Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | ஹைட்ரஜன் பெராக்சைடின் பயன்கள்
   Posted On :  24.12.2023 10:34 am

11 வது வேதியியல் : அலகு 4 : ஹைட்ரஜன்

ஹைட்ரஜன் பெராக்சைடின் பயன்கள்

ஹைட்ரஜன் பெராக்சைடின் ஆக்சிஜனேற்றும் திறன் மற்றும் இதனால் உருவாகும் வினைபொருட்களான நீர் மற்றும் ஆக்சிஜனின் தீங்கற்ற தன்மையாலும், இது பல்வேறு பயன்களைக் கொண்டுள்ளது.

ஹைட்ரஜன் பெராக்சைடின் பயன்கள்

ஹைட்ரஜன் பெராக்சைடின் ஆக்சிஜனேற்றும் திறன் மற்றும் இதனால் உருவாகும் வினைபொருட்களான நீர் மற்றும் ஆக்சிஜனின் தீங்கற்ற தன்மையாலும், இது பல்வேறு பயன்களைக் கொண்டுள்ளது. நீரைச் சுத்திகரிக்கும் செயல்முறைகளில் மாசுக்களை ஆக்சிஜனேற்றம் அடையச் செய்யவும், வீரியம் குறைந்த புரைத்தடுப்பானாகவும், துணி, காகிதம், முடி பாதுகாப்பு தொழிற்சாலைகளில் வெளுக்கும் பொருளாகவும் பயன்படுகிறது.

பழங்கால ஓவியங்களில் வெண்மை நிறத்திற்கு பயன்படுத்தப்படும் நிறமிப் பொருளான Pb3 (OH)2 (CO3)2 ஆனது காற்றில் உள்ள ஹைட்ரஜன் சல்பைடுடன் வினைபுரிவதால் கருமை நிற லெட்சல்பைடு உருவாவதன் காரணமாக, வெண்மை நிறம் இழக்கப்படுகிறது. ஹைட்ரஜன் பெராக்சைடானது கருமைநிற லெட்சல்பைடினை வெண்மைநிற லெட்சல்பேட்டாக மாற்றுவதால், ஓவியங்களின் நிறம் மீளப் பெறப்படுகிறது.

PbS + 4 H2O2 PbSO4 + 4 H2O

11th Chemistry : UNIT 4 : Hydrogen : Uses of hydrogen peroxide in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 4 : ஹைட்ரஜன் : ஹைட்ரஜன் பெராக்சைடின் பயன்கள் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 4 : ஹைட்ரஜன்