பைத்தான் - சர செயற்குறிகள் | 12th Computer Science : Chapter 8 : Core Python : Strings and String Manipulation
சர செயற்குறிகள்
பைத்தான் பின்வரும் செயற்குறிகளை வழங்குகிறது. இச்செயற்குறிகள் சரங்களை கையாள உதவுகிறது.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சரங்களை இணைக்கும் செயல்பாடு
சேர்த்தல் இணைத்தல் எனப்படும். கூட்டல் செயற்குறியானது சரங்களை பைத்தானில் இணைத்துக்
கொள்ளப் பயன்படுகிறது.
எடுத்துக்காட்டு
>>> "welcome" +
"Python"
'welcomePython'
ஏற்கனவே உள்ள சரத்தின் இறுதியில் மேலும் புதிய சரம் அல்லது சரங்களை
சேர்க்கும் செயல் சேர்த்தல் எனப்படும்.
+= செயற்குறி ஏற்கனவே உள்ள சரத்தின் இறுதியில் புதிய சரத்தினை
சேர்க்க பயன்படுகிறது.
எடுத்துக்காட்டு
>>> strl="Welcome to
"
>>> strl+="Learn
Python"
>>> print (str1)
Welcome to Learn Python
பெருக்கல் செயற்குறி கொடுக்கப்பட்ட சரத்தினை பல தடவைகள் வெளிப்படுத்த
பயன்படுகிறது. எடுத்துக்காட்டு
>>> strl="Welcome"
>>> print (str1*4)
Welcome Welcome Welcome Welcome
மூலச்சரத்தில் உள்ள ஒரு துணைச்சரம் (சரத்தின் ஒரு பகுதி) துண்டு
(Slice) எனப்படும். மூலச் சரத்திலிருந்து [ ] என்ற செயற்குறி மற்றும் சுட்டு அல்லது
கீழ்ஒட்டு மதிப்புகளைக் கொண்டு துணைச் சரம் உருவாக்கப்படும். இதனால் [ ] செயற்குறி
துண்டு அல்லது பிரித்தல் செயற்குறி எனப்படும். துண்டு அல்லது பிரித்தல் செயற்குறியை
கொண்டு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணைச் சரங்களை / (துண்டுகளாக) மூலச் சரத்திலிருந்து
பிரிக்க முடியும்.
பிரிப்பதற்கான
தொடரியல்
str[start:end]
Start என்பது துவக்க சுட்டு மதிப்பு ஆகும். மேலும் end என்பது
சரத்தில் உள்ள இறுதி குறியுருவின் சுட்டு மதிப்பு ஆகும். பைத்தான் குறிப்பிடப்பட்டுள்ள
இறுதி சுட்டு எண் மதிப்பிலிருந்து ஒரு மதிப்பை குறைத்து எடுத்துக் கொள்ளும்.
எடுத்துக்காட்டாக, முதல் 4 குறியுருக்களை மட்டும் சரத்திலிருந்து
பிரிக்க விரும்பினால் சுட்டு எண் மதிப்பை 0வில் இருந்து 5 என குறிப்பிட வேண்டும். ஏனெனில்
பைத்தான் இறுதி மதிப்பிலிருந்து ஒரு மதிப்பை குறைத்து மட்டுமே கருத்தில் கொள்ளும்.(இறுதி
மதிப்பு -1)
எடுத்துக்காட்டு
1: சரத்தில் இருந்து ஒரு குறியுருவை மட்டும் பிரித்தல்
>>> str1="THIRUKKURAL"
>>> print (str1[0])
T
எடுத்துக்காட்டு
2: சுட்டு எண் மதிப்பு 0 முதல் 4 வரை உள்ள துணைச் சரத்தை பிரித்தல்
>>> print (str1[0:5])
THIRU
எடுத்துக்காட்டு
3: துவக்க சுட்டு எண் மதிப்பு குறிப்பிடப்படாமல் 0 முதல் 4 வரை சுட்டெண்ணைக் கொண்ட
துணைச் சரத்தை பிரித்தல்
>>> print (str1[:5])
THIRU
எடுத்துக்காட்டு
4: இறுதி சுட்டு எண் மதிப்பு குறிப்பிடப்படாமல் 6 முதல் 10 வரை சுட்டெண்களாகக் கொண்ட
துணைச் சரத்தை பிரித்தல்
>>> print (str1[6:])
KURAL
எடுத்துக்காட்டு 8.3 for மடக்கை பயன்படுத்தி துணைச் சரத்தை பிரிக்க
துண்டாக்கும் நிரல்
strl="COMPUTER"
index=0
for i in strl:
print (str1[:index+1])
index+=1
வெளியீடு
C
CO
COM
COMP
COMPU
COMPUT
COMPUTE
COMPUTER
சரத்தினை பிரிக்கும் / துண்டாக்கும் செயல்பாட்டில் மூன்றாவது
அளபுருவையும் குறிப்பிட முடியும். சரத்தில் குறிக்கப்பட்டுள்ள முதல் குறியுரு அணுகப்பட்டத்திலிருந்து
எத்தனை எண்ணிக்கையிலான குறியுருக்கள் முன்னோக்கி செல்ல வேண்டும் என்பதை குறிக்க மூன்றாம்
அளபுரு பயன்படுகிறது. மூன்றாம் அளபுருவின் கொடாநிலை மதிப்பு 1 ஆகும்.
எடுத்துக்காட்டு
>>> strl = "Welcome to
learn Python"
>>> print (str1[10:16])
learn
>>> print (str1[10:16:4])
r
>>> print (str1[10:16:2])
er
>>> print (str1[::3])
Wceoenyo
குறிப்பு:
பைத்தான்
இறுதி சுட்டெண் மதிப்பிலிருந்து ஒரு மதிப்பை குறைத்து எடுத்துக் கொள்ளும் என்பதை நினைவில்
கொள்க.
மூன்றாவது அளபுருவில் எதிர்மறை மதிப்பையும் பயன்படுத்த முடியும்.
எதிர்மறை மதிப்பை குறிப்பிட்டால் சரமானது பின்னோக்கு வரிசையில் அச்சிடப்படும்.
எடுத்துக்காட்டு
>>> strl = "Welcome to
learn Python"
>>> print(str1[::-2])
nhy re teolw