Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | C++: உறுப்பு செயற்கூறுகளை வரையறுத்தல்

C++ இல் உள்ள எடுத்துக்காட்டு நிரல்கள் - C++: உறுப்பு செயற்கூறுகளை வரையறுத்தல் | 11th Computer Science : Chapter 14 : Classes and objects

   Posted On :  25.09.2022 09:40 pm

11வது கணினி அறிவியல் : அலகு 14 : இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள்

C++: உறுப்பு செயற்கூறுகளை வரையறுத்தல்

இனக்குழுவின் உறுப்புச் செயற்கூறுகளை வரையறுக்காமல் இனக்குழுவின் அறிவிப்பானது முழுமையடையாது.

உறுப்பு செயற்கூறுகளை வரையறுத்தல் :


இனக்குழுவின் உறுப்புச் செயற்கூறுகளை வரையறுக்காமல் இனக்குழுவின் அறிவிப்பானது முழுமையடையாது. இனக்குழுவின் உறுப்பு செயற்கூறானது இரண்டு விதங்களில் வரையறுக்கப்படுகிறது. 

1) இனக்குழுவிற்கு உள்ளே வரையறுத்தல் 

2) இனக்குழுவிற்கு வெளியே வரையறுத்தல் 


1) இனக்குழுவிற்கு உள்ளே வரையறுத்தல் :

இனக்குழுவின் உள்ளே வரையறுக்கப்படும் செயற்கூறானது inline செயற்கூறு போல இயங்குகின்றன. அவை inline உறுப்பு செயற்கூறுகள் எனவும் அழைக்கப்படுகின்றன.

குறிப்பு :

செயற்கூறானது inline செயல்கூறாக அறிவிக்கப்பட்டால் நிரலின் தொகுப்பு நேரத்தில் அச்செயற்கூறு அழைக்கப்படும் இடங்களில் எல்லாம் நிரல் பெயர்ப்பியானது அச்செயற்கூறின் குறிமுறையை பதிலீடு செய்யும்.


2) இனக்குழுவிற்கு வெளியே வரையறுத்தல் : 

இனக்குழுவின் உறுப்பு செயற்கூறானது இனக்குழுவிற்கு வெளியே சாதாரண இனக்குழு வரையறை போலவே வரையறுக்க முடியும். (செயற்கூறு வரையறை பற்றி நீங்கள் நன்கு அறிந்திருந்தால்) இது Outline உறுப்புச் செயற்கூறுகள் (or) non-inline உறுப்புச் செயற்கூறுகள் எனவும் அழைக்கப்படும். உறுப்பு செயற்கூறுகளை இனக்குழுவிற்கு வெளியே வரையறுப்பதற்கு (::) வரையெல்லை செயற்குறியானது (Scope resolution operator) பயன்படுகிறது. உறுப்பு செயற்கூறை இனக்குழுவிற்கு வெளியேவரையறை செய்வதற்கு உதவும் பொது வடிவம்

return_type class_name :: function_name (parameter list)

{

      function definition

}



விளக்க நிரல் 14.1 Inline மற்றும் Outline உறுப்பு செயற்கூறுகள்

அணுகியல்பு குறிப்பிடப்படவில்லை எனில் அவை தானமைவாக Private என கருதப்படும்.

# include <iostream>         

using namespace std; 

class Box

{   

      double width; // no access specifier mentioned

public:  

      double length;  

void printWidth( ) //inline member function definition

      {    

           cout<<”\n The width of the box is...”<<width;

      }

void setWidth( double w ); //prototype of the function

};

void Box :: setWidth(double w) // outline member function definition

{

width=w;

}

int main( )

{

Box b;                   // object for class Box

b.setWidth(10.0);            // Use member function to set the width.

b.printWidth( );                        //Use member function to print the width.

return 0;

}

வெளியீடு : 

The width of the box is... 10

 

குறிப்பு 

பல கூற்றுகள், மடக்குகள், switch அல்லது Go To கூற்றுகள் ஆகியவற்றை கொண்ட உறுப்பு செயற்கூறை Inline செயற்கூறாக அறிவிப்பது ஏற்புடையதல்ல


Tags : Example Programs in C++ C++ இல் உள்ள எடுத்துக்காட்டு நிரல்கள்.
11th Computer Science : Chapter 14 : Classes and objects : C++: Defining methods of a class Example Programs in C++ in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 14 : இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் : C++: உறுப்பு செயற்கூறுகளை வரையறுத்தல் - C++ இல் உள்ள எடுத்துக்காட்டு நிரல்கள் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 14 : இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள்