பைத்தான் - பைத்தான் சரங்கள் மற்றும் சரங்களை கையாளுதல் - நினைவில் கொள்க | 12th Computer Science : Chapter 8 : Core Python : Strings and String Manipulation
நினைவில் கொள்க
• சரம் என்பது பைத்தானில் உள்ள ஒரு தரவு வகையாகும்.
• சர தரவுவகை மாறா தன்மையற்றது. அதாவது சரத்தை ஒரு முறை வரையறுத்த
பின்பு இயக்க நேரத்தில் அதை நம்மால் மாற்ற இயலாது. .
• சரங்களை மூன்று மேற்கோள் குறிகளுக்குள் வரையறுக்கலாம். மேலும்
இது பல வரி சரங்களை உருவாக்க உதவுகிறது.
• சரத்தில் உள்ள ஒவ்வொரு குறியுருவிற்கு பைத்தான் சுட்டு மதிப்புகளை
ஒதுக்கீடு செய்கிறது.
• கீழ் ஒட்டானது நேர்மறை அல்லது எதிர்மறை முழு எண்ணாக இருக்கலாம்
• மூலச்சரத்தில் உள்ள ஒரு துணைச்சரம் (சரத்தின் ஒரு பகுதி) துண்டு
(Slice) எனப்படும்.
• சரத்தினை பிரிக்கும் / துண்டாக்கும் செயல்பாட்டில் மூன்றாவது
அளபுருவையும் குறிப்பிட முடியும்.
• விடுபடு வரிசை பின் சாய்வுக் கோட்டை கொண்டு துவங்கும்.
• format() செயற்கூறானது சரங்களை வடிவமைக்கப் பயன்படும் முக்கிய
செயற்கூறாகும்.
• கொடுக்கப்பட்டுள்ள சரம் மற்றொரு சரத்தில் இடம்பெற்றுள்ளதா
என்பதை கண்டறிய in மற்றும் not in செயற்குறிகள் பயன்படுகின்றன