சுழித்திறன் மின்னோட்டம் (Wattless current)
VAMS மற்றும் IAMS இடையே கட்டக்கோணம் - கொண்ட ஒரு மாறுதிசை மின்னோட்டச் சுற்றைக் கருதுக. கட்ட விளக்கப்படத்தில் (படம் 4.50) காட்டியுள்ளவாறு மின்னழுத்த வேறுபாடானது மின்னோட்டத்தைவிட Ø கோணம் முந்தி இருப்பதாகக் கொள்க.
தற்போது படம் 4.51 இல் காட்டியுள்ளவாறு IRMS ஆனது VRMS வழியே IRMS cos Ø எனவும், VRMS க்கு குத்தாக IRMS sinØ எனவும் இரு செங்குத்துக் கூறுகளாக பகுக்கப்படுகிறது.
(i) மின்னழுத்த வேறுபாட்டுடன் ஒரே கட்டத்தில்உள்ள மின்னோட்டத்தின் கூறு (IRMS cosØ) செயற்படு கூறு எனப்படுகிறது. இக்கூறினால் நுகரப்பட்ட திறன் = VRMSIRMS cosØ . எனவே இதை முழுத்திறன் கொண்ட மின்னோட்டம்(Wattful current) என அழைக்கப்படுகிறது.
(ii) மின்னழுத்த வேறுபாட்டுடன் கட்டக்கோணம்π/2 கொண்டுள்ள மற்றொரு கூறு (IRMS sinØ) ஆனது மின்மறுப்புக்கூறு எனப்படுகிறது. இக்கூறினால் நுகரப்பட்ட திறன் சுழியாகும். எனவே இது ‘சுழித்திறன்' மின்னோட்டம் (Wattless current) எனவும் அழைக்கப்படுகிறது. ஒரு மாறுதிசை மின்னோட்டச்சுற்றில் நுகரப்பட்ட திறன் சுழியெனில், அந்தச் சுற்றில் பாயும் மின்னோட்டம் சுழித்திறன் மின்னோட்டம் என அழைக்கப்படுகிறது. இந்த சுழித்திற மின்தூண்டல் அல்லது மின்தேக்கி பண்புள்ள சுற்றில் நிகழ்கிறது.