வேதிப்பண்புகள், பயன்கள் - கனநீர் | 11th Chemistry : UNIT 4 : Hydrogen

   Posted On :  24.12.2023 10:09 am

11 வது வேதியியல் : அலகு 4 : ஹைட்ரஜன்

கனநீர்

கன ஹைட்ரஜனின் ஆக்சைடானது கனநீராகும் (D2O).

கனநீர்

கன ஹைட்ரஜனின் ஆக்சைடானது கனநீராகும் (D2O). 5000 பங்குள்ள சாதாரண நீரில் ஒரு பங்கு கனநீர் காணப்படுகிறது. H2O வைப் போல D2O எளிதில் மின்னாற் பகுப்பிற்கு உட்படாது என்பதால் நீரினை மின்னாற்பகுத்தல் மூலம் கனநீரினைத் பெறலாம்.

D2O என்பது நிறமற்ற மணமற்ற சுவையற்ற ஒரு திரவமாகும். எனினும் நீர் மற்றும் கனநீருக்கு இடையே இயற் பண்புகளில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. இவ்வேறுபாடுகள் அட்டவணை 4.2ல் கொடுக்கப்பட்டுள்ளது.

உங்களுக்குத் தெரியுமா?

சோப்புகளுடன், கடினநீர் குறைவான நுரைத்தலைத் தருகிறது ஏன்?

கடின நீரில், சோப்புகளைப் பயன்படுத்தும் போது அவற்றின் தூய்மையாக்கும் திறன் குறைகிறது. சோப்புகள் என்பன நீண்ட சங்கிலியுடைய கொழுப்பு அமிலங்களின் (.கா. தேங்காய் எண்ணெய்) சோடியம் அல்லது பொட்டாசியம் உப்புகளாகும். சோப்பானது கடின நீரில் சேர்க்கப்படும் போது, கடின நீரில் உள்ள இரு இணைதிறன்கொண்ட மெக்னீசியம் அல்லது கால்சியம் அயனிகள் சோப்புடன் வினைபுரிந்து, சோப்பின், கால்சியம் மற்றும் மெக்னீசியம் உப்புகளாக வீழ்படிவாகிறது.

M2+ + 2RCOONa (RCOO)2M + 2 Na+ 

M = Ca or Mg 

R = C17H35


1. கன நீரின் வேதிப்பண்புகள்

ஹைட்ரஜனைக் கொண்டுள்ள சேர்மங்களை, D2O உடன் வினைப்படுத்தும்போது, ஹைட்ரஜனானது, டியூட்டிரியத்தால் பரிமாற்றம் செய்யப்படுகிறது.

2 NaOH + D2O 2 NaOD + HOD

HCl + D2O DCl + HOD

NH4Cl + 4D2O ND4Cl + 4 HOD

ஒரு சேர்மத்தில் காணப்படும் அயனித்தன்மையுடைய ஹைட்ரஜனைக் கண்டறிய இந்த பரிமாற்ற வினைகள் பயன்படுகின்றன.

எடுத்துக்காட்டாக, D2Oவை ஹைப்போ பாஸ்பரஸ் அமிலத்துடன் வினைப்படுத்தும்போது, டியூட்டிரியத்தால், ஒரே ஒரு ஹைட்ரஜன் மட்டும் பரிமாற்றம் செய்யப்படுகிறது. இவ்வினை, ஹைப்போ பாஸ்பரஸ் அமிலம் ஒரு காரத்துவமுடையது எனக் காட்டுவதாக அமைகிறது.

H3PO2 + D2O H2DPO2 + HDO

சில டியூட்ரியச் சேர்மங்களைத் தயாரிக்கவும் இவ்வினை பயன்படுகிறது.

Al4C3 + 12 D2O 4 Al(OD)3 + 3CD4

CaC2 + 2 D2O Ca(OD)2 + C2D2

Mg3N2 + 6 D2O 3 Mg(OD)2 + 2 ND3

Ca3P2 + 6 D2O 3 Ca (OD)2 + 2 PD3


2. கனநீரின் பயன்கள்:

அணுக்கரு உலைகளில் வேகமாகச் செல்லும் நியூட்ரான்களின் ஆற்றலை, கனநீர் குறைப்பதால் இது மட்டுப்படுத்தியாகப் பயன்படுகிறது.

கரிம வினைகளின் வினைவழி முறைகளை கண்டறிதல் மற்றும் உடல் செயல் வினைகளின் வழிமுறைகளை தீர்மானிப்பதில் இது சுவடறிவானாகப் பயன்படுகிறது.

அணுக்கரு உலைகளில் வெளிப்படும் வெப்ப ஆற்றலை உறிஞ்சும் தன்மையினை இது பெற்றிருப்பதால், குளிர்விப்பானாகப் பயன்படுகிறது.

Tags : Definition, Formula, properties, Uses வேதிப்பண்புகள், பயன்கள்.
11th Chemistry : UNIT 4 : Hydrogen : Heavy Water Definition, Formula, properties, Uses in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 4 : ஹைட்ரஜன் : கனநீர் - வேதிப்பண்புகள், பயன்கள் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 4 : ஹைட்ரஜன்