Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள்

தேசியம்: காந்திய காலகட்டம் | வரலாறு | சமூக அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள் | 10th Social Science : History : Chapter 8 : Nationalism: Gandhian Phase

   Posted On :  24.07.2022 07:03 pm

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 8 : தேசியம்: காந்திய காலகட்டம்

ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும். II. கோடிட்ட இடங்களை நிரப்புக. III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும். IV. பொருத்துக. - புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள் - சமூக அறிவியல் : வரலாறு : தேசியம்: காந்திய காலகட்டம்

அலகு

தேசியம்: காந்திய காலகட்டம்

 

பயிற்சி

 

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

 

1. அமிர்தசரஸில் ரௌலட் சட்ட எதிர்ப்புப் போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டவர் யார்?

) மோதிலால் நேரு

) சைஃபுதீன் கிச்லு

) முகம்மது அலி

) ராஜ் குமார் சுக்லா

[விடை: () சைஃபுதீன் கிச்லு]

 

2. இந்திய தேசிய காங்கிரசின் எந்த அமர்வில் ஒத்துழையாமை இயக்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது?

) பம்பாய்

) மதராஸ்

) கல்கத்தா

) நாக்பூர்

[விடை: () கல்கத்தா]

 

3. விடுதலை நாளாக கீழ்க்கண்டவற்றில் எந்த நாள் அறிவிக்கப்பட்டது?

) 1930 ஜனவரி 26

) 1929 டிசம்பர் 26

) 1946 ஜூன் 16

) 1947 ஜனவரி 15

[விடை: () 1930 ஜனவரி 26]

 

4. முதலாவது வனங்கள் சட்டம் எந்த ஆண்டில் இயற்றப்பட்டது?

) 1858

) 1911

) 1865

) 1936

[விடை : () 1865]

 

5. 1933 ஜனவரி 8 எந்த நாளாக அனுசரிக்கப்பட்டது?

) கோவில் நுழைவு நாள்

) மீட்பு நாள் (டெலிவரன்ஸ் டே)

) நேரடி நடவடிக்கை நாள்

) சுதந்திரப் பெருநாள்

[விடை: () கோவில் நுழைவு நாள்]

 

6. மாகாண தன்னாட்சியை அறிமுகம் செய்த சட்டம் எது?

) 1858 ஆம் ஆண்டு சட்டம்

) இந்திய கவுன்சில் சட்டம், 1909

) இந்திய அரசுச் சட்டம், 1919

) இந்திய அரசுச் சட்டம், 1935

[விடை: () இந்திய அரசுச் சட்டம், 1935]

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

 

1. காந்தியடிகளின் அரசியல் குரு கோபால கிருஷ்ண கோகலே ஆவார்.

2. கிலாபத் இயக்கத்துக்கு அலி சகோதரர்கள் (முகமது அலி மற்றும் சௌகத் அலி) தலைமை ஏற்றார்.

3. 1919 ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டம் மாகாணங்களில் இரட்டை ஆட்சியை அறிமுகம் செய்தது.

4. வடமேற்கு எல்லை மாகாணத்தில் சட்டமறுப்பு இயக்கத்தை தலைமையேற்று நடத்தியவர் கான் அப்துல் கஃபார்கான்.

5. சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு தனித் தொகுதிகளை வழங்கும் வகுப்புவாரி ஒதுக்கீட்டை ஐ ராம்சே மெக்டொனால்டு அறிவித்தார்.

6. உஷா மேத்தா என்பவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது காங்கிரஸ் வானொலியை திரைமறைவாக செயல்படுத்தினார்.

 

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

 

1. i) இந்திய பொதுவுடைமை கட்சி 1920 ஆம் ஆண்டு தாஷ்கண்டில் தொடங்கப்பட்டது.

ii) M. சிங்காரவேலர் கான்பூர் சதித்திட்ட வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

iii) ஜெயப்பிரகாஷ் நாரயண், ஆச்சார்ய நரேந்திர தேவ், மினு மசானி ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் சமதர்ம கட்சி உருவானது.

iv) வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் சமதர்மவாதிகள் பங்கேற்கவில்லை.

அ) (i) மற்றும் (ii) சரியானது

)(ii) மற்றும் (iii) சரியானது

இ) (iv) சரியானது

ஈ) (i), (ii) மற்றும் (iii) சரியானது

[விடை : () (i), (ii) மற்றும் (iii) சரியானது]

 

2. கூற்று : காங்கிரஸ் முதலாவது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டது.

காரணம் : காங்கிரஸ் இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்ள காந்திஇர்வின் ஒப்பந்தம் வழிவகை செய்தது.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.

ஆ) கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது.

இ) கூற்று தவறானது ஆனால் காரணம் சரியானது.

ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

[விடை: () கூற்று தவறானது ஆனால் காரணம் சரியானது.]

 

3. கூற்று : காங்கிரஸ் அமைச்சரவைகள் 1939 ஆம் ஆண்டு பதவி விலகின.

காரணம் : காங்கிரஸ் அமைச்சரவைகளை ஆலோசிக்காமல் இந்தியாவின் காலனி ஆதிக்க அரசு போரில் பங்கேற்றது.

) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.

) கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது.

) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறானது.

) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

[விடை: () கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.]

 

 

IV. பொருத்துக.

 

1. ரௌலட் சட்டம் - பட்டங்களைத் திரும்ப ஒப்படைத்தல்

2. ஒத்துழையாமை இயக்கம் - இரட்டை ஆட்சி

3. 1919 ஆம் ஆண்டின் இந்திய அரசு சட்டம் - M.N. ராய்

4. இந்திய பொதுவுடைமை கட்சி - நேரடி நடவடிக்கை நாள்

5. 16 ஆகஸ்ட் 1946 - கருப்புச் சட்டம்

விடை:

1. ரௌலட் சட்டம் - கருப்புச் சட்டம்

2. ஒத்துழையாமை இயக்கம் - பட்டங்களைத் திரும்ப ஒப்படைத்தல்

3. 1919 ஆம் ஆண்டின் இந்திய அரசு சட்டம் - இரட்டை ஆட்சி

4. இந்திய பொதுவுடைமை கட்சி - M.N. ராய்

5. 16 ஆகஸ்ட் 1946 - நேரடி நடவடிக்கை நாள்

 

Tags : India Nationalism: Gandhian Phase | History | Social Science தேசியம்: காந்திய காலகட்டம் | வரலாறு | சமூக அறிவியல்.
10th Social Science : History : Chapter 8 : Nationalism: Gandhian Phase : One Mark Questions Answers India Nationalism: Gandhian Phase | History | Social Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 8 : தேசியம்: காந்திய காலகட்டம் : ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள் - தேசியம்: காந்திய காலகட்டம் | வரலாறு | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 8 : தேசியம்: காந்திய காலகட்டம்