Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | ஹைட்ரஜன் பெராக்சைடின் அமைப்பு
   Posted On :  24.12.2023 10:36 am

11 வது வேதியியல் : அலகு 4 : ஹைட்ரஜன்

ஹைட்ரஜன் பெராக்சைடின் அமைப்பு

வாயு நிலைமை மற்றும் திட நிலைமை ஆகிய இரு நிலைமைகளிலும் இம் மூலக்கூறு, சாய்வு வசஅமைப்பினைக் கொண்டுள்ளது.

ஹைட்ரஜன் பெராக்சைடின் அமைப்பு

வாயு நிலைமை மற்றும் திட நிலைமை ஆகிய இரு நிலைமைகளிலும் இம் மூலக்கூறு, சாய்வு வசஅமைப்பினைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆக்சிஜன் மீதுள்ள தனித்த எலக்ட்ரான்களுடன், OH பிணைப்பின் விலக்கு இடைவினை காரணமாக இவ்வமைப்பு ஏற்படுகிறது. மேலும், இது ஒற்றைப் பிணைப்பின் வழியே ஏற்படும் சுழற்சித் தடையினை பெற்றுள்ள சிறிய மூலக்கூறாகும்


படம் 4.5 H2O2 ன் அமைப்பு

H2O2 ஆனது ஒரே தளத்தில் அமையாத வடிவமைப்பினைப் பெற்றுள்ளது. வாயு நிலைமை மற்றும் திட நிலைமையில் மூலக்கூறு வடிவமைப்பின் பரிமாணங்கள் படம் 4.5ல் கொடுக்கப்பட்டுள்ளது. வடிவமைப்பினைப் பொருத்தவரையில், இரண்டு OH- தொகுதிகளும் ஒரே தளத்தில் அமையாத இருதள (dihedral) வடிவமைப்பின் மூலம் H2O2 வை குறிப்பிடலாம். பகுதியளவு திறந்து வைக்கப்பட்டுள்ள புத்தகத்தின், அச்சில் ஆக்சிஜன் அணுக்களும், இரு பக்கங்களிலும் ஹைட்ரஜன் அணுக்கள் இருப்பதாக இதன் வடிவமைப்பினை உருவகப்படுத்தலாம். திட நிலைமையில் உள்ள மூலக்கூறில் ஹைட்ரஜன் பிணைப்பின் காரணமாக இரு தளங்களுக்கும் இடையேயான கோணம் 90.2° ஆக குறைகிறது. மேலும் -O-O-H கோணம் 94.8° லிருந்து 101.9° ஆக அதிகரிக்கிறது.

11th Chemistry : UNIT 4 : Hydrogen : Structure of hydrogen peroxide in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 4 : ஹைட்ரஜன் : ஹைட்ரஜன் பெராக்சைடின் அமைப்பு - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 4 : ஹைட்ரஜன்