Posted On :  21.09.2022 05:41 pm

11வது கணினி அறிவியல் : அலகு 14 : இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள்

C++: இனக்குழு வரையறை

C++ல் இனக்குழுவின் வரையறையில் Class என்னும் சிறப்பு சொல்லைத் (Keywords) தொடர்ந்து இனக்குழுவின் பெயர் இடம்பெற வேண்டும்.

இனக்குழு வரையறை (Declaration of a class)


C++ல் இனக்குழுவின் வரையறையில் Class என்னும் சிறப்பு சொல்லைத் (Keywords) தொடர்ந்து இனக்குழுவின் பெயர் இடம்பெற வேண்டும். இனக்குழுவின் உடற்பகுதி வரையறுப்பானது நெளிவு அல்லது கொக்கி வடிவ அடைப்பு ({ }) குறிக்குள் அடைக்கப்பட்டு அரைப்புள்ளியுடன் அல்லது இனக்குழு பொருள்கள் அறிவிப்புடன் முடிவடைதல் வேண்டும்.

குறிப்பு 

கட்டுரு மற்றும் இனக்குழுவிற்கு இடையேயான வேறுபாடானது, கட்டுரு உறுப்புகளானது கொடாநிலையாக Public அணுகியல்புடணும் இனக்குழுவின் உறுப்புகளானது Private அணுகியல்புடணும் இருக்கும்.

இனக்குழுவை வரையறுப்பதற்கான பொது வடிவம்:

class class-name

{

private:

      தரவு உறுப்புகள் அறிவிப்பு;

      செயல் கூறுகள் அறிவிப்பு;

protected:

      தரவு உறுப்புகள் அறிவிப்பு;

      செயல் கூறுகள் அறிவிப்பு;

public:

      தரவு உறுப்புகள் அறிவிப்பு;

      செயல் கூறுகள் அறிவிப்பு;

};

இனக்குழுவின் உடற்பகுதியானது தரவு உறுப்புகளின் அறிவிப்பை கொண்டிருக்கும். (தரவு உறுப்புகள் மற்றும் உறுப்பு செயற்கூறுகள்) 

இனக்குழுவின் உடற்பகுதியானது மூன்று அணுகியல்பு வரையறுப்பிகளை கொண்டுள்ளது. (Private, Protected மற்றும் Public)

11th Computer Science : Chapter 14 : Classes and objects : C++: Declaration of a class in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 14 : இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் : C++: இனக்குழு வரையறை - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 14 : இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள்