Programs in C++ in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 14 : இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் : C++: பொருள்களை உருவாக்குதல் - C++ இல் உள்ள எடுத்துக்காட்டு நிரல்கள் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 14 : இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள்