Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | C++: ஆக்கிகள் - ஓர் அறிமுகம்
   Posted On :  21.09.2022 05:50 pm

11வது கணினி அறிவியல் : அலகு 14 : இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள்

C++: ஆக்கிகள் - ஓர் அறிமுகம்

இனக்குழுவை வரையறுப்பதன் மூலம் ஒரு புதிய பயனர் வரையறுக்கும் தரவினத்தை உருவாக்க முடியும்.

ஆக்கிகள் - ஓர் அறிமுகம்


இனக்குழுவை வரையறுப்பதன் மூலம் ஒரு புதிய பயனர் வரையறுக்கும் தரவினத்தை உருவாக்க முடியும். இனக்குழுவின் சான்றுருவை சான்றுருவாக்கள் (உருவாக்கி, தொடங்கி வைத்தல்) அவசியமாகும். ஆக்கிகளைப் பயன்படுத்தி பொருள்களைச் சான்றுருவாக்குதல் முடியும். 


ஆக்கிகளின் தேவை


C++ ல் உள்ள அணி அல்லது கட்டுரு , அதன் அறிவிக்கும் நேரத்தில் தொடங்கி வைக்கப்படுகிறது.

எடுத்துக்காட்டாக

இனக்குழு உறுப்பு செயற்கூறானது அதனோடு தொடர்புடைய அணுகியல்பு எதுவாக இருந்தாலும் அணுக முடியும்.

struct sum

{

      int n1,n2;

};

class add

{

      int num1,num2;

};

int main()

{

      int arr[]={1,2,3}; //declaration and initialization of array

      sum s1={1,1}; //declaration and initialization of structure object

      add a1={0,0}; // class object declaration and initialization throws compilation error

}

இனக்குழு பொருள் அதன் அறிவிப்பு நேரத்தில் தொடங்கி வைப்பது (initialization) கட்டுரு அல்லது அணியை தொடங்குதல் போன்றது அல்ல. ஏனென்றால், இனக்குழு உறுப்புகள் அதனோடு தொடர்புடைய அணுகியல்பைக் கொண்டிருக்கும் (public, private or protected). அதனால், இனக்குழுக்கள் ஆக்கிகள் என்னும் சிறப்பு உறுப்பு செயற்கூறுகளைக் கொண்டிருக்கும். ஆக்கி செயற்கூறு இனக்குழு பொருளைத் தொடங்கி வைக்கிறது.


11th Computer Science : Chapter 14 : Classes and objects : C++: Introduction to Constructors in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 14 : இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் : C++: ஆக்கிகள் - ஓர் அறிமுகம் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 14 : இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள்