Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | சுருக்கமாக விடையளிக்கவும்.

தேசியம்: காந்திய காலகட்டம் | வரலாறு | சமூக அறிவியல் - சுருக்கமாக விடையளிக்கவும். | 10th Social Science : History : Chapter 8 : Nationalism: Gandhian Phase

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 8 : தேசியம்: காந்திய காலகட்டம்

சுருக்கமாக விடையளிக்கவும்.

சமூக அறிவியல் : வரலாறு : தேசியம்: காந்திய காலகட்டம் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள்: சுருக்கமாக விடையளிக்கவும்

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

 

1. ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி விவரிக்கவும்.

• பஞ்சாப் அமிர்தரஸில் உள்ள ஜாலியன் வாலாபாக்கில் 1919 ஏப்ரல் 13 ஆம் நாள் சீக்கியர்களின் அறுவடைத் திருநாள் பைசாகி அன்று பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு ஆயிரக்கணக்கில் மக்கள் குழுமியிருந்தனர்.

• இதனை அறிந்த ஜெனரல் டயர் ஆயுதமேந்திய வீரர்கள் மற்றும் பீரங்கியுடன் சுற்றி கண்மூடித்தனமாக சுட்டுப் படுகொலை செய்தார்.

• துப்பாக்கிச் சூட்டில் 379 பேர் உயிரிழந்தனர்; ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.

 

2. கிலாபத் இயக்கம் பற்றி குறிப்பு வரைக.

• முதல் உலகப்போரின் முடிவில் துருக்கியின் காலிப் கடுமையாக நடத்தப்பட்டார். .

• துருக்கி மற்றும் காலிப்பிற்கு ஆதரவுக்கரம் நீட்டும் பொருட்டு 1919 நவம்பர் மாதம் தில்லியில் கிலாபத் இயக்கம் நடைபெற்றது.

• துருக்கிக்கு ஆதரவாக பெரும் போராட்டம் முகமது அலி மற்றும் மௌலானா சௌகத் அலி சகோதரர்கள் தலைமையில் இந்த இயக்கம் நடைபெற்றது.

 

3. ஒத்துழையாமை இயக்கத்தை ஏன் காந்தியடிகள் திரும்பப் பெற்றார்?

• காந்தியடிகள் அறிவித்த ஒத்துழையாமை இயக்கத்தின் விளைவாக வரி கொடா இயக்கம் தீவிரமாக நடந்தது.

• இந்த நாடு தழுவிய போராட்டத்தில் வன்முறை பெரிதும் நிகழ்ந்தது.

• உத்திரப்பிரதேச சௌரி-சௌராவில் ஆங்கில காவல் நிலையம் தீயிட்டு கொளுத்தப்பட்டது.

• சௌரி - சௌரா சம்பவத்தைத் தொடர்ந்து காந்தியடிகள் இந்த இயக்கத்தைத் திரும்ப பெற்றார்.

 

4. சைமன் குழு புறக்கணிக்கப்பட்டது ஏன்?

• சர் ஜான் சைமன் என்பவரால் நியமிக்கப்பட்ட இந்தக் குழுவில் ஏழு உறுப்பினர்கள் இருந்தனர்.

• இந்தியர் எவரும் இக்குழுவில் இடம் பெறாமல் வெள்ளையர் மட்டுமே இருந்தனர்.

• இதனால் ஆத்திரமடைந்த இந்தியர்கள் ‘சைமனே திரும்பப் போ' என்ற கோஷத்துடன் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

5. முழுமையான சுயராஜ்ஜியம் என்றால் என்ன?

• டொமினியன் எனப்படும் தன்னாட்சியில் திருப்தி அடையாத காங்கிரஸார் சிலர் முழுமையான சுதந்திரம் வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர்.

• 1929 டிசம்பர் மாதம் லாகூரில் ஜவஹர்லால் நேரு தலைமையில் காங்கிரஸ் அமர்வு நடந்தது.

• இதில் முழுமையான சுயராஜ்ஜியம் என்ற சுதந்திரம் இலக்காக அறிவிக்கப்பட்டது.

 

6. பகத்சிங் பற்றி குறிப்பு வரைக.

• பொதுவுடைமை கருத்துகளால் ஈர்க்கப்பட்ட பஞ்சாப் பகத்சிங் இந்துஸ்தான் ராணுவ குடியரசை அமைத்தார்.

• 1929 மத்திய சட்டப்பேரவையில் வெடிகுண்டு மற்றும் துண்டுப் பிரசுரங்களை வீசி 'இன்குலாப் ஜிந்தாபாத்' என்ற முழக்கத்தை எழுப்பினார்.

• இதில் பகத்சிங் மற்றும் ராஜகுருவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

• பகத்சிங்கின் துணிச்சல் இந்திய இளைஞர்களைக் கவர்ந்து, பிரபலம் அடைந்தார்.

 

7. பூனா ஒப்பந்தத்தின் கூறுகள் யாவை?

• தனித்தொகுதிகள் பற்றிய கொள்கைகள் கைவிடப்பட்டன.

• ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க ஒத்துக் கொள்ளப்பட்டது.

• ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் 71 இல் இருந்து 148 ஆக அதிகரிக்கப்பட்டது.

• மத்திய சட்டப்பேரவையில் 18 சதவிகித இடங்கள் ஒதுக்கப்பட்டன.

 

Tags : India Nationalism: Gandhian Phase | History | Social Science தேசியம்: காந்திய காலகட்டம் | வரலாறு | சமூக அறிவியல்.
10th Social Science : History : Chapter 8 : Nationalism: Gandhian Phase : Answer the following briefly India Nationalism: Gandhian Phase | History | Social Science in Tamil : 10th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 8 : தேசியம்: காந்திய காலகட்டம் : சுருக்கமாக விடையளிக்கவும். - தேசியம்: காந்திய காலகட்டம் | வரலாறு | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 8 : தேசியம்: காந்திய காலகட்டம்