தேசியம் | காந்திய காலகட்டம் | வரலாறு | சமூக அறிவியல் - பாடச்சுருக்கம், கலைச்சொற்கள் | 10th Social Science : History : Chapter 8 : Nationalism: Gandhian Phase
பாடச்சுருக்கம்
• காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் உண்மை,
அகிம்சை,
சத்தியாகிரகம்
ஆகியவற்றுடன் மேற்கொண்ட சோதனைகள் மற்றும் அவர் ஒரு மக்கள் தலைவராக உருவெடுத்தது
விவரிக்கப்பட்டுள்ளது.
• ஒத்துழையாமை,
சட்டமறுப்பு,
வெள்ளையனே
வெளியேறு ஆகிய இயக்கங்களுக்கான அவரது அழைப்பும் இந்த இயக்கங்கள் 1919ஆம்
ஆண்டின் இந்திய அரசுச் சட்டம், 1935ஆம் ஆண்டின் இந்திய அரசுச்
சட்டம், 1947ஆம் ஆண்டின் விடுதலைச்
சட்டம் ஆகியவற்றுக்கு வழிவகுத்தது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.
• சமதர்மவாதத் தலைவர்கள்,
பொதுவுடைமைத்
தலைவர்கள் மற்றும் பகத்சிங், சுபாஷ் சந்திரபோஸ் போன்ற புரட்சிகரத் தலைவர்கள்
ஆகியோரின் பங்கு, அவர்களின் செயல்பாடுகளால் ஏற்பட்ட விளைவுகள்
ஆகியன விவரிக்கப்பட்டுள்ளன.
• இந்து மகா சபை மற்றும்
முஸ்லீம் லீக் ஆகியவை அரசியல் காரணங்களுக்காக மதத்தைப் பயன்படுத்தியதும்
பிரிவினைக்கு வழிவகுத்ததும் விவரிக்கப்பட்டுள்ளன.
கலைச்சொற்கள்
அறப்போர்,
சத்தியாகிரகம் : satyagraha passive political
resistance advocated by Mahatma Gandhi
அரசியல் சட்ட விதிகளைப் பின்பற்றுபவர் : constitutionalist adherent of constitutional methods
சாதி, கொள்கை போன்றவற்றின் அடிப்படையில் வேறுபாடு காட்டுகிற : discrimination unjust or differential treatment of different categories of people, especially on grounds of caste, creed, etc
வற்புறுத்து,
நற்செயலுக்கேவு : exhort strongly encourage
or urge to do something
வகுப்புவாதம் : communalism allegiance to one's own
ethnic, religious or caste group rather than to wider society
தன்னாட்சியுரிமையுடைய குடியேற்ற நாடு : dominion self-governing territory
வாக்காளர் தொகுதி : electorate
all the people in a country or area who are
entitled to vote in an election
கடைசி அறிவிப்பு,
இறுதி எச்சரிக்கை : ultimatum
a final demand or statement of terms
தனிமைப்படுதல் : alienation
Isolation
கூட்டுச்சதி செய்தல்,
சதித்திட்டம் : conspiracy
a secret plan by a group to do something
unlawful or harmful