கன நீரின் வேதிப்பண்புகள்
ஹைட்ரஜனைக் கொண்டுள்ள சேர்மங்களை, D2O உடன் வினைப்படுத்தும்போது, ஹைட்ரஜனானது, டியூட்டிரியத்தால் பரிமாற்றம் செய்யப்படுகிறது.
2 NaOH + D2O → 2 NaOD + HOD
HCl + D2O → DCl + HOD
NH4Cl + 4D2O → ND4Cl + 4 HOD
ஒரு சேர்மத்தில் காணப்படும் அயனித்தன்மையுடைய ஹைட்ரஜனைக் கண்டறிய இந்த பரிமாற்ற வினைகள் பயன்படுகின்றன.
எடுத்துக்காட்டாக, D2Oவை ஹைப்போ பாஸ்பரஸ் அமிலத்துடன் வினைப்படுத்தும்போது, டியூட்டிரியத்தால், ஒரே ஒரு ஹைட்ரஜன் மட்டும் பரிமாற்றம் செய்யப்படுகிறது. இவ்வினை, ஹைப்போ பாஸ்பரஸ் அமிலம் ஒரு காரத்துவமுடையது எனக் காட்டுவதாக அமைகிறது.
H3PO2 + D2O → H2DPO2 + HDO
சில டியூட்ரியச் சேர்மங்களைத் தயாரிக்கவும் இவ்வினை பயன்படுகிறது.
Al4C3 + 12 D2O → 4 Al(OD)3 + 3CD4
CaC2 + 2 D2O → Ca(OD)2 + C2D2
Mg3N2 + 6 D2O → 3 Mg(OD)2 + 2 ND3
Ca3P2 + 6 D2O → 3 Ca (OD)2 + 2 PD3
அணுக்கரு உலைகளில் வேகமாகச் செல்லும் நியூட்ரான்களின் ஆற்றலை, கனநீர் குறைப்பதால் இது மட்டுப்படுத்தியாகப் பயன்படுகிறது.
கரிம வினைகளின் வினைவழி முறைகளை கண்டறிதல் மற்றும் உடல் செயல் வினைகளின் வழிமுறைகளை தீர்மானிப்பதில் இது சுவடறிவானாகப் பயன்படுகிறது.
அணுக்கரு உலைகளில் வெளிப்படும் வெப்ப ஆற்றலை உறிஞ்சும் தன்மையினை இது பெற்றிருப்பதால், குளிர்விப்பானாகப் பயன்படுகிறது.