Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | C++ இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் : நினைவில்கொள்க
   Posted On :  21.09.2022 07:35 pm

11வது கணினி அறிவியல் : அலகு 14 : இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள்

C++ இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் : நினைவில்கொள்க

கணினி அறிவியல் : இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள்

நினைவில் கொள்க


• தரவையும் அதனோடு தொடர்புடைய செயற்கூறினையும் இணைத்து வைப்பது இனக்குழுவாகும்.


• C++ -ல் உள்ள பயனர் வரையறுக்கும் தரவினமான இனக்குழுவைப் பயன்படுத்திப் பொருளை உருவாக்கலாம்.


• ஓர் இனக்குழுவை அறிவிக்கும் பொழுது தரவு உறுப்புகள், உறுப்பு செயற்கூறுகள், அணுகியல்பு வரையறுப்பிகள் மற்றும் இனக்குழுவின்பெயர்கொடுக்கப்படுகிறது.


• ஓர் இனக்குழுவின் உறுப்பு செயற்கூறினை அந்த இனக்குழுவின் உள்ளே அல்லது வெளியை வரையறுக்கலாம்


• இனக்குழுவின் public உறுப்புகளை அந்த இனக்குழுபொருளைப் பயன்படுத்தி இனக்குழுவின் வெளியிலிருந்து நேரடியாக அணுகலாம்.


• ஓர் இனக்குழுவின் OOP - சிறப்பம்சமான உறைப்பொதியாக்கத்தைத் தரவு மற்றும் தொடர்புடைய செயற்கூறுகளை ஒன்றாக சேர்த்து வைப்பதன் மூலம் ஆதரிக்கிறது.


• Private மற்றும் protected மூலம் வெளி உலகிற்கு தகவலை மறைப்பதன் மூலம் தரவு மறைத்தலை இனக்குழு ஆதரிக்கிறது.


• ஒரு இனக்குழுவின் உறுப்பு செயற்கூறினை மற்றொரு உறுப்பு செயற்கூறு மூலம் அழைத்தல் பின்னலான உறுப்பு செயற்கூறு என்றழைக்கப்படுகிறது. 


• வரையெல்லை உணர்த்தும் செயற்குறி ::, ஒரு இனக்குழு பெயரில் பயன்படுத்தும் class-name :: function name பயன்படுத்தும் போது அந்த இனக்குழுவின் உறுப்புகளைக் குறிக்கிறது. :: variable-name, முழுதளாவிய மாறியைக் குறிக்கிறது. 


• ஓர் இனக்குழுவின் சான்றுரு பயன்பாட்டுக்கு வரும்போது ஆக்கி எனப்படும் சிறப்பு செயற்கூறு இயக்கப்படுகிறது. 


• ஆக்கி செயற்கூறு இனக்குழு பொருளுக்கு நினைவகத்தில் இடம் ஒதுக்குகிறது மற்றும் தொடங்கி வைக்கிறது.


• அழிப்பி என்ற சிறப்பு செயற்கூறானது ஆக்கியால் உருவாக்கப்பட்ட பொருளின் வாழ்நாள் முடிந்து அழியும்போது அழைக்கப்படுகிறது. 


• ஆக்கிகள் மற்றும் அழிப்பிகள் பெயர் இனக்குழுவின் பெயராக இருக்க வேண்டும். 


• அளபுருக்கள் இல்லாத ஆக்கி தானமைவு ஆக்கி என்றழைக்கப்படுகிறது. 


• தானமைவு செயலுருபுகளைக் கொண்ட ஆக்கி தானமைவு ஆக்கிக்கு சமமானதாகும். 


• ஆக்கி மற்றும் அழிப்பி எதையும் திருப்பி அனுப்பாது. எந்த தரவினத்தோடும் தொடர்புடையது அல்ல. 


• பொருளை இயங்குநிலையில் தொடங்க முடியும்.


11th Computer Science : Chapter 14 : Classes and objects : C++ Classes and objects: Points to Remember in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 14 : இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் : C++ இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் : நினைவில்கொள்க - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 14 : இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள்