Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | தனிம வரிசை அட்டவணையில் இடம்

ஹைட்ரஜன் - தனிம வரிசை அட்டவணையில் இடம் | 11th Chemistry : UNIT 4 : Hydrogen

   Posted On :  24.12.2023 08:00 am

11 வது வேதியியல் : அலகு 4 : ஹைட்ரஜன்

தனிம வரிசை அட்டவணையில் இடம்

ஹைட்ரஜனின் எலக்ட்ரான் அமைப்பு 1s1 ஆகும். இது கார உலோகங்களின் பொதுவான இணைதிறன் கூட்டு எலக்ட்ரான் அமைப்பான ns1ஐ ஒத்திருக்கிறது.

தனிம வரிசை அட்டவணையில் இடம்

ஹைட்ரஜனின் எலக்ட்ரான் அமைப்பு 1s1 ஆகும். இது கார உலோகங்களின் பொதுவான இணைதிறன் கூட்டு எலக்ட்ரான் அமைப்பான ns1 ஒத்திருக்கிறது. மேலும் ஹைட்ரஜன் கீழ்க்கண்டவாறு கார உலோகங்களின் பண்புகளையும் ஒத்துள்ளது.

1) கார உலோகங்களைப் போன்றே (Na+, K+, Cs+) ஒற்றை நேர்மின் சுமை உடைய அயனியை (H+) உருவாக்குகிறது.

2) கார உலோகங்களைப் (NaX, Na2O, Na2O2, Na2S) போன்றே ஹைட்ரஜனும் ஹேலைடுகள் (HX), ஆக்சைடுகள் (H2O), பெராக்சைடுகள் (H2O2) மற்றும் சல்ஃபைடுகளை (H2S) உருவாக்குகின்றன.

3) கார உலோகங்களைப் போன்றே, ஹைட்ரஜனும் ஒடுக்க வினைபொருளாகச் செயல்படுகிறது.

கார உலோகங்களின் அயனியாக்கும் ஆற்றலின் மதிப்பு 377 முதல் 520 kJmol-1 வரை உள்ளது. ஆனால், ஹைட்ரஜனின் அயனியாக்கும் ஆற்றல், காரஉலோகங்கள் போலன்றி 1314 kJ mol-1 என்ற அதிக மதிப்பினைக் கொண்டுள்ளது.

ஹேலஜன்கள், ஹேலைடு அயனிகளை (x-) உருவாக்குவதைப்போல, ஹைட்ரஜனும் ஒரு எலக்ட்ரானை ஏற்றுக் கொண்டு ஹைட்ரைடு அயனியை (H-) உருவாக்குகிறது. இந்த அயனியின் எலக்ட்ரான் அமைப்பு, மந்த வாயுவான ஹீலியத்தின் எலக்ட்ரான் அமைப்பினை ஒத்துள்ளது. இருப்பினும், ஹைட்ரஜனின் எலக்ட்ரான் நாட்ட மதிப்பானது ஹேலஜன்களைவிடக் குறைவாக உள்ளது. ஹைட்ரஜன், ஹைட்ரைடு அயனியை உருவாக்கும் இயல்பானது ஹேலஜன்கள், ஹேலைடு அயனியினை உருவாக்கும் இயல்பினைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது. இதனை கீழ்க்கண்டுள்ள வினைகளைச் சான்றாகக் கொண்டு அறியலாம்.

1/2 H2 + e- H-   ΔH = + 36 kcal mol-1

1/2 Br2 + e- Br-  ΔH = - 55 kcal mol-1

ஹைட்ரஜனானது, கார உலோகங்கள் மற்றும் ஹேலஜன்கள் ஆகியவைகளுடன் ஒத்திருப்பதால், தனிம வரிசை அட்டவணையில் சரியானதொரு இடத்தை தீர்மானிப்பது கடினமாகும். எனினும் பெரும்பாலான சேர்மங்களில் ஹைட்ரஜன் +1 ஆக்ஸிஜனேற்ற நிலையை கொண்டிருப்பதால், IUPAC – அமைப்பால் வெளியிடப்பட்டுள்ள தனிம வரிசை அட்டவணையில் உள்ளவாறு கார உலோகங்களுடன் ஹைட்ரஜனை இடம்பெறச் செய்வது சரியானதாக இருக்கும்.

Tags : Hydrogen ஹைட்ரஜன்.
11th Chemistry : UNIT 4 : Hydrogen : Position in Periodic Table Hydrogen in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 4 : ஹைட்ரஜன் : தனிம வரிசை அட்டவணையில் இடம் - ஹைட்ரஜன் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 4 : ஹைட்ரஜன்