பைத்தான் - சரத்தில் உள்ள குறியுருக்களை அணுகுதல் | 12th Computer Science : Chapter 8 : Core Python : Strings and String Manipulation
சரத்தில் உள்ள குறியுருக்களை அணுகுதல்
சரம் ஒருமுறை வரையறுக்கப்பட்டு விட்டால், பைத்தான் சரத்தில்
உள்ள ஒவ்வொரு எழுத்துருவிற்கும் ஒரு சுட்டெண்ணை (Index) ஒதுக்கீடு செய்யும். சரத்தின்
உறுப்புகளை அணுகுவதற்கும், கையாளுடுவதற்கும் பயன்படும் சுட்டெண் கீழ்ஒட்டு
(Subscript) எனவும் அழைக்கப்படுகிறது. கீழ் ஒட்டானது நேர்மறை அல்லது எதிர்மறை முழு
எண்ணாக இருக்கலாம்.
நேர்மறை கீழ் ஒட்டு 0 என்பது சரத்தின் முதல் குறியுருவிற்கும்
n-1 கீழ் ஒட்டு சரத்தின் இறுதி குறியுருவிற்கும் ஒதுக்கப்படும். n என்பது சரத்தில்
உள்ள குறியுருக்களின் எண்ணிக்கை ஆகும். எதிர்மறை கீழ் ஒட்டு சரத்தின் இறுதி குறியுருவிலிருந்து
துவங்கி முதல் குறியுரு வரை பின்னோக்கு வரிசையில் - 1 முதல் ஒதுக்கப்படும்.
எடுத்துக்காட்டு
எடுத்துக்காட்டு 8.1 கொடுக்கப்பட்ட சரத்தில் உள்ள குறியுருக்களை அதன்
நேர்மறை கீழ்ஒட்டை கொண்டு அணுகும் நிரல்.
strl = input ("Enter a string:")
index=0
for i in str1:
print ("Subscript[",index,"]
: ", i)
index + = 1
வெளியீடு
Enter a string: welcome
Subscript [0] : w
Subscript [1]: e
Subscript (2): I
Subscript [3]: c
Subscript [4] : 0
Subscript [5] : m
Subscript [6]: e
எடுத்துக்காட்டு 8.2 கொடுக்கப்பட்ட சரத்தில் உள்ள குறியுருக்களை அதன்
எதிர்மறை கீழ்ஒட்டை கொண்டு அணுகும் நிரல்
strl = input ("Enter a string:")
index=-1
while index >= -(len(str1)):
print ("Subscript[",
index,"] : " + str1[index])
index += -1
வெளியீடு
Enter a string: welcome
Subscript [ -1 ]:e
Subscript [ -2 ] : m
Subscript [ -3 ] : 0
Subscript [ -4 ] : c
Subscript [ -5 ]: 1
Subscript [ -6 ]: e
Subscript [ -7 ] : w