Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | விரிவாக விடையளிக்கவும்.

தேசியம்: காந்திய காலகட்டம் | வரலாறு | சமூக அறிவியல் - விரிவாக விடையளிக்கவும். | 10th Social Science : History : Chapter 8 : Nationalism: Gandhian Phase

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 8 : தேசியம்: காந்திய காலகட்டம்

விரிவாக விடையளிக்கவும்.

சமூக அறிவியல் : வரலாறு : தேசியம்: காந்திய காலகட்டம் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள்: VI. விரிவாக விடையளிக்கவும். VII. செயல்பாடுகள்

VI. விரிவாக விடையளிக்கவும்.

 

1. காந்தியடிகளை ஒரு மக்கள் தலைவராக உருமாற்றம் செய்ய உதவிய காரணிகள் என்ன என்று ஆராயவும்.

• தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் சமூக உரிமைகளுக்காக 20 ஆண்டுகள் போராடியது இந்திய விடுதலை போராட்டத்தில் புதிய எழுச்சியை ஏற்படுத்தியது.

• ஆங்கிலேய ஆட்சிக்கு அழுத்தம் கொடுக்க வன்முறை அல்லாத வழிகளைப் பின்பற்றியது. 

• படிக்கும் காலங்களில் இலண்டனில் அவருக்கு கிடைத்த அனுபவங்கள்.

• தென்னாப்பிரிக்க இனவேறுபாடு கொண்ட டர்பன் ரயில் சம்பவங்கள்.

• டால்ஸ்டாய், ஜான் ரஸ்கின் படைப்புகள் காந்தியடிகளை மாற்றியது.

• உண்மையின் வடிவமாக சத்தியாக்கிரக வழியில் போராடியது.

• இந்திய மக்களை சந்தித்து பயணம் மேற்கொண்ட போது தமிழக பயணம் அவரை வேட்டி மற்றும் சிறிய துண்டுவிற்கு மாற்றியது.

• பீகாரில் உள்ள சம்பரானில் ‘தீன் காதியா’ முறையை அகற்ற போராடி பண்ணை விவசாயிகளுக்கு வெற்றியைத் தேடித் தந்தது.

• ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம், வரிகொடா இயக்கம் என பல்வேறு இயக்கங்களை நடத்தி போராட்டத்தை தீவிரப்படுத்தியது.

• குஜராத் தண்டி உப்பு சத்தியாகிரக பாத யாத்திரை.

• தீண்டாமை - வகுப்புவாரி முறையை ஒழிக்க பாடுபட்ட நிகழ்ச்சிகள்.

• மதுப்பழக்கத்தை கைவிட போராட்டம் நடத்தியது.

• வெள்ளையனே வெளியேறு இயக்கம் மூலம் மாபெரும் மக்கள் தலைவராக தன்னை நிலை நிறுத்தினார்.

• இது போன்ற காரணிகள் காந்தியடிகளை ‘இந்தியாவின் தேசத்தந்தை' என்ற நிலைக்கு கொண்டு வந்தது.

 

2. காந்திய இயக்கத்தின் ஒரு சிறந்த உதாரணமான சட்டமறுப்பு இயக்கம் குறித்து விரிவாக ஆராயவும்.

• இந்தியாவிற்கு தன்னாட்சி பகுதி வழங்குவதில் திருப்தி அடையாத காங்கிரஸ் கட்சி 1930 ஜனவரி 26 ஆம் நாள் சுதந்திரநாளாக அடைவது என அறிவிக்கப்பட்டது.

• இதன்படி வரிகொடா இயக்கம், சட்டமறுப்பு இயக்கம் மூலமாகவும் வன்முறையற்ற முறையில் சுதந்திரம் அடைவது என குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.

• இந்த வரிகொடா இயக்கம் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு அங்கீகாரம் அளித்தது.

• பல கோரிக்கைகள் அடங்கிய மனுவை காந்தியடிகள் அரசப் பிரதிநிதியிடம் அளித்தார்.

• பதில் அளிக்காத நிலையில் காந்தியடிகள் சட்ட மறுப்பு இயக்கத்தை  தீவிரப்படுத்தினார்.

• உப்பு மீதான வரியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஒரு அறிவுப்பூர்வமான முடிவாகும்.

• காந்தியடிகள் 1930 மார்ச் மாதம் 12 ஆம் நாள் 78 பேர்களுடன் சபர்மதி ஆசிரமத்திலிருந்து தனது புகழ்பெற்ற தண்டியாத்திரையைத் தொடங்கினார்.

• காந்தியடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

• இந்த சட்ட மறுப்பு இயக்கம் மூலமாக நடந்த குஜராத் தண்டி யாத்திரை காந்தியடிகளை இந்திய அளவில் வெகுவாக உயர்த்தியது.

 

3. இந்தியாவின் பிரிவினைக்குப் பின்னால் இருந்த காரணங்களை விவாதிக்கவும்.

• 1905 ஆம் ஆண்டு கர்சன் பிரபுவின் வங்கப் பிரிவினை இந்தியப் பிரிவினைக்கு முதல் காரணியாக அமைந்தது.

• முதல் உலகப் போருக்குப் பின் துருக்கி இசுலாமிய மதத் தலைவருக்கு ஆதரவாக இந்தியாவில் தனியே கிலாபத் இயக்கம் ஆரம்பித்து போராடியது.

• மத்திய சட்டப் பேரவையில் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என முஸ்லிம் லீக் கோரியது.

• இந்து - முஸ்லிம் ஒற்றுமையின் தூதராக கருதப்பட்ட முகமது அலி ஜின்னா தனது நிலைப்பாட்டை மாற்றி முஸ்லிம்களுக்கு தனி நாடு வலியுறுத்தியது.

• 1932 இல் வெளி வந்த ராம்சே மெக் டொனால்டு வகுப்பு வாத அறிக்கை.

• இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பிய ஜின்னா 1934 இல் முஸ்லிம் லீக்கிற்கு புத்துயிர் ஊட்டி 1940களில் தனிநாடு கோரிக்கையை தீவிரப்படுத்தியது.

• இந்து மகா சபையும் முஸ்லிம் லீக்கும் நாட்டின் ஒற்றுமை தவிர்த்து ஒன்றுக்கொன்று எதிரான நடவடிக்கையில் இறங்கியது.

• இந்து - முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தி வந்த முகம்மது இக்பால் தனிநாடு கோரிக்கையை பிரச்சாரம் செய்தது.

• 1946 தேர்தல்களில் முஸ்லிம் லீக் தனது தனித் தொகுதியில் வெற்றி பெற்று தனது கோரிக்கைக்கு வலு சேர்த்தது.

• 1946 ஆம் ஆண்டு, ஆகஸ்டு 16 ஆம் நாளை நேரடி நடவடிக்கை நாளாக ஜின்னா அறிவித்தது.

• 1947 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் நாள் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இந்திய விடுதலைச் சட்டத்தை இயற்றி இந்தியாவை, இந்தியா - பாகிஸ்தான் என இரு நாடாக பிரித்து விடுதலை அறிவித்தது.

• இதுபோன்ற காரணிகளே இந்தியாவின் பிரிவினைக்கு பின்னால் இருந்த காரணிகளாகும்.

 

VII. செயல்பாடுகள்

1. ஒரு வரைபடத்தில் காந்திய இயக்கத்துடன் தொடர்புடைய முக்கிய இடங்களைக் குறிப்பிடுமாறும் அங்கு நடந்தது என்று ஓரிரு வாக்கியங்கள் எழுதுமாறும் மாணவர்களைக் கேட்டுக் கொள்ளலாம்.

ஆசிரியர் - மாணவர் செயல்பாடு

 

2. மாணவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு காந்தியடிகள், ஜின்னா, B.R. அம்பேத்கர். புரட்சிகர தேசியவாத தலைவர்கள், பொதுவுடைமைவாத தலைவர்கள் ஆகியோரின் கருத்துகள் பற்றி விவாதம் நடத்துமாறு கேட்டுக்கொள்ளலாம்.

ஆசிரியர் - மாணவர் செயல்பாடு

 

Tags : India Nationalism: Gandhian Phase | History | Social Science தேசியம்: காந்திய காலகட்டம் | வரலாறு | சமூக அறிவியல்.
10th Social Science : History : Chapter 8 : Nationalism: Gandhian Phase : Answer in detail India Nationalism: Gandhian Phase | History | Social Science in Tamil : 10th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 8 : தேசியம்: காந்திய காலகட்டம் : விரிவாக விடையளிக்கவும். - தேசியம்: காந்திய காலகட்டம் | வரலாறு | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 8 : தேசியம்: காந்திய காலகட்டம்